- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுரட்டாசி பௌர்ணமி அம்பிகை வழிபாடு

புரட்டாசி பௌர்ணமி அம்பிகை வழிபாடு

- Advertisement -

பௌர்ணமி என்றாலே அது மிகவும் சிறப்புக்குரிய நாளாகவே கருதப்படுகிறது. அதுவும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமிக்கு அதிக பலன் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் புரட்டாசி மாதம் முழுவதும் நாம் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு இருப்போம் என்பதுதான். புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபடுவதைப் போலவே அம்பிகையும் வழிபாடு செய்வதற்காக தான் நவராத்திரி திருவிழாவில் நடைபெறுகிறது என்று பலருக்கும் தெரியும். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று அம்பிகை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு சகல நன்மைகளும் உண்டாகும். அந்த வழிப்பாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

புரட்டாசி பௌர்ணமி அம்பிகை வழிபாடு

பொதுவாக பௌர்ணமி தினத்தன்று அம்பிகை வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாகவே திகழ்கிறது. அன்றைய தினத்தில் பலரும் தங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். அதே போல் அருகில் இருக்கக்கூடிய அம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யும் வழக்கமும் பலருக்கும் இருக்கும். அதுவும் குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று அம்பிகையை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும் என்றே கூறலாம். அந்த வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை அக்டோபர் மாதம் 17ஆம் தேதி செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதற்கு முன்பாக அம்பிகைக்காக சில பூஜை பொருட்களை வாங்கி வைக்க வேண்டும். அந்த பொருட்கள் சிவப்பு கண்ணாடி வளையல் இரண்டு டசன், தாழம்பூ குங்குமம், மஞ்சள் தூள், தாலிக்கயிறு, மல்லிகைப்பூ, கருகமணி போன்றவற்றை வாங்கிக் கொள்ள வேண்டும். 17 ஆம் தேதி காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த வழிபாட்டை செய்வது என்பது மிகவும் விசேஷம் அன்று வீட்டில் இருக்கக்கூடிய அம்பிகையின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். மாரியம்மன் படத்தை உபயோகப்படுத்த வேண்டாம்.

ஒரு மனையை வைத்து அதன் மேல் சிவப்பு நிற துணியை விரித்து அம்பிகையின் படத்தை வைக்க வேண்டும். அந்த அம்பிகைக்கு முன்பாக ஒரு தட்டில் நாம் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் கண்ணாடி வளையல், குங்குமம், மஞ்சள், கருகமணி, தாலிக்கயிறு, மல்லிகைப்பூ இவை அனைத்தையும் வைக்க வேண்டும். அம்பிகையின் படத்திற்கு சிவப்பு நிற மலர்களை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பிறகு அம்பிகைக்கு முன்பாக ஒரு மண் தட்டை வைத்து அந்த தட்டிற்கு மேல் ஆறு வெற்றிலையை வட்ட வடிவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த தீபத்தில் ஒரு ஏலக்காய், இரண்டு கிராம்பு, சிறிது பச்சை கற்பூரத்தையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றி முடித்த பிறகு அம்பிகைக்கு நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல் வைக்க வேண்டும். பிறகு அபிராமி அந்தாதி, மகிஷாசுரமர்த்தினி பாடல் போன்றவற்றை பாராயணம் செய்ய வேண்டும். கடைசியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்த விட வேண்டும். இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அம்பிகையின் பரிபூரணமான அருள் கிடைக்க பெற்று பௌர்ணமி நிலவு எந்த அளவிற்கு பிரகாசமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கையும் பிரகாசமாக அமையும்.

இதையும் படிக்கலாமே:பணத்தை ஈர்க்கும் பௌர்ணமி பரிகாரம்

இந்த முறையில் பௌர்ணமி தினத்தன்று அம்பிகையை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கஷ்ட காலம் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சற்று முன்