இவ்வுலகில் இருக்கும் மொத்த செல்வங்களுக்கும் அதிபதியாக இருக்கக் கூடியவர் மகாலட்சுமி தாயார். இவர் பாற்கடலில் இருந்து ஜனித்ததாக புராணங்களில் சொல்லப்படுகிறது. பாற்கடலில் வாசம் செய்யும் மகாலட்சுமி அப்பாற்கடலுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். கடல் வளங்கள், புவி வளங்களை விட பன்மடங்கு அதிகமானது. இந்த எல்லா வளங்களுக்கும் உரிமை உள்ளவர் மகாலட்சுமி.
நம் வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தால் அதிலிருந்து வரும் ஓசை குடும்பத்திற்கு சுபீட்சத்தை கொடுக்கும் என்பது நம்பிக்கை. மேலும் இப்பொருள் எதிர்மறை ஆற்றல்களை, எதிர் மறை சக்திகளை வீட்டிலிருந்து விரட்டி அடிக்கக் கூடிய தன்மை கொண்டுள்ளது. பிரபஞ்ச சக்தியை ஈர்த்து நமக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரக்கூடிய தன்மையும் கொண்டுள்ளது. அது என்ன பொருள்? என்பதை தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
பாற்கடலில் இருக்கும் மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் பிடித்த ஒரு பொருள் “சிப்பி”. சிறுவயதில் நாம் கடலுக்கு செல்லும் பொழுது அதிகம் விளையாடிய ஒரு பொருள் இந்த “சிப்பி”. சிப்பியுடன் விளையாடாத மனிதர்களே இருக்க முடியாது. இந்த சிப்பியை கொண்டு பல்வேறு அலங்காரப் பொருட்கள் கடல் அருகே தயாரித்து விற்பனை செய்கிறார்கள். நம் வீட்டிலும் சிப்பி கொண்டு தயாரித்த பல பொருட்கள் இருக்கக்கூடும்.
சிப்பியினால் ஆன பொருட்கள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் வரும் என்கிற ஒரு நம்பிக்கை உண்டு. சிப்பியில் மகாலட்சுமி வாசம் செய்கிறார். சிப்பிகள் இரண்டும் உரச, அதிலிருந்து எலும் ஓசையானது குடும்பத்திற்கு சுபீட்சத்தை கொண்டு வந்து சேர்க்கக் கூடியது. சிப்பி ஓசை கேட்கும் வீட்டில் செல்வம் அதிகரித்து காணப்படும். சிற்பி கொண்டு தயாரிக்கப்பட்ட கண்ணாடி பயன்படுத்துபவர்கள் தினமும் அதில் முகத்தை பார்க்கும் பொழுது நேர்மறையான ஆற்றல்களை பெறுகிறார்கள்.
சிப்பியில் தயாரிக்கப்பட்ட அணிகலன்கள் அணிவதால் பெண்களுக்கு அதிர்ஷ்டம் வரும். சிப்பிக் கொண்டு தயாரிக்கப்பட்ட கம்மல், வளையல், செயின் போன்றவற்றை அணிவதன் மூலம் அதிலிருந்து வரக்கூடிய ஒலியானது உங்களிடம் இருக்கும் எதிர்மறை சக்திகளை விரட்டியடிக்கும். தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடிய தைரியத்தை கொடுக்கும். சிப்பி கொண்டு தயாரிக்கப்பட்ட தோரணத்தை நிலை வாசலில் மாட்டி தொங்க விட்டால், லட்சுமி உங்கள் வீடு தேடி காலடி எடுத்து வைப்பது என்பது நிச்சயமானது. காலையில் எழுந்ததுமே அந்த சிப்பியின் ஓசையை கேட்குமாறு தொட்டு அசைத்து விடுங்கள். அதன் பிறகு வாசல் தெளித்து கோலம் போடச் சொல்லுங்கள். இது உங்களுக்குள் எதிர்மறை எண்ணங்களை விரட்டி அடிக்கும். ஒவ்வொரு நாளையும் புதிதாக உங்களை உணர செய்யும்.
இதையும் படிக்கலாமே:
சிப்பியில் இருந்து கிடைக்கக்கூடிய முத்துக்கள் வீட்டில் இருந்தாலும் பேரதிர்ஷ்டம் வரும். முத்து வியாபாரிகளுக்கு ஒருபொழுதும் நஷ்டம் வந்தது கிடையாது. சுத்தமான முத்து இருக்கும் கைகள், ராசி உள்ளதாக இருக்கும். எல்லா ராசியினரும் முத்து மோதிரத்தை அணிந்து விட முடியாது. அதற்கான அதிர்ஷ்டம் உள்ளவர்கள் முத்து அணிவதால் உங்கள் வாழ்க்கையே திருப்பி போடும் அளவிற்கு அதிர்ஷ்ட மழை பொழியும். சிப்பிகள் எப்பொழுதும் உங்களுடன் கொண்டு செல்லுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும். நல்ல காரியங்களுக்கு செல்லும் பொழுது சிப்பியை கையில் கொண்டு செல்லுங்கள், செல்லும் காரியம் வெற்றி அடையும். மகாலட்சுமி அருள் பெற்ற இந்த சிப்பி உங்களிடம் எந்த வகையிலாவது நீங்கள் வைத்துக் கொண்டால் அதிர்ஷ்டம் உங்களை விட்டு செல்லாது.