- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநாளை மஹாகந்த சஷ்டியின் முதல் நாள் வழிபாடு

நாளை மஹாகந்த சஷ்டியின் முதல் நாள் வழிபாடு

- Advertisement -

முருக பக்தர்கள் நாளைய தினத்தை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போது மகா கந்த சஷ்டி விரதம் துவங்கும். அந்த கடுமையான, சக்தி வாய்ந்த விரதத்தை மேற்கொண்டு முருகப் பெருமானின் அருளை பரிபூரணமாக பெற. அந்த இனிய நாள் வந்துவிட்டது. நாளை சனிக்கிழமையிலிருந்து, மகா கந்த சஷ்டி விரதம் துவக்கம். நிறைய பேருக்கு இந்த கடுமையான விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் அந்த வரம் ஒரு சில பேருக்கு மட்டுமே கிடைக்கும். அதற்காக விரதம் இருக்க முடியாதவர்கள் எல்லாம் முருகப்பெருமானின் அருளை பெறாதவர்கள் என்பது அர்த்தம் கிடையாது. அடுத்த வருடம் இந்த விரதத்தை மேற்கொள்ள கூடிய பாக்கியத்தை எனக்கு கொடு முருகா என்று வேண்டிக் கொண்டால், நிச்சயம் உங்களுக்கு அந்த விரதம் இருக்கும் பாக்கியம் கிடைக்கும். சரி, நாளை உங்களால் கந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ள முடியாது, கடுமையான விரதம் எல்லாம் இருக்க முடியாது, முருகப்பெருமானின் அருள் ஆசியைப் பெற என்ன செய்வது.

- Advertisement -

நாளை காலை 6 மணிக்கு பூஜை அறையை விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த வேல்மாறல் பதிகத்தை படியுங்கள் போதும். உங்கள் துன்பமெல்லாம் விலகும். கந்த சஷ்டி விரதம் இருந்த பலனையும் அந்த முருகப்பெருமான் உங்களுக்கு கொடுத்து விடுவார். அது என்ன பாடல் அதை எப்படி படிப்பது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

நாளை காலை 6:00 மணிக்கு உங்கள் வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். 6 மணிக்கு முன்பாகவே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். நாளை காலை 6 மணிக்கு முருகனை நினைத்து வீட்டில் நெய் விளக்கு ஏற்றி, முருகப்பெருமானுக்கு செவ்வரளி பூக்களை போட்டு, பூஜை அறையில் அமர்ந்து இந்த மந்திரத்தை 27 முறை சொல்பவர்களுக்கு, முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

நாளை கந்த சஷ்டியின் முதல் நாள் வேல்மாறல் பாராயணம் செய்வது அத்தனை சிறப்பு. வீட்டில் இருக்கும் நோய் நொடி தீர, கடன் பிரச்சனை தீர, கணவன் மனைவி சண்டை தீர, குழந்தை பாக்கியம் பெற, எந்த பிரார்த்தனை இருந்தாலும் சரி இந்த வேல் மாறலை படியுங்கள். முழு வேல் மாறலையும் எங்களால் படிக்க முடியாது அதற்கான நேரம் இல்லை என்றாலும் இந்த நான்கு வரிகள் படித்தாலே போதும் வேல் மாறல் முழுமையாக பலன் நிச்சயம் கிடைக்கும்.

வேல்மாறல்

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை
கருத்தன்மயில் நடத்து குகன் வேலே

இதையும் படிக்கலாமே: வீட்டில் மூதேவி வாசம் இருப்பதை அறிய

நீங்கள் முருகப்பெருமானுக்கு சாப்பிடாமல் விரதம் இல்லை என்றாலும் பரவாயில்லை, நாளை காலை பூஜையறையில் விளக்கு ஏற்றி செவ்வரளி பூக்களை முருகனுக்கு போட்டு, உங்களால் முடிந்த இரண்டு கல்கண்டு நெய்வேத்தியம் வைத்து, இந்த பாடலை படித்துவிட்டு முருகா எனக்கு உன் ஆசீர்வாதம் தேவை, நீயே என் வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டும் என்று முருகன் பாதத்தில் எவர் ஒருவர் சரண் அடைகிறீர்களோ, அவர்கள் வாழ்க்கையில் துன்பம் விலகும் என்பதுதான் இந்த விரதத்திற்கு பின்னால் இருக்கும் நம்பிக்கை, இந்த வேல் மாறலுக்குப் பின்னால் இருக்கும் சக்தி, நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்