ஒருவருக்கு கடன் பிரச்சினை வருவதற்கு இதெல்லாம் காரணமாக இருக்கலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. கடன் பிரச்சினை தலைதூக்க காரணம் நீங்கள் செய்யும் இந்த தவறுகளாக கூட இருக்கலாம். கடன் வாங்கும் பொழுதும், கொடுக்கும் பொழுதும் நேரம் பார்த்து செய்ய வேண்டும். கடன் வாங்குவது மட்டுமல்ல, நகைகளை அடகு வைத்தாலும் நேரம் பார்க்க வேண்டும். ஒருவருக்கு கடன் ஏற்பட என்ன காரணம்? என்பதை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
பொதுவாகவே கடன் வாங்கும் நேரம் என்பது மிகவும் முக்கியம். நீங்கள் தவறான நேரத்தில் கடன் வாங்க நேர்ந்தால், திரும்பத் திரும்ப கடன் வாங்கக் கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். அவசர தேவைக்கு நேரம் பார்க்காமல் கடன் வாங்குவதால் தான் பலரும் கடன் பிரச்சனைக்கு ஆளாக இருக்கிறது என்று சாஸ்திரம் கூறுகிறது.
குளிகை நேரம் என்பது ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப நமக்கு பெற்று தரக் கூடியது. உதாரணத்திற்கு குளிகை நேரத்தில் நகை வாங்கினால், திரும்பத் திரும்ப நகை வாங்கக் கூடிய சூழ்நிலை நமக்கு உருவாகும் என்பது நம்பிக்கை. அது போல குளிகை நேரத்தில் கடன் வாங்கினால் நீங்கள் திரும்பத் திரும்ப கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். எனவே நீங்கள் கடன் வாங்கும் பொழுது குளிகை நேரமாக இல்லாமல் இருக்கிறதா? என்பதை காலண்டரில் பார்க்க வேண்டும். அவசர தேவைக்கு பணம் வாங்க செல்லும் பொழுது இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம், அதனால் தான் கடன் பிரச்சனையில் சிக்குகிறோம்.
வாங்கிய கடனை திருப்பி கொடுக்கும் பொழுது குளிகை நேரம் பார்த்து கொடுக்க வேண்டும். ஒருமுறை குளிகை நேரத்தில் கடன் தொகையிலிருந்து சிறு தொகையை கொடுத்து பாருங்கள் அடிக்கடி நீங்கள் கடன் தொகையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து வந்து, முழு கடனையும் சீக்கிரமாகவே அடைத்து விடுவீர்கள்.
அது போல நகைகளை அடமானம் வைக்கும் பொழுது குளிகை நேரத்தில் அடமானம் வைக்கக் கூடாது. மேலும் வெள்ளிக்கிழமையில் தெரியாமல் கூட நகைகளை அடமானம் வைக்கக் கூடாது. பொதுவாகவே அடகு கடைகள் வெள்ளிக்கிழமையில் செயல்படுவது கிடையாது, ஆனால் அவசர தேவைக்கு இப்போதெல்லாம் நாள், கிழமை பார்க்காமல் பேங்கில் கொண்டு போய் அடகு வைக்கிறார்கள். பேங்கிற்கு வெள்ளிக்கிழமை எல்லாம் லீவு இல்லை என்று கொண்டு போய் வைத்தால், மீண்டும் மீண்டும் உங்களுக்கு நஷ்டம் தான் ஏற்படுமே தவிர, பிரச்சனை தீராது, கடன் கண்டிப்பாக தீராது.
இதையும் படிக்கலாமே:
ஆயுத பூஜை அன்று பின்பற்ற வேண்டியவை
செவ்வாய்க் கிழமையில் நகைகளை கழட்டக்கூடாது. செவ்வாய்க் கிழமையில் நகை அடமானம் வைப்பவர்கள் முந்தைய நாளே நகைகளை கழட்டி வைத்து விட வேண்டும். செவ்வாய்க் கிழமையில் பெண்கள் கழுத்தில் இருந்து நகைகளை கழட்டி வைத்தால், அது குடும்பத்திற்கு உகந்தது அல்ல! போட்டிருக்கும் நகைகளை கழட்டி சுத்தம் செய்கிறேன் என்று செவ்வாய்க் கிழமையில் செய்யக் கூடாது. தங்க நகைகளை செவ்வாய்க்கிழமையில் கழட்டினால், கடன் பிரச்சினைகள் உருவாகும். புது நகைகளை வாங்கக் கூடிய யோகம் வராது, நகைகள் சேராது.