ஐப்பசி மாதம் என்பது மிகவும் சிறப்புக்குரிய மாதமாகவே திகழ்கிறது. ஐப்பசி மாதத்தில் தான் தீபாவளி பண்டிகை வரும். அதே போல் முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி திருவிழாவும் நடைபெறும். கந்த சஷ்டி திருவிழா என்பது அனைத்து முருகன் ஆலயங்களிலும் நடக்கக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. இது தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நடைபெறும். ஆறாவது நாள் சூரசம்ஹாரமும் ஏழாவது நாள் திருக்கல்யாணத்துடன் இந்த கந்தசஷ்டி விரதம் என்பது நிறைவடையும். அப்படிப்பட்ட இந்த கந்த சஷ்டி நாளில் நாம் சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம்குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
கந்த சஷ்டி மந்திர வழிபாடு
கந்த சஷ்டி என்றதுமே அனைவருக்கும் திருச்செந்தூர் தான் ஞாபகம் வரும். அதே போல் பலரும் இந்த கந்த சஷ்டி விரதத்தை பல விதங்களில் மேற்கொள்வார்கள். தினமும் காலையிலும் மாலையிலும் கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்றவற்றை பாராயணம் செய்யும் வழக்கமும் வைத்திருப்பார்கள். பலரது இல்லங்களிலும் காலையிலும், மாலையிலும் இந்த கந்த சஷ்டி கவசத்தை ஒலிக்கச் செய்வார்கள். ஒரு சிலர் வேலை வைத்து வழிபாடு செய்வார்கள். ஒரு சிலர் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வார்கள். ஒரு சிலர் மாலை அணிந்து வழிபாடு செய்வார்கள்.
ஒரு சிலர் விரதம் மட்டும் இருந்து வழிபாடு செய்வார்கள். விரதம் இருப்பவர்கள் கூட பாலும் பழமும் சாப்பிட்டு இருப்பார்கள், ஒரு சிலர் எதுவுமே சாப்பிடாமல் தண்ணீர் மற்றும் மிளகை வைத்து விரதம் இருப்பார்கள். இன்னும் சிலரோ ஏதாவது ஒரு வேளை மட்டும் சாப்பிடுவார்கள். இப்படி நம்மால் எந்த விரதத்தை இருக்க முடியுமோ அந்த விரதத்தை இருந்து முருகப்பெருமானை இந்த கந்த சஷ்டி விழாவில் வழிபாடு செய்வார்கள். அப்படி அவர்கள் வழிபாடு செய்யும்பொழுது சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக முருகப்பெருமான் என்றாலே அவருக்கு உகந்த பாடல்கள் பல கவசங்கள் பல இருக்கின்றன. கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், வேல்மாறல், வேல்விருத்தம் என்று நாம் கூறிக் கொண்டே செல்லலாம். இவற்றின் எதை படிக்க முடிகிறதோ அதை படிக்கலாம் அல்லது முருகப்பெருமானின் “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தையும் உச்சரிக்கலாம். முருகப்பெருமானின் திருநாமங்களையும் 108 முறை கூறி உச்சரிக்கலாம். முருகப்பெருமானின் மூலமந்திரமும் இருக்கிறது. அந்த மந்திரத்தையும் 108 முறை கூறி வழிபாடு செய்யலாம்.
இப்படி பல விதங்களில் நாம் முருகப் பெருமானுக்கு பாடல்களையும் கவசத்தையும் மந்திரத்தையும் கூறி வழிபாடு செய்வது உண்டு. குறிப்பாக இந்த கந்தசஷ்டி விரத சமயத்தில் நாம் சொல்லக்கூடிய இந்த மந்திரம் ஆனது நம்முடைய வாழ்க்கையில் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை நீக்கி செல்வ வளத்தை அதிகரிக்கும் என்றே கூற வேண்டும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மந்திரத்தை நாம் இந்த கந்த சஷ்டி விரத நாட்களில் தினமும் 106 முறை உச்சரிக்க வேண்டும். அதேபோல் இயன்றவர்கள் 27 முறை இந்த மந்திரத்தை காலையிலும் மாலையிலும் எழுதக்கூட செய்யலாம்.
இப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு செல்வ வளம் அதிகரிப்பதோடு மட்டும் அல்லாமல் தன்னம்பிக்கையும், தைரியமும் உண்டாகும். ஏதாவது ஒரு வகையில் நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் உண்டாகும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த மந்திரம் தான் இது.
மந்திரம்
ஓம் சௌம் சரவணபவ
இதையும் படிக்கலாமே:கடன் தீர்க்கும் நவம்பர் 3ஆம் தேதி மைத்ரேய முகூர்த்தம்
இந்த எளிமையான மூன்றெழுத்து மந்திரத்தை கந்த சஷ்டி ஆரம்பித்த நாளிலிருந்து தொடர்ச்சியாக 7 நாட்கள் யார் ஒருவர் கூறி முருகப்பெருமானை வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுடைய செல்வ வளம் உயரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.