- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமகாலக்ஷ்மி வீட்டிற்கு வர வாசலில் போட வேண்டியது

மகாலக்ஷ்மி வீட்டிற்கு வர வாசலில் போட வேண்டியது

- Advertisement -

ஒரு மனிதனுக்கு தேவையான அத்தனையும் இருந்தும் அதை தக்க வைத்து கொள்ள பரம்பொருள் அருளும், பரமேஸ்வரி அருளும் தேவை. பெயர், புகழ், அந்தஸ்து, செல்வம், பொருள், பணம் போன்ற அனைத்தும் நம்மிடம் இருந்தாலும், அது நிரந்தரமாக எப்பொழுதும் நம்மிடம் இருக்கக் கூடியவை அல்ல! எப்பொழுது வேண்டுமானாலும் அது வெளியில் சென்று விடும். இவைகள் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல், நம்மிடமே நிரந்தரமாக இருப்பதற்கு நாம் தினமும் போட வேண்டிய கோலம் என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒருவருக்கு பெயர், புகழ், பணம், செல்வம் அனைத்தும் கிடைப்பதற்கும் இந்த கோலத்தை தினமும் தலைவாசலில் போடலாம். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நாம் செய்வது வீட்டை பெருக்கி சுத்தம் செய்து தலை வாசலில் கோலம் போடுவது தான். அப்படி போடும் கோலமானது, மகாலட்சுமியின் பாதமாக இருந்தால் நம்மிடம் இருக்கும் எந்த ஒரு விஷயமும் நம்மை விட்டு வெளியில் செல்லாது என்பது ஐதீகம்.

- Advertisement -

காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடும் முன் முதலில் தலைவாசலில் அல்லது வாசலின் மேற்புற படி பகுதியில் இந்தக் கோலத்தை நடுவில் வரைய வேண்டும். படத்தில் காட்டியுள்ள படி மகாலட்சுமி பாத கோலத்தை வரைய வேண்டும். முற்காலங்களில் மக்கள் வாசல் தெளித்து சாணியை மொழுகி வாசலில் முதலில் மகாலட்சுமி பாதத்தை வரைந்த பின்பு தான், சாதாரண கோலத்தை போடுவார்கள்.

இதனால் செல்வ வளமானது பெருகும். பெயர், புகழ், ஒழுக்கம், மன அமைதி, செல்வம், பணம், பொருள் என்று எதுவும் நம்மை தேடி வரும். இருக்கின்றவை யாவும் பெருகும், வெளியில் செல்லாது என்பது மக்களுடைய நம்பிக்கையாக இருந்தது. இந்த மகாலட்சுமி பாதம், மகாலட்சுமி தாயார் உடைய 5 விரல்களையும், பாதங்களையும் அப்படியே நம் வீட்டிற்கு வரவழைக்கக் கூடிய அதிசக்தி வாய்ந்த கோலமாகும்.

- Advertisement -

இந்த மகாலட்சுமி பாதம் வரையும் பொழுது மகாலட்சுமி தாயார் வீட்டிற்கு வருவதாக நம்பிக்கை உண்டு. ஒவ்வொரு நாள் காலையிலும் யாருடைய வீட்டு வாசலில் குப்பைகள் இல்லாமல் கூட்டப்பட்டு சுத்தம் செய்து, அழகிய வண்ண கோலங்கள் போடப்பட்டு இருக்கிறதோ, அந்த வீட்டிற்குள் மகாலட்சுமி நுழையும் என்பது இந்துக்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. மகாலட்சுமி தாயார் பாத கோலத்தை வரையும் பொழுது மகாலட்சுமி தலை வாசலில் எப்பொழுதும் வீட்டிலேயே தங்குவதாக அமையும். இதனால் நாம் வாங்கிய பெயர், புகழ், செல்வம் போன்றவை எவையும் வீட்டை விட்டு வெளியில் செல்லவே செல்லாது.

இதையும் படிக்கலாமே:
தடையில்லா வெற்றி பெற தலைவாசல் வழிபாடு

நல்ல நாள், விசேஷங்களின் பொழுது மட்டுமல்லாமல் தினமும் இந்த மகாலட்சுமி பாதத்தை வரைந்து வருபவர்களுக்கு நிச்சயம் வாழ்க்கையில் எல்லாவிதமான சுகங்களும், செல்வங்களும் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த பாத கமலங்களை வரையும் பொழுது பச்சரிசி மாவை பயன்படுத்துங்கள். பச்சரிசியில் விஷ்ணு வாசம் செய்கிறார். பச்சரிசியில் கோலம் போடும் பொழுது, சிறிய உயிர்கள் அதை உண்ண வரும். அவை பசியாறுவதால், நம் முன் ஜென்ம பாவங்களும் கழியும் என்பது ஐதீகம். வறுமையில் இருப்பவர்கள் கூட வசந்த மாளிகைக்கு கொண்டு செல்லக்கூடிய அற்புதமான கோலம் இதுவாகும். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இதுபோல மகாலட்சுமி பாத கோலத்தை வரைந்து பாருங்கள், வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை நீங்களே உணருவீர்கள்.

சற்று முன்