நவராத்திரியில் ஒன்பது நாளும் முப்பெரும் தேவியரை வழிபடுவதற்கான சிறந்த நாட்கள் முதல் மூன்று நாட்கள் துர்கை இருந்தாலும் அடுத்த மூன்று நாட்களில் மகாலட்சுமி தாயார் கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தாயாரையும் வணங்க வேண்டும். அப்படி வணங்கும் பட்சத்தில் நம் குடும்பத்திற்கு அருளால் எந்த தீங்கும் நேராமல் நிம்மதியுடன் வாழ முடியும் அதேபோல் மகாலட்சுமி தாயார் அருளால் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கான யோகம் கிடைக்கும் சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதத்தால் ஞானத்துடனும் வாழும் யோகம் கிடைக்கும். இந்த மூன்றுடன் ஆண்டு முழுவதும் பணவரவிற்கு பஞ்சமில்லாமல் வாழ்வதற்கான ஒரு வழிபாட்டையும் இந்த நாளில் நாம் செய்யலாம். அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.
பணவரவிற்கு ஆயுத பூஜை வழிபாடு
பொதுவாக சரஸ்வதி பூஜை அன்றைய தினத்தை ஆயுத பூஜை என்றும் சொல்வார்கள். அன்றைய தினத்தில் நாம் ஆயுதத்தில் வைத்து வழிபாடு செய்வோம் பிறகு ஏன் சரஸ்வதி பூஜை என்று கேள்வி பலருக்கும் இடலாம் நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவையாருக்கு உகந்த நாள் அதனால் தான் அந்த தினத்தை சரஸ்வதி பூஜை என்றும் தொழில் செய்பவர்கள் வியாபாரம் செய்பவர்கள் தங்களுடைய தொழில் சம்பந்தமான பொருட்களை வைத்து அன்றைய தினம் வழிபாடு செய்ய வேண்டும் ஆகையால் அன்றைய தினத்தை ஆயுத பூஜை என்றும் சொல்வார்கள்.
பூஜைக்கான பெயர்கள் எதுவாக இருந்தாலும் நமக்கு கிடைப்பது முப்பெரும் தேவியேறி அருள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த வழிபாட்டை நாளைய தினத்தில் ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரமாக பார்த்து எப்பொழுது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் தவறில்லை. இந்த வழிபாடு செய்வதற்கு அன்னைக்கி நல்ல மனம் மிக்க பூக்களை மாலையாக சுடலாம் சரஸ்வதி தேவியர் படம் இருந்தால் அதற்கு வெள்ளை நிறத்திலான பூக்களை வைப்பது சிறப்பு.
அதே போல் நெய்வேத்தியமாக சக்கரை பொங்கல் வெள்ளை மூக்கடலை போன்றவற்றை வைத்து வணங்க வேண்டும். பழவகைகளில் உங்களுக்கு என்ன பழங்களை வைத்து வணங்கு முடியுமோ அதை செய்யலாம் இவற்றையெல்லாம் வைத்து வழிபாடு செய்யலாம் தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் தொடர்பான பொருட்களை வைத்து வணங்கலாம் நாளைய தினமே கூட குழந்தைகளுக்கு படிப்பு தொடர்பான பொருட்களை வைத்து வணங்கலாம் தவறில்லை.
இப்படி நீங்கள் வைத்து வழிபடக் கூடிய பொருள்களில் முக்கியமாக வைத்து வழிபட வேண்டியது நாவல் பழ கொட்டை. அந்த காலத்தில் நாவல் பழம் ஆனது அனைத்து இடங்களிலும் கிடைக்கும் இந்த நாவல் பழத்தை வாங்கி அதன் மேல் உள்ள பழத்தை எடுத்து விட வேண்டும். கொட்டையை மட்டும் சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எச்சில் படாமல் இருக்க வேண்டும் கவனமாக செய்யுங்கள். இந்தப் பழக்கொட்டைகளை பூஜையறையில் ஒரு தட்டிலோ, சிறிய கிண்ணத்திலோ வைத்து அன்னையின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள்.
நீங்கள் வைக்கும் நெய்வேத்தியங்கள் பழங்கள் இவற்றுடனும் நாவல் பழத்தில் சேர்த்து வைக்கலாம். அது மேலும் விசேஷ பலனை தரும் இப்போது மகாலட்சுமி தாயார் துர்க்கை சரஸ்வதி தாயார் அனைவரையும் மனதார வேண்டிக் கொண்டு உங்களுடைய வீட்டில் இருக்கும் பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
சிறிது நேரம் கழித்து ஒரு வெள்ளை நிற துணியில் இந்த நாவல் பழ கொட்டைகளை வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள் இந்த மூட்டையை நீங்கள் பணம் வைக்கும் இடம் அல்லது பீரோ போன்றவற்றில் வைக்கலாம் அல்லது ஒன்று இரண்டு கொட்டைகளை மட்டும் சிறிய முடிச்சாக கட்டி உங்களுடைய மணி பரிச்சிலும் வைத்துக் கொள்ளலாம். இதை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது அப்படியே இருக்கலாம்.
இதையும் படிக்கலாமே:சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிப்பாட்டு முறை
இந்த நாவல் பழக்கொட்டையானது பணத்தை ஈர்த்து தரும் வல்லமை உடையதாக சொல்லப்படுகிறது ஆகையால் தான் விநாயகருக்கு உரிய வழிபாட்டில் கூட இந்த நாவல் பழத்திற்கு முக்கிய இடம் தரப்படுகிறது. நீங்களும் இந்த ஆயுத பூஜை வழிபாட்டில் இந்த ஒரு பொருளை சேர்த்து வைத்து வழிபாடு செய்து செல்வ நிலையை உயர்த்திக் கொள்ளலாம் இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை உடன் செய்து நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு கொள்ளலாம்.