இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் தைரியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. தைரியம் இருந்தால் தான் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியும். அப்படி செய்வதோடு மட்டுமல்லாமல் அந்த தைரியத்தின் பலனால் தான் வெற்றியும் அடைய முடியும். ஒரு வேளை அந்த காரியத்தில் தோல்வி அடைந்து விட்டால் தன்னம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் தான் வெற்றியை பெற முடியும். இந்த தைரியத்தையும் தன்னம்பிக்கையும் தரக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் பைரவர். அவருக்குரிய திதியாக கருதப்படுவது அஷ்டமி. இந்த அஷ்டமி திதியில் பைரவருக்கு எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தேய்பிறை அஷ்டமி நவ தீப வழிபாடு
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவராக திகழ்பவர் தான் காலபைரவர். அந்தகாசுரனை வதம் செய்வதற்காக உருவாக்கப்பட்டவராக இவர் திகழ்கிறார். மேலும் ஒவ்வொரு சிவ ஆலயத்திலும் காவல் தெய்வமாக வீற்றிருக்கக் கூடியவர் தான் காலபைரவர். அப்படிப்பட்ட காலபைரவரை வணங்குவதற்கு உகந்த தினமாக கருதப்படுவதுதான் அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி என்று இரண்டு அஷ்டமிகள் வரும். இதில் தேய்பிறை அஷ்டமியில் நாம் கால பைரவரை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக மன பயம் நீங்கும் என்று கூறப்படுகிறது. நாம் செய்யக்கூடிய காரியங்களில் நமக்கு எந்தவித தடங்களும் வராது என்றே கூறலாம். அப்படிப்பட்ட மன பயத்தை நீக்குவதற்கு தேய்பிறை அஷ்டமியில் செய்யக்கூடிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி என்பது அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் மதியம் 12:15 முதல் 1:15க்குள் அல்லது ராகுகாலமான 1:30 லிருந்து 3 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து விட வேண்டும் இந்த இரண்டு நேரங்களிலும் செய்ய இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள் மட்டும் மாலை 6 மணியில் இருந்து இரவு 11:30க்குள் இந்த வழிபாட்டை செய்யலாம். இதற்கு நமக்கு கால பைரவரின் படம் வேண்டும் என்று எந்த ஒரு நிபந்தனையும் கிடையாது. வீட்டில் சிவபெருமானின் படம் கண்டிப்பான முறையில் இருக்கும். சிவ பெருமானுக்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டாலும் காலபைரவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
சிவபெருமானின் படத்திற்கு சிவப்பு நிற மலர்களை சாற்றி வழிபாடு செய்து கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக புளி சாதத்தை சற்று காரமாக செய்து வைக்க வேண்டும். பிறகு வட்ட வடிவத்தில் 9 அகல் விளக்குகளை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் வட்டத்திற்கு வெளிப்புறத்தில் எறிவது போல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி ஏற்றி முடித்துவிட்டு “ஓம் கால பைரவராய நமஹ” என்னும் மந்திரத்தை 308 முறை கூறி வழிபாடு செய்ய வேண்டும். அரை மணி நேரம் இந்த தீபம் இருந்தால் போதும் பிறகு குளிர வைத்துவிடலாம்.
இந்த முறையில் நாம் காலபைரவருக்கு 9 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்திடும், வெற்றிகள் உண்டாகும், தைரியமும் தன்னம்பிக்கையும் உயரும், வீண் பயம் எதிரிகள் தொல்லை முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:வீட்டில் பணம் சேர செய்யக்கூடாத தவறு
அஷ்டமி திதி வரும் நாளில் கால பைரவரை முழு மனதுடன் இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு காலபைரவரின் அருளால் அனைத்துவித நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.