சில பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். இதே வீட்டில் தான் எங்களுடைய தாத்தா பாட்டியும், அவர்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் எல்லாம் சந்தோஷமாக தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். ஆனால் இந்த தலைமுறையில் வாழும் குடும்பம் மட்டும், இந்த வீட்டில் கஷ்டப்பட்டு வருகிறது. வாஸ்துவினால் பிரச்சனையா, அல்லது வீடு கட்டி நெடுநாட்கள் ஆகிவிட்டதால் பிரச்சனையா, எதனால் பிரச்சனை வருகிறது, என்பதை தெரியவில்லை.
இப்போது வீட்டை மாற்றக்கூடிய சூழ்நிலையும் எங்களிடத்தில் கிடையாது. எங்களுடைய குடும்பமும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் நாங்கள் என்ன பரிகாரம் செய்வது, அல்லது வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு தற்போது வீடு பிரச்சனையாக இருக்கிறது, வாஸ்துவால் குடும்பத்தில் நிம்மதி இழக்கப்பட்டுள்ளது, இந்த பிரச்சனையை சரி செய்ய என்ன செய்வது.
இப்படி வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்றால் நாளைய தினம் ஒரு வரப் பிரசாதமாக சொல்லப்பட்டுள்ளது. நாளை 8:30 மணி வரை வாஸ்து செய்ய உகந்த நேரம். இந்த வாஸ்து நேரத்தில், இந்த வாஸ்து நாளில், இந்த எளிமையான தீர்த்தத்தை கொண்டு வந்து உங்கள் வீடு முழுவதும், வாஸ்து பகவானை நினைத்து தெளித்துவிட்டால் வீட்டில் இருக்கும் அத்தனை கஷ்டங்களும் நீங்கும். அந்த தீர்த்தத்தை எங்கு பெறுவது, பக்கத்தில் இருக்கும் இந்த கோவிலில் இருந்து தான் அந்த தீர்த்தத்தை வாங்கி வர வேண்டும்.
வாஸ்து தோஷம் நீங்க பரிகாரம்
சிவன் கோவில், பெருமாள் கோவில், முருகன் கோவில், இப்படி உங்கள் வீட்டின் அருகில் எந்த கோவில் இருந்தாலும் அந்த கோவிலுக்கு சென்று சுவாமி தீர்த்தத்தை பெற்றுக் கொள்ளுங்கள். சுவாமி அபிஷேகம் செய்யப்படும் அந்தத் தண்ணீர் வெளியே, கோமுக தீர்த்தமாக வெளிவரும்.
அந்தத் தீர்தத்தை பிடித்து வந்தாலும் சரி, அல்லது பெருமாள் கோவிலில் தீர்த்தம் கொடுப்பார்கள், துளசி இலைகளை போட்டு பருகுவதற்கு அந்த தீர்த்தம் கிடைத்தாலும் சரி, அதிலிருந்து கொஞ்சம் வீட்டிற்கு வாங்கி வர வேண்டும். காலையில் 7:00 மணிக்கே கோவிலுக்கு சென்று தீர்த்தத்தை வாங்கி வீடு திரும்புங்கள்.
வீடு முழுவதும் சுத்தம் செய்துவிட்டு, வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை நினைத்து வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போடுங்கள். வீடு முழுவதும் சாம்பிராணி புகையால் நிரம்ப இருக்க, அந்த சமயத்தில் இந்த தீர்த்தத்தை எடுத்து வாஸ்து பகவானை மனதார நினைத்து, எங்கள் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.
இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நடக்க தீப வழிபாடு
வீட்டில் இருப்பவர்களுடைய சந்தோஷம் கெட்டுப் போகக்கூடாது, ‘ஓம் வாஸ்து பகவானே போற்றி போற்றி ! வாஸ்து பகவானே துணை!’ என்ற மந்திரத்தை சொல்லி, வீடு முழுவதும் இந்த தீர்தத்தை தெளித்து விடுங்கள். நாளை காலை 8:00 மணியிலிருந்து 8:30 மணிக்குள் இந்த தீர்த்தத்தை வீட்டிற்குள் தெளித்து விடுங்கள். இந்த எளிய பரிகாரம் உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டத்தை போக்குவதற்கு நிச்சயம் உதவும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறவும்.