- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடனை அடைக்க ஆஞ்சநேயர் பரிகாரம்

கடனை அடைக்க ஆஞ்சநேயர் பரிகாரம்

- Advertisement -

கடன் என்ற இந்த மூன்று எழுத்து வார்த்தை ஒரு மனிதனுடைய நிம்மதியை நிரந்தரமாக நிலை குளித்து விடும். அதிலும் ஒரு சில நேரங்களில் ஒரு சில மனிதர்களிடம் நாம் வாங்கக்கூடிய இந்த கடன் அவ்வளவு எளிதில் அடையாது. எவ்வளவோ பணம் சம்பாதிப்போம், சேமித்து வைப்போம். ஆனால் அந்த குறிப்பிட்ட கடனை மட்டும் திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும்.

அதற்கான வட்டி தொகையும் அதிகமாக இருக்கும். நாம் கடனை திருப்பிக் கொடுக்க எடுத்து வைத்த பணத்திற்கு வேறு ஒரு செலவு வரிசை கட்டி நிற்கும். இப்படிப்பட்ட சூழ்நிலை உங்களுக்கு நிலவினால், பல நாட்களாக திரும்பவும் அடைக்கவே முடியாத கடனை அடைக்க வேண்டிய சூழ்நிலையில் நீங்கள் சிக்கியிருந்தால், இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் உங்களுக்கு மட்டும்தான்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்தின் போதே கண்விழித்து முதலில் சூரிய நமஸ்காரம் செய்து விடுங்கள். இன்று செய்யப் போகின்ற பரிகாரம் முழு பலனையும் தரவேண்டும் என்று சூரிய பகவானிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு உங்களுடைய அன்றாட வேலையை எல்லாம் முடித்து விடுங்கள். ஞாயிற்றுக்கிழமை காலை அல்லது மாலை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த பிரசாதத்தை தயார் செய்யலாம்.

கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து கலந்து அப்பம் சுட வேண்டும். கோதுமை மாவு அப்பம் இதை கொண்டு போய், அனுமன் சன்னிதானத்தில் வைத்து அவருக்கு ஒரு அர்ச்சனை செய்யுங்கள். உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து இந்த கோதுமை அப்பத்தை உங்கள் கைகளால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

- Advertisement -

11 கோதுமை அப்பம் செய்து கொண்டு போய் கோவிலில் தானம் செய்தாலும் போதும். ஞாயிற்றுக்கிழமை ஹனுமன் சன்னிதானத்தில் நின்று இனிப்பு கோதுமை அப்பத்தை தானம் செய்யக் கூடியவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனை எளிதில் தீரும் என்பதுதான் நம்பிக்கை. ஒரே ஒரு வாரம் மட்டும் செய்துவிட்டு பலனை எதிர்பார்க்க கூடாது. உங்களுடைய கஷ்டத்திற்கு ஏற்ப, உங்கள் கடன் கஷ்டம் தீரும் வரை எல்லா ஞாயிற்றுக்கிழமையும் இதை தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: கொடுத்த பணம் திரும்ப கிடைக்க பஞ்சமி பரிகாரம்

தினமும் வீட்டில் ஹனுமன் சாலிசா ஒலிக்க விடுங்கள். ஹனுமன் சாலிசாவை எவ்வளவு உங்கள் காதால் கேட்கிறீர்களோ அவ்வளவு அவ்வளவு சீக்கிரம், கடன் சுமைக்கு கூடிய சீக்கிரத்தில் நல்லதொரு விடிவு காலம் பிறந்துவிடும். அதுமட்டுமில்லாமல் வீட்டில் அனுமன் சாலிசா ஒலிக்கப்பட்டால் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறும். வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

சற்று முன்