- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகேட்ட வரத்தைப் பெற முருகன் வழிபாடு

கேட்ட வரத்தைப் பெற முருகன் வழிபாடு

- Advertisement -

கலியுகத்தின் கண்கண்ட கடவுள் இந்த முருகப்பெருமான். முருகனை யார் எப்படி வழிபாடு செய்தாலும் சரி, அவர்களுக்கு உண்டான பலன் நிச்சயம் கிடைத்தே தீரும். சில பேருக்கு முருகன் என்றால் யார், அவருடைய வரலாறு என்ன, அவரை வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும், என்று தெரிந்து நம்பிக்கையோடு வழிபாடு செய்வார்கள்.

அவர்களுக்கு உண்டான பலனை முருகன் நிச்சயம் கொடுப்பான். ஆனால் சில பேருக்கு முருகன் என்றால் யார் என்ன என்று தெரியாது, ஆனால் முருகனினை வழிபாடு செய்வார்கள். அப்படி, முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கும் நிச்சயம் முருகப்பெருமான் பலனை கொடுத்துவிடுவார்.

- Advertisement -

ஆனாலும் இந்த கலியுகத்தில் முருகனை திட்டிக் கொண்டிருப்பவர்களும் ஒரு சில பிரிவினர் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் முருகனை எவ்வளவோ நாள் தொடர்ந்து வழிபாடு செய்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் எனக்கு மட்டும் முருகர் நல்லதே செய்யவில்லை என்று, இப்படிப்பட்டவர்களுக்கும் முருகன் நல்லது தான் செய்கின்றான்.

அந்த நல்லதை இவர்களால்தான் உணர்ந்து கொள்ள முடியாது. முருகனை உணர்ந்து வழிபாடு செய்பவர்களுக்கு, அவன் செய்யும் நல்லது, கண்களுக்கு உடனே தெரியும். இனி முருகர் வழிபாட்டை செய்யும் போது கொஞ்சம் பக்தி, கொஞ்சம் உணர்வு, நிறைய நம்பிக்கையை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய முருகா வழிபாட்டிற்கான பலன் கூடிய விரைவில் கிடைக்கும்.

- Advertisement -

முருகன் வழிபாடு

சரி, இன்று சஷ்டி திதி. செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து இருக்கிறது. உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று இரண்டே இரண்டு விளக்குகளை போட்டுவிட்டு, முருகனை நம்பிக்கையுடன் கும்பிடுங்கள். முருகப்பெருமானை இன்று 21 முறை வலம் வர வேண்டும்.

நீயே கெதி என்று வழிபாடை செய்து விட்டு, உங்கள் பிரச்சினையை முருகனிடம் சொல்லிவிட்டு, கோவிலை 21 முறை வலம் வரும்போது ‘ஓம் சரவணபவாய நமஹ !’ என்ற மந்திரத்தை மட்டும் மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். மந்திரத்தை சொல்வதற்கு கணக்கு கிடையாது. சுற்றி வரக்கூடிய கணக்கை மட்டும் வைத்துக் கொண்டால் போதும்.

- Advertisement -

ஏதாவது ஒரு பூ அல்லது துவரம் பருப்பு, இவைகளை 21 எண்ணிக்கையில் கையில் எடுத்துச் செல்லுங்கள். ஒருமுறை வளம் வரும்போது முருகப்பெருமானின் வேலுக்கு முன்பாக அந்த பொருளை வைத்து விட்டு செல்லவும். கையில் இருக்கும் பொருள் தீரும்போது, 21 சுற்று முடிந்ததற்கான கணக்கு தெரியும்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

இந்த எளிமையான வழிபாட்டை, எவர் ஒருவர் இன்று முருகன் கோவிலுக்கு சென்று செல்கிறீர்களோ, அவர்களுடைய வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். அதில் ஒரு மாற்று கருத்தும் கிடையாது. இன்று மாலை 6:30 மணிக்கு மேல் இந்த வழிபாட்டை நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் மேற்கொள்ளலாம். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்