- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval31-10-2024 தீபாவளி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்

31-10-2024 தீபாவளி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்

- Advertisement -

31-10-2024 வியாழக்கிழமை அன்று தீபாவளி வரவிருக்கின்றது. இந்த தீபாவளியை கொண்டாடுவதற்கு தேவையான புத்தாடைகள், பட்டாசுகள் இனிப்பு பலகாரம் செய்வதற்கு பொருட்களை எல்லாம் வாங்க துவங்கி இருப்போம். மற்ற பண்டிகை நாட்களில் குழந்தைகளுக்கு, பெண்களுக்கு வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு ஒரு சந்தோஷம் இருக்கிறதோ இல்லையோ, இந்த தீபாவளி வரப்போகிறது என்றால் எங்கிருந்துதான் சந்தோஷம் வருமோ என்று தெரியாது.

சந்தோஷத்தை நிறைவாக அள்ளித் தரக்கூடிய பண்டிகைகளில் முதல் இடத்தை பிடிப்பது இந்த தீபாவளி தான். காரணம் புத்தாடை இனிப்பு மட்டுமல்ல. பட்டாசும் சேருவது சிறு பிள்ளைகளுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும். வாழ்க்கையினுடைய முக்கிய நோக்கம் என்ன சந்தோஷமாக இருப்பது, சிரித்துக் கொண்டே இருப்பது, அப்படி நமக்கு சந்தோஷத்தையும் சிரிப்பையும் கொடுக்கக்கூடிய இந்த தீபாவளி பண்டிகை அன்று நம்முடைய பண கஷ்டம் தீர நாம் வாங்க வேண்டிய ஒரு சில பொருட்களின் பட்டியலை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவு மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

தீபாவளி என்றதுமே நம்முடைய நினைவிற்கு வருவது மகாலட்சுமி. செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்று தான் நாம் ஒவ்வொரு பண்டிகையையும் கொண்டாடுகிறோம். அந்த வகையில் குபேர பூஜை, லட்சுமி குபேர பூஜை, எல்லாம் இந்த தீபாவளி பண்டிகை அன்றுதான் கொண்டாடப்படுகிறது.

ஒரு சில வருடங்களுக்கு முன்பாக இந்த பூஜையை எல்லாம் வட இந்தியர்கள் மட்டும்மே கொண்டாடி வந்தனர். ஆனால் இன்று எல்லோராலும் கொண்டாட கூடிய வழிபாடாக இந்த லட்சுமி குபேர பூஜை மாற தொடங்கிவிட்டது. சரி, மகாலட்சுமியின் அருளாசி எங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும்.

- Advertisement -

தீபாவளி அன்று கட்டாயம் வாங்க வேண்டிய பொருட்கள்

தீபாவளி அந்த மிக மிக சுலபமாக இந்த பொருட்களை வாங்கினாலே நம் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும் என்றால் அதற்கு நாங்கள் எந்த பொருளை வாங்க வேண்டும். தீபாவளி அன்று மகாலட்சுமிக்கு முன்பாக லட்டு வைத்து வழிபாடு செய்வது மிக மிக சிறப்பு.

லட்டு குருவின் காரகத்துவமாக சொல்லப்பட்டுள்ளது. லட்டுவை கொண்டு வந்து மகாலட்சுமி முன்பு வைத்து வழிபாடு செய்தீர்கள் என்றால், உங்களுடைய வீட்டில் பணக்கஷ்டம் என்பது நிச்சயம் வராது. இதோடு சேர்த்து தீபாவளி அன்று உங்கள் வீட்டிற்கு தேவையான மங்களப் பொருட்கள் அனைத்தையும் வாங்கலாம். குறிப்பாக துடைப்பம், கல் உப்பு மஞ்சள், குங்குமம், வெள்ளை நிறத்தில் இருக்கும் மல்லிகை பூ இந்த பொருட்களை வாங்கினால் உங்களுடைய வீட்டில் அடுத்த வருடம் முழுவதும் ஐஸ்வர்ய கடாட்சம் நிறைவாக இருக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

கல் உப்பு, மஞ்சள் குங்குமம் எல்லாம் பரவாயில்லை. அது என்ன துடைப்பம் நல்ல நாளில் துடைப்பம் வாங்குவதா என்று சிந்திக்க வேண்டாம். துடைப்பம் மகாலட்சுமியின் முதல் அம்சமாக சொல்லப்பட்டுள்ளது. அது நம் வீட்டை கூட்டி சுத்தம் செய்யக்கூடிய பொருள். துடைப்பத்திற்கும் மகாலட்சுமி அம்சம் உண்டு. தீபாவளி அன்று இந்த வருடம், புது துடைப்பம் வாங்கி வந்து உங்கள் வீட்டை கூட்டி அந்த துடைப்பத்தை எடுத்து வைத்துப் பாருங்கள்.

உங்களுடைய பண கஷ்டம் இன்றிலிருந்து படிப்படியாக குறைய தொடங்கியிருக்கும். அதேபோல தீபாவளி அன்று மகாலட்சுமியின் அம்சமான பசுவிற்கு உங்கள் கையால் ஏதாவது ஒரு பொருளை சாப்பிடுவதற்கு வாங்கி கொடுக்க வேண்டும்.

உங்களுடைய நாட்டில் நீங்கள் வசிக்கும் பகுதியில் பசு இல்லை என்றாலும் சரி, கோ சாலை வைத்திருப்பவர்களுக்கு 500 ரூபாய் ஜிபே பண்ணி விடுங்க. அவர் அந்த பணத்திற்கு பசுவிற்கு சாப்பிடக்கூடிய பொருட்களை வாங்கி கொடுத்து விடுவார். உங்க சொந்த பந்தங்களுக்கு பணத்தை அனுப்பியாவது உங்களுடைய காசைக் கொண்டு பசு மாட்டிற்கு தீபாவளி அன்று ஏதாவது உணவு பொருளை வாங்கி தானம் கொடுப்பதும், சிறப்பான பலனைத் தரும்.

இதையும் படிக்கலாமே: பிரச்சினைகளை தீர்க்கும் நந்தீஸ்வரர் வழிபாடு

இந்த தீபாவளிக்கு மேலே சொன்ன சின்ன சின்ன இந்த ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் உங்கள் நிதி நிலைமையை உயரச் செய்யும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்