- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவறுமை நீங்கி சகல ஐஸ்வரியமும் பெருக தீபாவளி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்

வறுமை நீங்கி சகல ஐஸ்வரியமும் பெருக தீபாவளி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்

- Advertisement -

நம் ஒவ்வொருவரும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் அனைத்து விதமான தேவைகளும் பூர்த்தியடைய வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம் ஆனால் அது அனைவருக்கும் நிறைவேறாது ஏதாவது ஒரு சூழ்நிலையில் அனைவருக்குமே ஏதாவது ஒரு விஷயம் கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போராடிக் கொண்டிருப்போம் வறுமையை நிலையாக இருந்தாலும் வாஸ்து கோளாறாக இருந்தாலும் கஷ்டங்களாக இருந்தாலும் பிரச்சனைகளாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ்வதற்கு தீபாவளி அன்று வாங்க வேண்டிய ஐந்து பொருட்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தீபாவளி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்

தீபத்திருநாளாக கருதப்படக் கூடிய நாளை தான் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம். வட மாநிலத்தவர்கள் அன்றைய தினத்தில் வீடு முழுவதும் தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்வார்கள். அந்த தீபாவளி சமயத்தில் மாலை நேரத்தில் லட்சுமி பூஜை செய்யும் வழக்கமும் பலருக்கும் இருக்கும். அப்படி லட்சுமி பூஜை செய்யும் பழக்கம் இல்லாதவர்கள் கூட தங்களுடைய வறுமை நிலையை போக்குவதற்கு வாங்க வேண்டிய முக்கியமான ஐந்து பொருட்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தீபாவளி சமயத்தில் கண்டிப்பான முறையில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக இந்த வருடம் தீபாவளி வியாழக்கிழமை வருகிறது. வியாழக்கிழமை என்பது குபேர பகவானுக்குரிய கிழமை. அன்றைய தினத்தில் மாலை நேரத்தில் நாம் மகாலட்சுமி தாயாரை பூஜை செய்து வழிபாடு செய்தோம் என்றால் லட்சுமி குபேர யோகம் உண்டாகும் என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த நாளாக அன்றைய நாள் திகழ்கிறது. இதுவரை லஷ்மி பூஜை செய்து பழக்கமே இல்லை என்பவர்களும், வறுமையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களும், எந்த காரியத்தை தொட்டாலும் அது துலங்கவில்லை என்று வருத்தப்படுபவர்களும் இந்த ஐந்து பொருட்களை வாங்கி வைத்து வழிபாடு செய்தால் அனைத்து விதமான செல்வங்களையும் பெற முடியும்.

இதில் முதலாவதாக வரக்கூடியது மகாலட்சுமி தாயாரின் மறு உருவமாக திகழக்கூடிய கல்லுப்பு. தீபாவளி அன்று கல் உப்பை வீட்டிற்கு வாங்கி வந்து வீட்டில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்கள் தங்களுடைய இரண்டு கைகளிலும் கல் உப்பை எடுத்து மனதார மகாலட்சுமி தாயாரை வேண்டிக் கொண்டு கல்லுப்பு இருக்கும் பாத்திரத்தில் போட வேண்டும். அடுத்ததாக மஞ்சள், குண்டு மஞ்சள், விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என்று எந்த மஞ்சளாக இருந்தாலும் பரவாயில்லை. மஞ்சளை வாங்கி வந்து பூஜையில் வைக்க வேண்டும். மஞ்சள் வாங்கி வைப்பதன் மூலம் மங்களங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும் என்று கூறப்படுகிறது. தங்கத்திற்கு இணையாக கருதக்கூடிய ஒன்றாக தான் மஞ்சள் திகழ்கிறது.

- Advertisement -

மூன்றாவதாக கோமதி சக்கரம். கோமதி சக்கரம் என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து ரீதியான பிரச்சினைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்களும், தடைபட்டிருக்கும் பணவரவு தடையின்றி வரவேண்டும் என்று நினைப்பவர்களும், கோமதி சக்கரத்தை வீட்டில் வாங்கி வைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. பச்சை நிற பட்டு துணியில் கோமதி சக்கரத்தை வைத்து மூட்டையாக கட்டி வீட்டிலோ அல்லது தொழில் செய்யும் ஸ்தாபனத்திலோ வைக்கும் பொழுது பண வரவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

நான்காவதாக ஸ்ரீ சக்கரம். எந்திர வடிவமாக இருக்கக்கூடிய இந்த ஸ்ரீசக்கரத்தை வாங்கி வந்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து வழிபாடு செய்வதன் மூலம் வீட்டின் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும் என்று கூறப்படுகிறது. கடைசியாக தாமரை விதை மணி மாலை. 108 எண்ணிக்கையில் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அந்த மாலையை வீட்டு பூஜை அறையில் வாங்கி வைக்க வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் தினமும் அல்லது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாட்களான தீபாவளி அன்றோ வெள்ளிக்கிழமை அன்றோ இந்த மணி மாலையை கையில் வைத்துக்கொண்டு “ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்கும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: செல்வம் சேர்க்கும் நிலை வாசல் பூஜை
இந்த பொருட்களை வாங்கி வைப்பதோடு அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய தான தர்மங்களினாலும் மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெற முடியும். இதன் மூலம் வறுமை நிலை மாறி அனைத்து விதமான செல்வங்களையும் பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்