தம்பதியருக்குள் பிரச்சனை என்பது அடிக்கடி வருவது தான் என்றாலும், அதனால் பிரிவுகள் உண்டாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எப்பேர்பட்ட சண்டையாக இருந்தாலும் ஒரு நாளைக்கு மேல் அது நீடிக்க கூடாது. அடிக்கடி சண்டை போடும் கணவன் மனைவி இருக்கும் வீட்டின் வரவேற்பறையில் இதை வரைந்து வைத்தால், அவர்களுக்குள் சண்டைகளும், பிரிவுகளும் வராமல் இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அப்படியான ஒரு விஷயம் என்ன? என்கிற தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.
கணவன் மனைவிக்குள் சண்டை வந்தாலும், பிரிவுகள் என்பது இருந்தாலும், அது நிரந்தரமாகி விடக்கூடாது. நம் முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில் எல்லாம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருவருக்கும் இருந்தது. ஆனால் இப்பொழுது விட்டுக் கொடுப்பது என்பது கணவன் மனைவி இருவருக்குமே கிடையாது. நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? என்று பிடிவாதமாக ஈகோ காட்டுகின்றனர். இதனால் கோர்ட்டுகளில் விவாகரத்து எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கணவன் மனைவிக்குள் இருக்கும் இந்த ஈகோ பிரச்சனையை குறைத்து, மனதை சாந்தமாக வைத்துக் கொள்வதற்கு, சில எளிய வாஸ்து சாஸ்திர முறைகள் உண்டு. படுக்கை அறையில் இனிய ஓசைகளை எழுப்பும் இசை அமைப்புகள் அமைக்கப்பட்டு இருந்தால், அவர்களுக்குள் சண்டைகள் குறைவதாக ஒரு நம்பிக்கை உண்டு. வெளிநாடுகளில் எல்லாம் இதைத் தான் கடைபிடிக்கின்றனர்.
வரவேற்பறையில் கண்ணை இமை பிரியாதது போல இருக்கும் படத்தை மாட்டி வைத்தால் கணவனும் மனைவியும் பிரியாமல் எப்பொழுதும் ஒற்றுமையாகவே இருப்பார்கள் என்பது ஒரு சூட்சம வாஸ்து விதியாகும். நீதி, நேர்மை, தூய்மை ஆகியவற்றின் அடையாளமாக இருக்கக் கூடிய கொக்கு படத்தை அலுவலகங்களில் அல்லது வேலை செய்யும் இடத்தில் நீங்கள் வரைந்து வைத்தால், உங்களுக்குள் நேர்மை தவறாமல் நடக்கும் பண்பு வளரும் எனும் ஒரு நம்பிக்கை உண்டு. நீதிநெறி தவறாமல் வாழ விரும்புபவர்கள் கொக்கை வரைந்து வையுங்கள். உங்கள் மனமும் அதே போல சலைப்படையாமல் நீதியை நோக்கி செல்லும்.
கணவன் மனைவிக்குள்ளும் அது போல சண்டைகள் வராமல் ஒற்றுமையாக இருப்பதற்கு கண்களை வரைந்து வையுங்கள் அல்லது கண்கள் ரம்யமாக இருக்கும் படியான நல்ல படமாக பார்த்து வாங்கி மாட்டி வையுங்கள். படுக்கை அறையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சிரித்தபடி இருக்கும் படத்தை பெரிதாக மாட்டி வைத்தால், அடிக்கடி அதை பார்க்கும் பொழுது கணவன் மனைவிக்குள் சண்டை போட வேண்டும் என்கிற எண்ணம் வராதாம்.
இதையும் படிக்கலாமே:
கேட்ட வரத்தைப் பெற முருகன் வழிபாடு
மனித கண்கள் மிகவும் பவித்திரமானது! யானையுடைய கண்கள் படத்தை மாற்றி வைத்தால் கண் திருஷ்டிகள் அனைத்தும் ஒழியும் என்பார்கள். அது போல மனித கண்களை வீட்டில் வரைந்து வைத்தால் திருஷ்டிகளும் விழாது. கணவன் மனைவிக்குள் பிரச்சனைகளும் எழாது. சண்டை போடாமல் யாராலும் இருக்க முடியாது, ஆனால் அந்த சண்டையால் மன கசப்புகள் ஏற்பட்டு, வெறுப்பு என்கிற தவறான விஷயம் நுழைந்து விட்டால், வாழ்க்கையே சூனியம் ஆகிவிடும். எனவே வெறுப்பை வளர்க்காமல், உங்கள் மனதை கட்டுப்படுத்தக்கூடிய, இந்த பவித்திரமான கண்கள் படத்தை வரைந்து வையுங்கள். கண்ணை இமை காப்பது போல, உங்களை உங்களுடைய துணை காத்து நிற்பார், இனி உங்களுக்குள் பிரச்சனைகள் குறையும்.