- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோவிலுக்கு சென்றும் மூலவரை தரிசிக்க முடியலையா?

கோவிலுக்கு சென்றும் மூலவரை தரிசிக்க முடியலையா?

- Advertisement -

சில பேர் கோவிலுக்கு சென்றாலும் கூட்டமாக இருக்கிறது என்று திரும்பி வந்து விட கூடிய நிலையை அடைவார்கள். கோவிலுக்கு செல்லும் எல்லா நேரத்திலும் மூலவரை தரிசனம் செய்து விட முடிவதில்லை. அதற்கு பதிலாக மூலவரை தரிசனம் செய்த பலன் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கோவிலுக்கு செல்வது அங்குள்ள மூலவரை தரிசனம் செய்து, பிரகாரத்தை சுற்றி வந்து முழு பலன் அடைவதற்காக தான், ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக நம்மால் சில சமயம் மூலவரை தரிசனம் செய்ய முடியாமல் போனால், கோவிலில் இருந்து அப்படியே வெளியில் வரக்கூடாது. கோவில் வரை சென்ற பின்பு பிரகாரத்திற்குள் நுழையாமல் வீட்டிற்கு திரும்பவும் கூடாது. மூலவரை தரிசனம் செய்ய முடியாவிட்டாலும், பிரகாரத்திற்குள் நுழைந்து கொடி மரத்தை தொட்டு வணங்கி விட்டு வாருங்கள்.

- Advertisement -

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். மூலவரை தரிசனம் செய்ய முடியாதவர்கள் கண்டிப்பாக அந்த கோவிலின் கோபுரத்தை கண் குளிர உச்சிவரை தரிசனம் செய்ய வேண்டும். கோபுரத்தை பார்த்து கைகூப்பி வணங்கியபடி ரெண்டு நிமிடமாவது தரிசனம் செய்ய வேண்டும். கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கலசம் ஒவ்வொன்றையும் கண்களால் பார்வையிட வேண்டும். ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ள இக்கலசத்தை தரிசனம் செய்வதன் மூலம் புண்ணிய பலன்கள் ஏராளம் நமக்கு கிடைக்கும்.

ஒரு நாளில் 108 கலசத்தை தரிசனம் செய்பவர்களுக்கு மோட்சம் கிட்டுவதாக ஒரு நம்பிக்கை உண்டு. ஒவ்வொரு கோபுரத்திலும் ஒவ்வொரு எண்ணிக்கையிலான கலசங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் வைத்து, பல கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள 108 கலசங்களை, ஒரு நாளில் நீங்கள் தரிசனம் செய்தால் அதை விட சிறந்த புண்ணியம் எதுவுமே இல்லை என்று புனித நூல்கள் கூறுகிறது.

- Advertisement -

வீட்டில் கூட நீங்கள் அரிசி அளக்கும் பொழுது கோபுரம் போல் அளந்து எடுக்க வேண்டும். கோபுரத்தை தட்ட கூடாது என்பார்கள். கோபுரம் போல அரிசியை குவித்து அளவையில் அளந்து எடுக்க வேண்டும், இதனால் வறுமை ஏற்படாது. தலை தட்டினால் வறுமை உண்டாகும் என்பார்கள். அரிசி பானையில் இருந்து அரிசியை தலை தட்டாமல் கோபுரம் போல குவித்து எடுத்து சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அரிசி அன்னபூரணி என்பதால் அளவையை கலசம் போன்றும், அரிசியை கோபுரம் போன்று குவித்து எடுக்க கோவில் போல வர்ணிப்பார்கள். இதனால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும். அன்னபூரணி அருளால் வறுமை இல்லாமல், உணவிற்கு பஞ்சம் இல்லாமல் நல்ல வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதையும் படிக்கலாமே:
கடன் வட்டியை தீர்க்கும் தேய்பிறை சஷ்டி வழிபாடு

கோவிலுக்கு சென்றதும் கூட்டமாக இருந்தால் உள்ளே ஒரு முறை சென்று விட்டு பின்னர் வெளியே வாருங்கள். பிறகு கோபுரத்தை நன்கு தரிசனம் செய்துவிட்டு உங்கள் பிரார்த்தனையை மனதார பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அங்குள்ள ஏழை எளியவர்கள், வயதானவர்கள் போன்றவர்களுக்கு உங்களால் முடிந்த தானம் செய்யுங்கள். குறிப்பாக ஒருவருக்காவது உணவு பொட்டலம் ஒன்றை வாங்கி கொடுங்கள் பெரும் புண்ணியம் சேரும்.

சற்று முன்