நம்முடைய இன்றைய வாழ்க்கை சூழ்நிலை எப்படி இருக்கிறது? தேவைக்கு ஏற்ப பணம் இருந்தால் மட்டும்தான் வீட்டில் நிம்மதி, இல்லை என்றால் ஒரே கலவரம் தான். இன்னும் சொல்லப் போனால், தேவைக்கு ஏற்ப கிடையாது, தேவைக்கு அதிகமாகவே அனைவரும் பணத்தை சம்பாதித்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். முதலில் தேவைக்கு ஏற்ப கடவுளிடம் பணத்தை கேட்போம்.
இறைவன் நிச்சயம் அதை நமக்கு கொடுப்பான். தேவைகளுக்கு போக மிச்சம் இருக்கும் பணத்தை சேமிப்போம். அந்த பணத்தை இழக்காமல் இருப்பதற்கு உண்டான வழியையும் தெரிந்து வைத்துக் கொள்வோம். அப்போதுதான் நம்மிடம் பணம் நிரந்தரமாக தங்கும். பணம் வீண் விரைய செலவை தவிர்ப்பதற்கு நாம் செய்ய வேண்டிய மிக மிக எளிமையான ஆன்மீகம் பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நமக்கு வருமானமாக வரக்கூடிய பணம், நம்மை விட்டு, நம் கையை விட்டு இழந்து போக காரணம் பணத்தின் மீது இருக்கும் கண் திருஷ்டி தான். நமக்கு கஷ்டத்தை கொடுக்கக் கூடிய விஷயங்கள் அடுத்தவர்கள் கண்களுக்கு தெரிகிறதோ இல்லையோ, நம் கைக்கு வரக்கூடிய வருமானம், பணம் இவைகளை அடுத்தவர்கள் நோட்டம் விட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.
நம்முடைய வாழ்க்கை சூழல் நாம் வாங்கக்கூடிய பொருட்களை வைத்தே, நம்முடைய வருமானத்தை எடை போடக்கூடிய திறமை சக மனிதர்களுக்கு நிச்சயம் இருக்கும். ஏன், நமக்கே கூட அடுத்தவர்களுடைய வாழ்க்கை முறையை எடை போடக்கூடிய திறமை இருக்கிறது. குறிப்பாக நம்மை சுற்றி இருக்கும் சொந்த பந்தங்கள் நண்பர்கள் எல்லாம் நம் வாழ்க்கை சூழலை பார்த்து கொஞ்சம் பொறாமையாக ஒரு பார்வை பார்த்தால் போதும். அந்த கண் திருஷ்டியே நம் வீட்டில் இருக்கும் சந்தோஷத்தையும் பணத்தையும் அழித்து விடும். அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொண்டாலே போதும். நம் வீட்டில் பணக்கஷ்டம் வராது.
உங்களுடைய வீட்டு வரவேற்பு அறையில் இந்த பொருட்களை வைத்தால் உங்கள் வீட்டின் மீது கண் திருஷ்டி விழாது. உங்கள் வீட்டு நபர்களின் மீது கண்திருஷ்டி விழாது, உங்கள் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் பொருட்களை பார்த்து அடுத்தவர்கள் கண் திருஷ்டி வைத்தாலும், அதன் மூலம் பாதிப்பு ஏற்படாது. வீட்டில் வீண் விரைய செலவுகளும் குறைக்கப்படும்.
பண இழப்பை தடுக்க வரவேற்பு அறையில் வைக்க வேண்டிய பொருட்கள்
ஒரு கண்ணாடி பவுல் எடுத்துக்கோங்க. அதில் முதலில் ஒரே ஒரு ஜாதிக்காய் போட்டு, அதன் மேலே கல்லுப்பை கொட்டி நிரப்பி விட வேண்டும். ஜாதிக்காய் வெளியில் தெரியாது. மேலே கல்லுப்பு மட்டும் இருக்கட்டும். கல்லுப்புக்கு மேலே 5 மிளகுகளை வட்டமாக அடுக்கி, உங்கள் வரவேற்பு அறையில் வைத்து விட்டால் போதும். உங்கள் வீட்டில் ஏற்படக்கூடிய பண இழப்புகள் வீண் விரைய செலவுகள் கட்டாயம் குறையும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
இந்த பதிவை படித்த உடனேயே எல்லோர் கண்களுக்கும் படம் படி உங்கள் வீட்டு வரவேற்பதில் அழகாக ஒரு மேஜையின் மேலே இந்த பௌலை தயார் செய்து வைத்து விடுங்கள். வாரத்திற்கு ஒரு நாள் கல்லுப்பையும் மேலே இருக்கும் மிளகையும் எடுத்து தண்ணீரில் கரைத்து கீழே கொட்டி விடலாம். ஜாதிக்காயை மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. 3 மாதத்திற்கு ஒருமுறை ஜாதிக்காயை மாற்றி வைத்தால் மட்டும் போதும்.
இதையும் படிக்கலாமே: 24-10-2024 தேய்பிறை அஷ்டமி வழிபாடு
இந்த பரிகாரம் சொல்வதற்கும் கேட்பதற்கும் மிக மிக எளிமையான விஷயமாக இருக்கும். ஆனால் உங்கள் வீட்டில் இருக்கும் பணம் இனிமேலாவது உங்கள் கையை விட்டு செல்லக்கூடாது, வீண் விரைய செலவு ஆகக்கூடாது என்றால், இந்த எளிமையான பரிகாரத்தை செய்வதுதான் ஒரே வழி. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த விஷயத்தை பின்பற்றி பலன் பெறவும்.