- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேண்டியதை கொடுக்கும் ஈசானிய மூலை வழிபாடு

வேண்டியதை கொடுக்கும் ஈசானிய மூலை வழிபாடு

- Advertisement -

பலவிதமான பிரச்சனைகளில் சிக்கி தவித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு வழி கிடைக்காதா என்று ஏங்குவார்கள். அப்படி ஏங்கக் கூடியவர்கள் வாஸ்து ரீதியாக நம்முடைய வீட்டில் ஒரு இடத்தில் மட்டும் தீபம் ஏற்றி வழிபட்டால் அந்த தீப வெளிச்சமானது நம்முடைய கஷ்டங்களில் இருந்து வெளியே வருவதற்குரிய வெளிச்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த தீபத்தை எந்த இடத்தில் எப்படி ஏற்ற வேண்டும்? எப்படி எல்லாம் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஈசானிய மூலை வழிபாடு

வாஸ்து ரீதியாக பார்க்கும் பொழுது நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆதிக்க நிலையில் இருப்பார்கள். அந்த கிரகங்களின் அடிப்படையில்தான் நம்முடைய வீட்டின் ஒவ்வொரு அறைகளும் வீற்றிருக்கும் என்று கூறப்படுகிறது. உதாரணமாக அக்னி மூலையில் சமையலறை இருக்க வேண்டும் என்பதும் தென்மேற்கு மூலையில் பீரோ இருக்க வேண்டும் என்றும் இப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான அறைகள் இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் வாழக்கூடிய நபர்களுக்கு நன்மைகள் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. ஒரு வேளை அந்த முறையில் வீட்டில் அறைகள் அமையவில்லை என்னும் பட்சத்தில் அதன் காரணமாக கூட ஒருவருக்கு பிரச்சினைகள் உண்டாகும். எவ்வளவு பெரிய பிரச்சினை ஏற்பட்டாலும் இந்த ஒரு எளிமையான தீப வழிபாட்டை செய்யும் பொழுது நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அந்த பிரச்சினை இருந்து வெளியே வர முடியும்.

- Advertisement -

இதற்கு நமக்கு கோமாதாவின் சிலை வேண்டும். கோமாதாவில் அனைத்து விதமான தெய்வங்களும் வீற்றிருக்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். கன்றுடன் இருக்கக்கூடிய கோமாதாவின் சிலையை வாங்கி சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த சிலையை நம்முடைய வீட்டின் வடகிழக்கு மூலை என்று கூறக்கூடிய ஈசானிய மூலையில் வைக்க வேண்டும். பிறகு ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்து அதில் நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை எழுதி நன்றாக சுருட்டி சிவப்பு நிற நூலால் கட்ட வேண்டும்.

இந்த பேப்பரை கோமாதா மற்றும் கன்றுக்கு நடுவில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். தினமும் காலையில் கோமாதாவிற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து நம்முடைய வேண்டுதல் விரைவிலேயே நிறை வேண்டும் என்று வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 41 நாட்கள் தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும். 42 வது நாள் இந்த எழுதிய சீட்டை எடுத்து அருகில் இருக்கக் கூடிய ஆலமரம், அரசமரம், வேப்பமரம் இவை மூன்றில் ஏதாவது ஒரு மர த்தில் நூலை பயன்படுத்தி கட்டி விட வேண்டும். நாம் தீபம் ஏற்றி முடிக்க கூடிய அந்த 41 நாளிலேயே ஒரு நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:முருகனின் வசியம் மந்திரம்

முழு நம்பிக்கையுடனும் முழு மனதுடனும் இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு அனைத்து விதமான தெய்வங்களின் அருளும் பரிபூரணமாக கிடைப்பதோடு நம்முடைய வேண்டுதலும் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்