தீபாவளிக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம் என்று சில பேர் சிந்திக்கலாம். தீபாவளி என்பது மகாலட்சுமிக்கும் குபேரனுக்கும் சொந்தமான நாளாகவே இருந்தாலும், தீபாவளி அன்று நாம் துவங்கக்கூடிய ஒரு நல்ல காரியமானது நமக்கு முழுமையான வெற்றியை கொடுக்கும். உதாரணத்திற்கு நீங்கள் மந்திர ஜபம் ஏதாவது புதுசாக துவங்க வேண்டும் என்றால், அதை தீபாவளி நாளில் துவங்கினால், அந்த மந்திரத்தை நீங்கள் தடைபடாமல் தினமும் உச்சரிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தீபாவளி அன்று நீங்கள் எதை புதுசாக செய்தாலும், அதில் ஒரு தடை என்பது ஏற்படாமல் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் நம்முடைய கடன் தீர முருகப்பெருமானை நினைத்து தீபாவளி அன்றிலிருந்து நாம் ஒரு பரிகாரத்தை செய்ய தொடங்கலாம். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 48 நாட்கள் செய்ய உங்களுடைய கடன் குறைவதை கண்கூடாக காண முடியும். அந்த பரிகாரம் என்ன அதை நாளைய தினம் எளிமையாக எப்படி செய்வது ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
தீபாவளி முருகர் பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை தேவை. வெல்லம் என்றால் இடிக்க வேண்டும் தூள் செய்ய வேண்டும். நாட்டு சர்க்கரை வாங்கிக் கொள்வது மிக மிக சுலபமாக இருக்கும். நாளை காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு கொஞ்சம் நாட்டு சர்க்கரையை உள்ளங்கைகளில் எடுத்துக்கொண்டு, அதில் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி அந்த நாட்டு சர்க்கரையை கரைத்தபடி பூமியில், நிலத்தில் விட்டு விடுங்கள்.
இந்த பரிகாரத்தை மண் பாங்கான இடத்தில் செய்வது சிறப்பு தொட்டியில் செடி வைத்திருந்தால் அதில் கூட இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். நாட்டு சர்க்கரையானது தண்ணீரோடு கரைந்து பூமிக்கு செல்லும்போது, அந்த சமயத்தில் முருகப்பெருமானை மனதார நினைத்துக் கொண்டு என்னுடைய கடனும் இந்த வெல்லம் தண்ணீரில் கரைவது போல கரைந்து போக வேண்டும் என்று மனமுருக முருகனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
நாளைய தினம் காலையில் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நாளையிலிருந்து தொடங்கி 48 நாட்களும் காலையில் இதே போல இந்த பரிகாரத்தை, முருகப்பெருமானை நினைத்து செய்ய வேண்டும். இவ்வளவுதான் பரிகாரமே. இந்த நீரை பூமியில் விட்டுவிட்டு பூமிக்கு நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள்.
பூமிகாரகன் செவ்வாய் என்று சொல்கிறார்கள். செவ்வாய் பகவானுக்கு உகந்த கடவுள் முருகப்பெருமான், தீபாவளி என்பது மகாலட்சுமி குபேரன், சுக்கிரனுக்கு உரிய நாளாக சொல்லப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த சேர்க்கையையும் ஒன்றாக சேரும்போது நமக்கு அபரிவிளவிதமான பலனை கொடுக்கும். நாளைய தினம் தொடங்கி இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் முருகப்பெருமான் நல்ல வழியை காண்பித்துக் கொடுப்பார்.
அதில் எந்த சந்தேகமும் கிடையாது. சில பேர் அப்பார்ட்மெண்டில் குடியிருப்பார்கள். நிலத்தில் பூமியில் இந்த பரிகாரத்தை செய்ய முடியாது. அப்படிப்பட்டவர்கள் சமையல் அறை சிங்கில் இந்த வெல்லத்தை தண்ணீரில் உங்கள் கைகளால் கரைத்து விட்டு இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.
48 நாட்களுக்குள் உங்களுக்கு ஏதாவது ஒரு நல்லது நடந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். நல்லது நடக்கும் என்று நம்புவோம். அப்போது நீங்கள் இந்த பூமி தாய்க்கு ஏதாவது ஒரு நல்லதை செய்ய வேண்டும். இரண்டு மரக்கன்றுகளை நடலாம், அல்லது பிளாஸ்டிக் கவர்களை பூமியில் போடாமல் இருக்கலாம். பிளாஸ்டிக் கவர் இருக்கக்கூடிய இடத்தை தூய்மை செய்யக்கூடிய பணியில் ஈடுபடலாம்.
இதையும் படிக்கலாமே: வறுமை நீங்கி சகல ஐஸ்வரியமும் பெருக தீபாவளி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்
இப்படி இந்த பூமிக்கு நல்லது செய்யக்கூடிய ஏதாவது ஒரு விஷயத்தை நன்றி கடனாக, பூமி மாதாவுக்கு தசமர்ப்பணம் செய்யுங்கள். பெண்கள் மாதவிடாய் நாட்களில் கூட இந்த பரிகாரத்தை விடாமல் 48 நாள் செய்யலாம் தவறு கிடையாது. நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.