- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் நவம்பர் 3ஆம் தேதி மைத்ரேய முகூர்த்தம்

கடன் தீர்க்கும் நவம்பர் 3ஆம் தேதி மைத்ரேய முகூர்த்தம்

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் பொருளாதாரத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால் கண்டிப்பான முறையில் அவர்கள் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பிறரிடம் இருந்து கடன் வாங்குவார்கள். அப்படி வாங்கிய கடனை திருப்பி அடைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டும் அந்த முயற்சிகளில் வெற்றி பெற இயலவில்லை என்றாலோ அந்த கடனை அடைப்பதற்குரிய பொருளாதார முன்னேற்றம் ஏற்படவில்லை என்றாலோ அதனால் அவர்களுக்கு பல விதங்களில் பிரச்சனைகள் உண்டாகும். இந்த பிரச்சனைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் கடன் அடைய மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி வரக்கூடிய மைத்ரேய முகூர்த்தத்தில் எந்த முறையில் வழிபாடு செய்தால் கடன் பிரச்சினை தீரும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம்

ஒவ்வொரு மாதமும் மைத்ரேய முகூர்த்தம் என்பது வரும். இது கடனை அடைப்பதற்காக உதவக்கூடிய முகூர்த்தமாக கருதப்படுகிறது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் நம்மால் இயன்ற ஏதாவது ஒரு தொகையை எடுத்து கடன் அடைக்க வேண்டும் என்று எடுத்து வைத்தோம் என்றால் விரைவிலேயே அந்த கடன் அடைந்து விடும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நாம் எடுத்து வைக்கும் போது சில வழிபாட்டு முறைகளையும் பின்பற்றினோம் என்றால் கண்டிப்பான முறையில் கடன் அடைவதற்குரிய வழிகள் பிறக்கும் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. அந்த வகையில் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி வரக்கூடிய மைத்ரேய முகூர்த்த வழிபாடு முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 3 மணியிலிருந்து 4:30 மணிக்குள் இருக்கக்கூடிய நேரத்தை தான் மைத்ரேய முகூர்த்தம் என்று கூறுகிறோம். அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த நேரத்தில் நாம் கோதுமையில் தீபம் ஏற்ற வேண்டும். ஒரு தட்டு நிறைய முழு கோதுமையை பரப்பி அதற்கு நடுவே அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெயோ அல்லது நெய்யோ ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

பிறகு நமக்கு எத்தனை கடன் பிரச்சினைகள் இருக்கிறதோ அத்தனை எண்ணிக்கையில் வெற்றிலையை எடுத்து அந்த அகல் விளக்கை சுற்றி வைத்து அதன் மேல் அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு எத்தனை எண்ணிக்கையில் கடன் இருக்கிறதோ அத்தனை எண்ணிக்கையில் பிரியாணி இலையை எடுத்து எவ்வளவு கடன் இருக்கிறது என்பதை எழுத வேண்டும். எழுதிய இந்த பிரியாணி இலையை ஒவ்வொரு அகல் விளக்கிற்கு முன்பாகவும் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

அசல் தொகையில் இருந்து சிறிய தொகையை எடுத்து அந்த பிரியாணி இலைக்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு நாட்டு மருந்து கடைகளில் புனுகு என்று விற்கும் இந்த புனுகை வாங்கி வந்து பிரியாணி இலையிலும் நாம் வைத்திருக்கும் அசல் தொகையிலும் தடவ வேண்டும். இப்படி செய்து முடித்த பிறகு “ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் சூரிய நாராயணாய வசி வசி” என்னும் மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரித்து முடித்த பிறகு பிரியாணி இலையை விளக்கில் பொருத்தி எரித்து விட வேண்டும்.

இந்த விளக்குகள் முழுவதும் தானாக தான் மலை ஏற வேண்டுமே தவிர்த்து நாம் குளிர வைக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. அவை அனைத்தும் தானாக மலையேறிய பிறகு அதில் இருக்கக்கூடிய கோதுமையை எடுத்து நம் வீட்டிற்கு வடக்கு திசை பக்கம் தூவி விட வேண்டும். அன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக மேற்சொன்ன அந்த மந்திரத்தை 27 முறை வெள்ளை நிற பேப்பரில் எழுத வேண்டும். இப்படி எழுதி முடித்த பிறகு உங்களுடைய கடன் பிரச்சினைகள் முற்றிலும் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு உறங்கச் செல்ல வேண்டும். இந்த வழிபாட்டை செய்பவர்கள் அன்றைய தினம் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் எந்தவித தீய பழக்கங்களிலும் ஈடுபடாமல் இருப்பது என்பது வேண்டுதலை விரைவிலேயே நிறைவேற்றும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:அகத்தியர் சொன்ன முருகன் மந்திரம்
இந்த எளிமையான சூரிய பகவானுக்குரிய வழிப்பாட்டு முறையை நவம்பர் மாதம் மூன்றாம் தேதி மைத்ரேய முகூர்த்தத்தில் முழு மனதோடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழி பிறக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்