நாளைய தினம் தீபாவளிக்கு முந்தைய நாள். அதாவது மாத சிவராத்திரியும் நாளைய தினத்தில் இருக்கிறது. இந்த நாளில் சிவபெருமானின் பரிபூரணமான அருளை நாம் பெற வேண்டும் என்றால், சிவனின் பரிபூரணமான அருள் நம்முடைய மனதோடு, உடலோடு, இரத்தத்தோடு ரத்தமாக ஒன்றிணைக்க வேண்டும் என்றால், நாளைய தினம் சிவபெருமானை எப்படி வழிபாடு செய்வது?
வரக்கூடிய தீபாவளி திருநாள் பண்டிகையில் மகாலட்சுமியின் அருளாசியை பெற வேண்டும் என்பதற்காக, முன்கூட்டியே சிவபெருமானிடம் வேண்டுதல் வைக்கப் போகின்றோம். சிவபெருமானின் அருளை முழுமையாக பெற்றவர்களுக்கு தோல்வி என்பதே இருக்காது. அந்த வகையில் தீபாவளி அன்று நீங்கள் செய்யக்கூடிய லட்சுமி குபேர பூஜை, மகாலட்சுமி பூஜை எல்லாம் முழு பலனை பெற வேண்டும் என்றால் நாளைய தினம் நீங்கள் சிவன் வழிபாடு செய்ய வேண்டியது மிக மிக அவசியம்.
ஐப்பசி மாத சிவராத்திரி வழிபாடு
நாளைய தினம் ஐப்பசி மாத சிவராத்திரி வந்திருக்கிறது. ஐப்பசி மாத பௌர்ணமி அன்று தான் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வார்கள், என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே ஐப்பசி மாதம் சிவன் வழிபாடு செய்தால் உங்களுக்கு கோடி புண்ணியம். நாளை காலையிலேயே எழுந்து வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையை அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
பூஜை அறையில் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். உங்கள் முன்பாக ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எந்த சொம்பில் தண்ணீர் பருகுவிர்களோ, அந்த சொம்பில் தண்ணீர் வைத்தால் போதும். இது தவிர சுவாமிக்கு தீர்த்தம், பிரசாதம் எல்லாம் தனியாக வைக்க வேண்டும்.
வெற்றிலை பாக்கு பூ வாழைப்பழம் இருந்தால் போதும். பஞ்ச பாத்திரத்தில் தீர்த்தத்தை வையுங்கள். அவ்வளவுதான் உங்களுடைய கையில் சிவபுராணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாளைய தினம் சிவபுராணம் படித்தால் அந்த சிவனின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருமுறை சிவபுராணத்தை படிக்க வேண்டும். நன்றாக படித்த தெரிந்தவர்கள் 10 நிமிடத்தில் இதை படித்து விடலாம். இப்போதுதான் புதுசாக படிக்க தொடங்குகிறீர்கள் என்றால் இருவது நிமிடத்தில் அல்லது அதற்கு மேல் ஒரு ஐந்து நிமிடம் எடுக்கும். கொஞ்சம் பொறுமையாக அமர்ந்து அந்த சிவபராணத்தை பாராயணம் செய்து விடுங்கள்.
பிறகு நெற்றி நிறைய திருநீறு இட்டுக்கொண்டு ஈசனை நினைத்து தீப தூப ஆராதனையை காண்பித்து பூஜை அறையில் உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இவ்வளவுதான் வழிபாடு. வழிபாட்டை முடித்துவிட்டு உங்களுக்கு முன்பு ஒரு சொம்பில் தண்ணீர் வைத்திருந்தீர்கள் அல்லவா, அதை நீங்கள் குடித்து விட வேண்டும். (சிவபுராணத்தில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு வரிகளும் சிவபெருமான் தான். அந்த வார்த்தைகளின் சக்தி அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கி இருக்கும்).
நீங்கள் உங்கள் வாயால் உச்சரித்த அந்த சிவபுராணம், சிவபெருமானின் ஆசியை, அந்த தண்ணீருக்குள் கொடுத்திருக்கும். அந்த தண்ணீரை நீங்கள் பருகும் போது அந்த சிவபெருமானின் உங்களுக்குள் கலந்து விடுவார். அந்த ஈசனை பரிபூரணமாக அடைந்த திருப்தியும் உங்களுக்குள் வந்துவிடும். நாளை தினம் நீங்கள் செய்யக்கூடிய இந்த எளிய வழிபாடு அடுத்த வருடம் முழுவதும் உங்களுக்கு சக்தியை கொடுக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஒருவேளை உங்களுக்கு சிவபுராணம் படிக்க முடியவில்லை படிக்க தெரியவில்லை. படிக்க வரவில்லை என்ன செய்வது. உங்களுடைய youtube இல் சிவபுராணத்தை போட்டுவிட்டு அதை காதால் கேளுங்கள். பிறகு அந்த தண்ணீரை குடித்தாலும் நிச்சயம் உங்களுக்கு சிவபெருமானின் அருள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் தரும் அற்புத பொருள்
நாளை காலை இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியாதவர்கள் மாலை நேரத்திலும் வழிபாடு செய்யலாம். நம்பிக்கை உள்ளவர்களுக்கு எளிமையான இந்த வழிபாடு நாளைய தினம் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வந்து தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.