- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் சுமையை தீர்க்கும் தோரண கணபதி வழிபாடு

கடன் சுமையை தீர்க்கும் தோரண கணபதி வழிபாடு

- Advertisement -

முழுமுதற் கடவுளாகவும், கலியுக தெய்வமாகவும், கண் கண்ட தெய்வமாகவும், திரும்பும் திசையெல்லாம் வீற்றிருக்கக்கூடிய தெய்வமாகவும் திகழக்கூடியவர்தான் விநாயகர் பெருமான். விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நாம் செய்யக்கூடிய காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும் என்று அனைவருக்கும் தெரியும். தொட்ட காரியம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்றால் விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுவது உண்டு.

அதனால்தான் ஒவ்வொரு நல்ல காரியத்தை நாம் செய்வதற்கு முன்பாகவும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்துவிட்டு பிறகு தான் ஆரம்பிப்போம். அந்த அளவிற்கு சிறப்பு மிகுந்த விநாயகர் பெருமானை நாம் பல காரியங்களுக்காக வழிபடுவது உண்டு. அதிலும் குறிப்பாக சதுர்த்தி திதியில் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு மிகுந்த விநாயகப் பெருமானை நாம் கடன் பிரச்சினை தீருவதற்காக எந்த முறையில் வீட்டிலேயே வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தோரண கணபதி வழிபாடு

விநாயகப் பெருமானுக்கு 32 வடிவங்கள் இருக்கிறது என்றும் ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அந்த ஒவ்வொரு வடிவத்தை நாம் வழிபடும் பொழுதும் நமக்கு ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் தீரும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நம்முடைய கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவக் கூடிய விநாயகராக திகழ்பவர்தான் தோரண கணபதி. தோரண கணபதி என்பவர் கையில் தந்தத்தை வைத்துக் கொண்டு இருப்பவர். அப்படி தந்தத்தை வைத்துக்கொண்டு இருக்கும் கணபதியால் மட்டுமே நம்முடைய ருணத்தை சரி செய்ய முடியும். அதாவது நம்முடைய கடன் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த தோரண கணபதி மிகவும் அரிதாக ஒரு சில ஆலயங்களில் மட்டுமே வீற்றிருப்பார் என்பதால் நாம் வீட்டிலேயே அவரை எப்படி எளிமையாக வழிபாடு செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

பொதுவாக தோரண கணபதி அம்மனின் ஆலயத்தில் வீற்றிருப்பார் என்றும் கையில் தந்தத்தை வைத்திருப்பார் என்றும் தாமரை மலர் மேல் அமர்ந்திருப்பார் என்றும் தோரண வாயிலை பார்த்தவாறு இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அதனால் நாம் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய விநாயகரின் படத்தையோ சிலையோ அம்மனுக்கு அருகில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அந்த அம்மன் பார்வதி, மாரியம்மன், காளியம்மன் என்ற சக்தி வாய்ந்த அம்மனின் அருகில் இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். சாந்தமான அம்மனின் அருகில் வைக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்படி வைத்துவிட்டு அவருடைய பாதத்தில் இரண்டு அட்சதைகளை தோரண கணபதியே போற்றி என்று மனதார கூறி வைத்துவிட்டு நாம் வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நம்மால் இயன்ற எளிமையான நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும். விநாயகருக்கு முன்பாக மூன்று அகல்விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பிறகு விநாயக பெருமானுக்கு செம்பருத்தி மலர்களை சாற்றி அருகம்புல்லை வைத்து நம்முடைய கடன் பிரச்சினைகள் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி வேண்டி முடித்த பிறகு தோரண கணபதியின் ஸ்லோகம் ஒன்று இருக்கிறது. அந்த ஸ்லோகத்தை மூன்று முறை கூற வேண்டும். இந்த வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நேரத்தில்தான் செய்ய வேண்டும். தொடர்ந்து ஆறு வாரங்கள் இந்த வழிபாட்டை வீட்டிலேயே மேற்கொள்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்களுடைய கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழியை விநாயகப் பெருமான் காட்டுவார்.

ஸ்லோகம்

சக்தி மேகலா வாசம் சகல கல்யாண மூர்த்தி
அங்குச பாச அஸ்தம் கிரீட மகுட தாத்ரிம்
அஷ்டலட்சுமி சகிதம் தோரண கோபுர நேத்திரம்
ருணமோசன கணேஷம் நமாமி
ஸதா பிரசன்னம்

இதையும் படிக்கலாமே:செல்வம் பெருக சரஸ்வதி பூஜை
வீட்டிலேயே இந்த முறையில் தோரண கணபதியை தொடர்ச்சியாக ஆறு வாரங்கள் வழிபாடு செய்பவர்களுக்கு கடன் பிரச்சினை முற்றிலும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்