- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆயுத பூஜை அன்று பின்பற்ற வேண்டியவை

ஆயுத பூஜை அன்று பின்பற்ற வேண்டியவை

- Advertisement -

ஆயுத பூஜை என்றாலே முதலில் நம் நினைவுக்கு வர வேண்டியது வீட்டை சுத்தம் செய்யவது. ஆயுத பூஜைக்கு வீட்டில் இருக்கும் எல்லா பொருட்களையும் துடைத்து சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து எல்லா ஆயுதத்திற்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் நம் பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கு, ஒரு நாள் நன்றி தெரிவிக்க கூடிய நாள் என்றால், அது இந்த ஆயுத பூஜை தான்.

ஆயுத பூஜைக்கு முன்னாள் நம் வீட்டில் இருக்கும் தேவையற்ற குப்பை கூலங்களை தூக்கி வெளியில் போட்டு வீட்டை சுத்தம் செய்திருப்போம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றலை எப்படி விரட்டுவது. அதற்கும் ஒரு வழி உள்ளது. ஆயுத பூஜை அன்று இந்த ஒரு பொருளை புதுசாக வாங்கி வந்து பூஜையறையில் வைத்து வழிபாடு செய்தால் வீட்டில் இருக்கும் கெட்டது அனைத்தும் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும். அது என்ன பொருள். ஆயுத பூஜைக்கு பூஜை அறையில் வைக்கவே கூடாத பொருள் என்றால் அது எந்த பொருள். ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

ஆயுத பூஜையில் பின்பற்ற வேண்டியவை

இந்த ஆயுத பூஜைக்கு இரும்பினால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு ஆயுதத்தை உங்கள் வீட்டிற்காக வாங்க வேண்டும். சின்னதாக அடுப்பங்கரையில் பயன்படுத்தும் கத்தி இரும்பில் வாங்கினாலும் போதும். அல்லது கொடுவா அல்லது அருவாமனை இப்படி ஏதாவது ஒரு பொருள் வாங்கலாம். சமையலறைக்கு தேவையான பொருளை மட்டும் தான் வாங்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.

உங்கள் வீட்டின் மற்ற பயன்பாட்டிற்கு வேறு ஏதாவது இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் தேவை என்றாலும் ஆயுத பூஜை அன்று அந்த பொருளை புதுசாக வாங்கி அதற்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து பூஜை அறையில் நீங்கள் வைக்கும் ஆயுதத்தோடு இந்த புது இரும்புபொருளையும் வைத்து பூஜை செய்தால் உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியானது வெளியேற்றப்படும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. இது ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டிருக்கும் தாந்திரீக பரிகாரம். நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பாருங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -

பூஜை அறையில் வைக்க கூடாத அந்த ஒரு பொருள் என்ன

நாளைய தினம் நம் வீட்டு பூஜை அறையில் நாம் பயன்படுத்தும் கத்தி ஆழாக்கு, அஞ்சரை பெட்டி, புத்தகங்கள், இது போன்ற பொருட்களை வைத்து வழிபாடு செய்வோம். உங்கள் வீட்டில் படிக்கின்ற பிள்ளைகள் இல்லை படிக்கின்ற புத்தகங்கள் இல்லை என்றாலும், எக்காரணத்தைக் கொண்டும், நாளிதழ்களை சாமிக்கு முன்பாக வைத்து கும்பிடக் கூடாது.

ஆனால் நம் வீட்டில் இருக்கும் இறை வழிபாடு சம்பந்தப்பட்ட புத்தகங்களை சுவாமி முன்பு வைத்து வழிபாடு செய்யலாம். கந்த சஷ்டி கவசம், அம்மன் பாடல்கள், அம்மன் போற்றிகள், பகவத் கீதை, ராமாயணம் மகாபாரதம் போன்ற புத்தகங்கள் இருந்தால் அதை பூஜை அறையில் வைத்து வணங்கலாம். அடுத்தபடியாக ரொம்ப நாட்களாக பயன்படுத்தாத துருப்பிடித்த இரும்பு பொருட்களை கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து நாளைய தினம் வழிபாடு செய்யக் கூடாது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். துருப்பிடித்த இரும்பு சாமான்களை கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட வேண்டாம்.

- Advertisement -

இது தவிர தெய்வீகமான ஆன்மீக ரீதியாக சரஸ்வதி தேவிக்கு உகந்த ஒரு சில பொருட்களை நம் வீட்டிற்குள் நாளை தினம் கொண்டு வருவது விசேஷ பலனை கொடுக்கும் அந்த வகையில் வெள்ளை தாமரை, தாமரை மணி விதைகள், மயில் இறகு, அன்னப்பறவையின் புகைப்படம், அல்லது வீணை பொம்மை, வீணை புகைப்படம், இப்படி ஏதாவது ஒரு பொருளை நாளைய தினம் நீங்கள் புதுசாக வாங்கி உங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து வைப்பது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொண்டு வந்து சேர்க்கும்.

இதையும் படிக்கலாமே: பணம் பெருக லட்சுமி பூஜை செய்யும் முறை

மேலே சொன்ன அத்தனை பொருட்களையும் வாங்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது. ஏதாவது ஒரு பொருள் வாங்கி உங்கள் வீட்டை நாளைய தினம் அலங்கரித்து பாருங்கள் மன நிம்மதி நிறைவாக கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றலாம். ஆயுத பூஜையில் அந்த சரஸ்வதியின் தேவியின் அருளை பரிபூரணமாக பெற வேண்டுதல் வைத்து இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்