இந்து சமயத்தை பின்பற்றக்கூடிய ஒவ்வொருவருடைய இல்லத்திலும் கண்டிப்பான முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் பழக்கம் என்பது இருக்கும். ஒரு சிலர் தினமும் காலையிலும் மாலையிலும் தீபமேற்றி வழிபடுவார்கள். இன்னும் சிலரோ காலையில் மட்டும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ செவ்வாய், வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். இப்படி வாரத்தில் ஒருமுறையாவது வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யாமல் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட தீபத்தில் இருக்கக்கூடிய ஒளியை தான் நாம் தீபலட்சுமி என்று கூறுகிறோம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தீபலட்சுமியை வழிபாடு செய்யும் முறையை பற்றி நான் பார்க்கப் போகிறோம்.
தீபலட்சுமி வழிபாடு
ஒரு தீபத்தை நாம் ஏற்றும் பொழுது அந்த தீபத்தை சுற்றி இருக்கக்கூடிய இருள் நீங்கி அந்த இடமே பிரகாசமாக திகழும். அதேபோல்தான் நாம் தீபமேற்றி வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டம் என்னும் இருள் நீங்கி பிரகாசமான வாழ்க்கை நமக்கு அமையும் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த தீபத்தில் எழுந்தருளக் கூடிய லட்சுமியை தான் நாம் தீபலக்ஷ்மி என்று கூறுகிறோம். இந்த தீபலட்சுமியை நாம் வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கும் நம்முடைய பரம்பரைக்கும் கஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும் என்று கூறலாம்.
இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளோ செய்ய வேண்டும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாக தனித்து இருக்கக்கூடிய அம்பாளின் படம் எதுவாக இருந்தாலும் அதை வைத்து அதற்கு முன்பாக ஒரு குத்து விளக்கை வைக்க வேண்டும். இந்த குத்து விளக்கிற்கு சந்தனம் குங்குமம் வைத்து மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பிறகு இதில் நெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் இவை மூன்றில் ஏதாவது ஒன்றை ஊற்ற வேண்டும்.
நெய் ஊற்றி வழிபாடு செய்யும் பட்சத்தில் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். நல்லெண்ணெய் ஊற்றி வழிபாடு செய்யும் பட்சத்தில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஆரோக்கியம் மேம்படும். இலுப்பை எண்ணெய் ஊற்றி வழிபாடு செய்யும் பட்சத்தில் திருமண தடை நீங்கும், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். இதில் வாழைத்தண்டு திதி அல்லது தாமரைதண்டு திரி இவை இரண்டில் ஏதாவது ஒரு திரியை போட்டு சிறிய அளவில் எறிவதுபோல தீபம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இப்படி நாம் தொடர்ச்சியாக ஏழு வாரங்கள் அல்லது 49 வாரங்கள் தீபலட்சுமி வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் நம் பரம்பரைக்கு எந்தவித கஷ்டமும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:பிரச்சனைகள் வெளியேற விநாயகர் வழிபாடு
இந்த எளிமையான தீப வழிபாட்டை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய இருள் என்னும் கஷ்டம் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.