- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுறிக்கோளில் வெற்றி அடைய திலகம்

குறிக்கோளில் வெற்றி அடைய திலகம்

- Advertisement -

எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையிலும் ஒரு குறிக்கோள் இருக்கும். அவரவர் இருக்கக்கூடிய துறைகளில் அவரவர் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பார்கள். உதாரணத்திற்கு ஆசிரியர் தொழில் செய்பவர்கள், வக்கீல் தொழில் செய்பவர்கள், அல்லது கடை வைத்திருப்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள் என்று அவர்கள் என்ன செய்கிறார்களோ அதில் காலூன்றி ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஆனால் சில பேருடைய முயற்சிகள் குளத்தில் போட்ட கல்லு போல, ஒரே இடத்தில் தேங்கி நிற்கும். முன்னேற்றம் என்பதே வராது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் உங்களுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல வேண்டும் என்றால், என்னுடைய குறிக்கோளில் நான் சீக்கிரம் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தால் பின் சொல்லக் கூடிய எளிமையான பரிகாரம் உங்களுக்காக மட்டும் தான்.

- Advertisement -

வாழ்வில் வெற்றி அடைய பரிகாரம்

இந்த திலகத்தை தினமும் நெற்றியில் வைத்து சென்றாலே போதும். உங்களுடைய வேலையில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். உங்களுடைய தொழிலில் காலூன்றி நிற்க உண்டான அத்தனையும் நல்லதும் நடக்கும். உங்களை தூண்டி விடக்கூடிய அந்த திலகத்தை எப்படி தயார் செய்வது. இதற்கு நமக்கு இரண்டே பொருள் தேவை. மாதுளை பழத்தின் சாறு, வசம்பு பொடி.

வசம்பு பொடியை இரண்டு சிட்டிகை கையில் வைத்துக்கொண்டு, மாதுளை பழ முத்துக்களில் இருந்து நசுக்கி சாறு இரண்டு சொட்டு அதில் விட்டு, குழைத்து இதை எடுத்து உங்களுடைய நெற்றிப்போட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் இதை வைத்துவிட்டு உங்களுடைய குறிக்கோளை அடைய ஒரு 5 நிமிடம் மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்யுங்கள். குலதெய்வத்தை நினைத்து தியானம் செய்யுங்கள். பிறகு உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி கிடைக்க துவங்கும்.

- Advertisement -

படிக்கும் பிள்ளைகள், வேலைக்கு செல்பவர்கள், சொந்த வியாபாரம் செய்பவர்கள் என்று யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம் தவறு கிடையாது. இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கி, தொடர்ந்து 48 நாட்கள் இந்த திலகத்தை நெற்றியில் வைத்து, மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்பவர்களுக்கு நிச்சயம் குறிக்கோளில் வெற்றி கிடைக்கும்.

அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஐந்து நிமிடம் இந்த தியானத்தை முடித்துவிட்டு நெற்றியில் இருக்கும் திலகத்தை துடைத்து விட்டு நீங்கள் வெளியில் செல்லலாம். ஏனென்றால் நெற்றியில் இப்படி ஒரு திலகத்தை வைத்துக்கொண்டு வெளியில் சென்றால் ஆயிரம் கேள்விகள் எழும். அதற்கெல்லாம் நம்மால் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது.

இதையும் படிக்கலாமே: கடனை அடைக்க ஆஞ்சநேயர் பரிகாரம்

இந்த திலகம் வெறும் ஐந்து நிமிடத்தில் உங்களுக்கு இவ்வளவு பெரிய ஆற்றலை கொடுக்கிறது என்றால், இந்த பரிகாரத்திற்கு பின்னால் இருக்கும் சக்தி எவ்வளவு பெரியது என்று நீங்களே யோகித்துக் கொள்ளலாம். மிக மிக மிக எளிமையான பரிகாரம், நம்பிக்கை இருந்தால் மட்டும் முயற்சி செய்யுங்கள். 48 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்