- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதடையில்லா வெற்றி பெற தலைவாசல் வழிபாடு

தடையில்லா வெற்றி பெற தலைவாசல் வழிபாடு

- Advertisement -

தலைவாசல் என்பது குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி குடிகொண்டுள்ள ஒரு அற்புதமான இடமாகும். நம் வீட்டிலேயே மிக முக்கியமான அம்சமாக திகழும் இந்த தலைவாசலுக்கு, தினமும் பூஜைகள் செய்து வருபவர்கள் யோக பலன்களை அடைவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. யாராலும் தோற்கடிக்க முடியாத அளவிற்கு வெற்றியை படிப்படியாக இவர்கள் வாழ்க்கையில் பெற்று வருவார்கள். நீங்களும் வெற்றியை உங்கள் வசமாக்கிட உங்கள் வீட்டில் தலைவாசலுக்கு தினமும் எப்படி பூஜை செய்ய வேண்டும்? என்பதை தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நம் முன்னோர்கள் வாழ்ந்த பழங்காலங்களில் வீடு கட்டும் பொழுதே வாசலுக்கு இரண்டு புறமும் மாடம் வைத்து கட்டுவதை பார்த்திருப்போம். விளக்கு வைக்கும் இந்த மாடம் சூரியன் மற்றும் சந்திரனை குறிக்கிறது. தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து மாடத்தில் விளக்கு ஏற்றி வந்தால் குடும்பத்தில் சகல விதமான பிரச்சனைகளும் தீரும். கணவன் மனைவிக்குள் சண்டைகள் ஏற்படவே செய்யாது.

- Advertisement -

இப்போதெல்லாம் யாரும் மாடத்தில் விளக்கு ஏற்றுவது கிடையாது. அதுவும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து ஏற்ற சொன்னால் அவ்வளவுதான். பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்ற முடியாவிட்டாலும், மாலை வேளையில் அந்தி சாயும் முன்னர் தினமும் இருபுறமும் விளக்கு ஏற்றி வைத்தால், எதிலும் நீங்கள் தோற்க மாட்டீர்கள். மரத்தால் ஆன மாடங்கள் கிடைத்தால் வாங்கி ஆணி அடித்துக் கொள்ளுங்கள். மாடத்தில் குபேர விளக்கு, அடுக்கு விளக்கு, அகல் விளக்கு போன்றவற்றை ஏற்றலாம்.

குபேர விளக்கு வியாழன் கிழமைகளிலும், அகல் விளக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏற்றுவது விசேஷம். வாரம் ஒரு முறை தலைவாசலுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். தலைவாசலின் நடுப்புற பகுதியில் காலில் மிதிபடும்படி மஞ்சள் மற்றும் குங்குமங்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். தலைவாசலுக்கு இருபுறமும் வாசனை மிகு வெட்டிவேர் மாலையை தொங்க விடுங்கள்.

- Advertisement -

வெட்டிவேர் மாலை தலைவாசலில் இருந்தால் வெற்றி நம்மை தேடி தானாகவே வந்து சேரும். இது மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த ஒரு வாசம் ஆகும். இதை அழகுக்காக மட்டுமல்லாமல் ஆன்மீக நோக்கத்துடனும் பக்தியுடன் செய்பவர்களுக்கு அபரிமிதமான பலன்களை பெற்று தரும். வெட்டிவேர் மட்டும் அல்லாமல் நெல்மணிகளையும், நெல்மணி தோரணங்களையும் தலைவாசலில் மேல்புற பகுதியில் மாட்டி வைக்கலாம். விவசாயிகளுக்கு நெல்மணிகள் தான் கடவுளாக இருக்கும். இந்த நெல்மணிகளை அழகாக கோர்த்து தோரணம் போல தலைவாசலில் தொங்க விட்டால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும். வறுமை என்பது ஏற்படாது, ஈரேழு சந்ததியினருக்கும் வறுமை இல்லாத வாழ்வு அமையும்.

இதையும் படிக்கலாமே:
அகத்தியர் அருளிய விநாயகர் மூல மந்திரம்

தலைவாசலில் பச்சரிசியால் கோலம் போடுங்கள். இது தோஷங்களை போக்கும். கோலம் போடும் பொழுது காவி பயன்படுத்துவது விசேஷமானது. காவியை இருபுறமும் பயன்படுத்தி அழகான கோலம் போட்டு பாருங்கள், வீடு அவ்வளவு அழகாக தெரியும். காவி போட்டு கோலம் போடுபவர்களுக்கு தெய்வீக சிந்தனை அதிகரிக்கும், இதனால் மனதில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றாது தடுக்கலாம். தலைவாசலில் தூசி படியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி எண்ணெய் போட்டு சத்தமில்லாமல் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வீட்டிற்கு வாசல் என்பது தான் முதல் பார்வை, எனவே தலைவாசலில் இருக்கும் மகாலட்சுமியை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்பவர்களுக்கு தோல்வி ஏற்படாது, வெற்றி மட்டுமே படிப்படியாக வந்து சேரும்.

சற்று முன்