- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் வட்டியை தீர்க்கும் தேய்பிறை சஷ்டி வழிபாடு

கடன் வட்டியை தீர்க்கும் தேய்பிறை சஷ்டி வழிபாடு

- Advertisement -

செவ்வாய்க்கிழமை என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்த கிழமை என்பது நம் அனைவருக்கும் தெரியும். செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தையும் நீக்கக்கூடிய நாளாகவும் செவ்வாய்க்கிழமை திகழ்கிறது. அன்றைய தினத்தில் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்வதன் மூலம் முருகப்பெருமானின் அருளால் செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமையோடு முருகப்பெருமானுக்கு உகந்த தேய்பிறை சஷ்டி இருக்கிறது, இதோடு சேர்த்து கரி நாளும் வருகிறது. இந்த மூன்றும் சேர்ந்து வரக்கூடிய அற்புத நாளில் கடன் பிரச்சனை தீர்வும், வட்டி தொல்லை போகவும் செய்யக்கூடிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தேய்பிறை சஷ்டி வழிபாடு

ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. அந்த நாளில் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் கரி நாள் என்பது நம்மிடம் இருக்கக்கூடிய கெடுதல்களை நீக்கக்கூடிய நாளாக திகழ்கிறது. மேலும் அன்றைய தினத்தில் சுபகாரியங்கள் எதையும் செய்யக்கூடாது என்றும் கூறப்படுகிறது. நாம் செய்யக்கூடிய செயல்கள் நம்மை விட்டு நீங்க கூடிய நாள் என்பதால் கரிநாள் என்பது கடன் பிரச்சினை தீர்வதற்கு உதவிகரமாக இருக்கும்.

- Advertisement -

முருகப்பெருமானுக்கு உகந்த தேய்பிறை சஷ்டி என்பது நம்மிடம் இருக்கக் கூடிய கஷ்டங்களை நீக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் கரிநாளும் தேய்பிறை சஷ்டியும் செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து வரக்கூடிய இந்த அற்புதமான நாளை தவறவிடாமல் கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை நாம் மதியம் 12 மணியிலிருந்து 1:30 மணிக்குள் தான் செய்ய வேண்டும்.

எத்தனை பேருக்கு நாம் வட்டி கட்டி கொண்டு இருக்கிறோமோ அத்தனை எண்ணிக்கையில் ஏதாவது ஒரு சிறிய தொகையாவது தனித்தனியாக எடுத்து வைக்க வேண்டும். அதற்கு மேல் புனுகு, ஒரு துண்டு பச்சை கற்பூரம், ஒரு சிறிய துண்டு வெல்லம் இவற்றை வைக்க வேண்டும். உதாரணத்திற்கு மூன்று பேருக்கு நாம் வட்டி கட்டிக் கொண்டிருக்கின்றோம் என்றால் அந்த மூன்று நபர்களின் பெயரையும் சொல்லி தனித்தனியாக ஏதாவது ஒரு தொகையை எடுத்து வைக்க வேண்டும். அந்த ஒவ்வொரு தொகையின் மீதும் புனுகு, பச்சை கற்பூரம், ஒரு சிறிய துண்டு வெல்லம் இவற்றை வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு முருகப்பெருமானுடைய வேல் இருக்கும் பட்சத்தில் அதை கையில் வைத்துக்கொண்டு முருகப்பெருமானுக்குரிய மந்திரங்களை கூறலாம். வேல் இல்லாத பட்சத்தில் விபூதியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு முருகப்பெருமானின் மந்திரத்தை கூற வேண்டும். இப்படி மந்திரத்தை கூறி முடித்த பிறகு அந்த தொகையின் மீது இருக்கக்கூடிய வெல்லத்தை ஒவ்வொன்றாக எடுத்து நம்முடைய வலது கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே சென்று கிழக்கு பார்த்தவாறு நின்று கொண்டு இந்த கடன் பிரச்சனை என்னை விட்டு முற்றிலும் நீங்க வேண்டும் என்று மனதார முருகப் பெருமானை நினைத்து வேண்டி கால் படாத இடத்தில் அந்த வெல்லத்தை போட்டு விட வேண்டும்.

இப்படி ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக செய்து முடித்துவிட்டு, முடிந்தால் அந்த நேரத்திற்குள் யாரிடம் கடன் வாங்கினோமோ அவர்களுக்கு அந்தத் தொகையை திருப்பிக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அந்த பணத்தை தனியாக எடுத்து வைத்து எப்பொழுது வட்டி கட்டுவீர்களோ அப்பொழுது அந்த பணத்தையும் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:திருமண வரம் தரும் பிரம்மச்சாரி விரதம்

இந்த எளிமையான பரிகாரத்தை செய்பவர்களுக்கு கடன் பிரச்சினை முற்றிலும் நீங்கும் வட்டி கட்ட வேண்டும் என்ற நிலையே இருக்காது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்