- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகொடுத்த பணம் திரும்ப கிடைக்க பஞ்சமி பரிகாரம்

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க பஞ்சமி பரிகாரம்

- Advertisement -

நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை தீர்த்து நன்மைகளை தரக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக திகழ்பவள்தான் வாராகி அம்மன். வாராஹி அம்மனுக்குரிய திதியாக கருதப்படுவது பஞ்சமி திதி. பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாவதோடு எதிர்மறை சக்திகளும் எதிரிகள் தொல்லையும் முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பஞ்சமி திதி அன்று கொடுத்த பணம் திரும்ப கிடைப்பதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க பஞ்சமி பரிகாரம்

உக்கிர தெய்வங்களின் வரிசையில் வாராகி அம்மன் இருக்கிறாள். அவளை முழு மனதோடு யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு தன்னுடைய கோபத்தை தனித்து அன்பான முறையில் அனைத்து விதமான நன்மைகளையும் தருவார் என்று கூறப்படுகிறது. தாயுள்ளம் கொண்ட வாராஹி அம்மனை நினைத்து பல வேண்டுதல்களை நாம் செய்வதுண்டு பல பரிகாரங்களையும் செய்வதுண்டு. அந்த வகையில் கொடுத்த பணம் திரும்ப கிடைப்பதற்கும் திருமணத்தடை நீங்கவும் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை பஞ்சமி திதி அன்று காலையிலேயே செய்து விட வேண்டும். இதற்கு நமக்கு ஒரு கண்ணாடி கிண்ணம் ஒன்று வேண்டும். அடுத்ததாக சுத்தமான தண்ணீர் வேண்டும். அடுத்ததாக வெட்டிவேரும், நல்ல எலுமிச்சம் பழமாக ஒரு எலுமிச்சம் பழமும் வேண்டும். பஞ்சமி திதி என்பது இந்த மாதம் 21ஆம் தேதி காலை 9:31 மணிக்கு ஆரம்பிக்கிறது. அந்த நேரத்தில் நம்முடைய வீட்டு நிலை வாசலை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து எப்பொழுதும் நிலை வாசலை அலங்காரம் செய்வதுபோல் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு கண்ணாடி கிண்ணத்தை எடுத்து அதன் நிறைய தண்ணீர் ஊற்றி அதற்கு மேல் வெட்டிவேரை போட வேண்டும். அந்த வெட்டிவேருக்கும் மேல் எலுமிச்சம் பழத்தை போட்டு நிலை வாசலின் வலது புறத்தில் வைத்து விட வேண்டும். வெட்டிவேர் கிடைக்காத பட்சத்தில் அருகம்புல்லை போட்டும் எலுமிச்சம் பழத்தை வைக்கலாம். அன்றைய நாள் முழுவதும் இந்த எலுமிச்சம் பழம் அந்தக் கிண்ணத்தில் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக எலுமிச்சம் பழத்தை எடுத்து நான்காக நறுக்கி அதற்குள் குங்குமத்தை வைத்து வீட்டை வலம் இருந்து இடமாகவும் இடமிருந்து வலமாகவும் மூன்று முறை சுற்றி கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். பிறகு இதில் இருக்கக்கூடிய வெட்டிவேரை எடுத்து நன்றாக நிழலில் உலர்த்தி காய வைத்து பொடி செய்து சாம்பிராணியுடன் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கண்ணாடி கிண்ணத்தில் இருக்கக்கூடிய தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும் என்றும் அதே சமயம் கொடுத்த பணம் எந்தவித தங்கு தடையும் இன்றி திரும்ப கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:பிரகாசமான வாழ்க்கையை தரும் தீபலட்சுமி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை நினைத்து செய்பவர்களுக்கு வாராகி அம்மனின் அருளால் அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்