- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டில் மூதேவி வாசம் இருப்பதை அறிய

வீட்டில் மூதேவி வாசம் இருப்பதை அறிய

- Advertisement -

நம் வீட்டில் ஸ்ரீதேவியான மகாலட்சுமி வாசம் செய்வதை தான் நாம் அனைவரும் விரும்புவோம். மூதேவி என்பது எதிர்மறை ஆற்றலையும், எதிர்மறையான சிந்தனைகளையும் குறிக்கிறது. இந்த மூதேவி உங்கள் வீட்டில் இருந்தால் எப்படி அதனை அறிந்து கொள்வது? மூதேவியை விரட்டி அடித்து, வீட்டில் ஸ்ரீதேவியை தங்க வைப்பது எப்படி? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒரு வீட்டில் அடிக்கடி துர் சம்பவங்கள் நடந்தால் அந்த வீட்டில் மூதேவி இருப்பதாக நம்பிக்கை உண்டு. அமானுஷ்ய விஷயங்கள், மர்மமான சில கேள்விகள் உங்கள் வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் மூதேவி வாசம் செய்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். வீட்டில் ஸ்ரீதேவி வாசம் செய்யும் இடமானது, நாம் சமைக்கும் உப்பு ஆகும். உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். பாற்கடலில் இவள் இருப்பதால் உப்பிற்கு மகத்துவம் உண்டு. இந்த உப்பை அடிக்கடி நீங்கள் வீட்டில் கொட்டினால் அல்லது கைதவறி சிந்த நேர்ந்தால் அந்த இடத்தில் நிச்சயம் மூதேவி வாசம் செய்வதாக அறிந்து கொள்ள முடியும்.

- Advertisement -

வீட்டில் அடிக்கடி பால் திரிந்து போவது அல்லது பால் பாத்திரம் கருகி போவது போன்ற செயல்கள் நடந்தால் அந்த இடத்திலும் ஸ்ரீதேவி இல்லை, மூதேவி வாசம் செய்வதாக நாம் அறிந்து கொள்ள முடியும். எப்போதாவது இது போல நடந்தால் பிரச்சனை இல்லை, ஆனால் அடிக்கடி உங்களுக்கு இது நடந்தால் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து இருப்பதை நீங்கள் உணர முடியும்.

வீட்டில் தண்ணீர் சொட்டு சொட்டாக ஒழுகுவது மூதேவி வாசத்தை உங்களுக்கு தெரிவிக்கிறது. பைப் லைன் லீக் ஆவது, குழாய் சரி இல்லாமல் சொட்டு சொட்டாக தண்ணீர் விரயம் ஆவது போன்ற விஷயங்கள் நடந்தால் அதனை உடனடியாக சரி செய்து கொள்ளுங்கள். இச்செயல்கள் அதிகப்படியான கடன் சுமையை உங்களுக்கு உருவாக்கிவிடும். புதிதாக வாங்கிய செருப்பு அறுந்து போவது நல்ல சகுனம் அல்ல! இது மூதேவியை வரவழைக்க செய்யும். எண்ணெயை கீழே கொட்ட கூடாது, அது போல குங்குமத்தையும் கீழே சிதற விடக்கூடாது. அரிசி கழுவும் பொழுது அரிசியை வீணாக்கக் கூடாது. குறிப்பாக பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் அரிசியை கழுவும் பொழுது இது போல நடந்தால் இது மூதேவியின் செயலாகும்.

- Advertisement -

உடம்பில் எப்போதும் அசதியான ஒரு உணர்வு இருப்பது, சோம்பல் தனமாக இருப்பது, அடிக்கடி கொட்டாவி வருவது போன்ற விஷயங்கள் உங்களிடம் காண நேர்ந்தால் உங்களிடமும் மூதேவி வாசம் செய்வதாக நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஸ்ரீதேவி இருக்கும் இடங்களில் சுறுசுறுப்பு மட்டுமே இருக்கும். நேர்மறையான சிந்தனைகளும், நேர்மறையான எண்ணங்களும் இருக்கும். வீட்டில் முக்கியமான இந்த லட்சுமி கடாட்சம் நிறைந்த மேற்க்கூறிய பொருட்கள் கீழே சிந்தாது.

இதையும் படிக்கலாமே:
தீபாவளி வெள்ளிக்கிழமை அமாவாசை பரிகாரம்

தூசுகள் வீட்டில் இருந்தால் அதுவும் மூதேவி வாசம் செய்வதற்கு வழிவகுக்கும் எனவே அடிக்கடி வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். மாத கணக்கில் ஒட்டடைகள் படிய விடுவது வீட்டிற்கு நல்லதல்ல! இது மூதேவி வாசத்தை அதிகரிக்க செய்யும். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகளும், சண்டை சச்சரவுகளும், தொழில் நஷ்டமும் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகளும் உண்டு, எனவே இதிலிருந்து விடுபடுவதற்கு வாரம் ஒரு முறை சாம்பிராணி தூபத்துடன் கொஞ்சம் வெண்கடுகை சேர்த்து புகை போட்டு வாருங்கள், நல்ல பலன் கிடைக்கும்.

சற்று முன்