பொல்லாத கண் திருஷ்டி இருந்தால் எவ்வளவு உழைத்தாலும் சிலரால் முன்னேற முடியாமல் போய்விடும். நம் உடன் இருந்து கொண்டே நம் மீது பொறாமைப் படுபவர்களை நம்மால் ஒன்றும் செய்து விட முடிவதில்லை. இந்த பொல்லாத கண் திருஷ்டியை கண்டு இனி ஒருபோதும் அஞ்ச தேவையில்லை. மற்றவர்களின் கண் பார்வையால் தான் நம்மால் முன்னேற முடியவில்லை என்று நீங்கள் நினைத்தால் வீட்டில் இதை செய்து வாருங்கள், படிப்படியான முன்னேற்றம் நிச்சயம் உண்டாகும். கண் திருஷ்டி நீங்க என்ன செய்வது? என்பதை தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.
கண் திருஷ்டி நீங்குவதற்கு தொடர்ந்து உங்களுடைய முன்னேற்றத்தில் தடை இல்லாமல் இருப்பதற்கு வீட்டில் பூஜை அறையில், இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு கண்ணாடி டம்ளர் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீர் நிரப்பி சிறிதளவு வெட்டிவேரை மூழ்கும்படி போட்டு வையுங்கள். இதனுள் ஒரு சிறிய எலுமிச்சை பழத்தை முழுவதுமாக அப்படியே போடுங்கள். இதை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் செய்து வர வேண்டும்.
அடுத்த வெள்ளிக்கிழமை வரும் பொழுது வெட்டிவேர் மற்றும் எலுமிச்சையை நீக்கிவிட்டு மீண்டும் புதிதாக தயாரித்து வைக்க வேண்டும். தொழில் செய்யும் இடங்களிலும் இது போல செய்யலாம். சிலர் எலுமிச்சை பழத்தை மட்டும் வைத்திருப்பார்கள். இதுவும் கண் திருஷ்டிக்காக செய்யும் ஒரு எளிய பரிகாரம் தான். எலுமிச்சை பழம் நீரில் அழுகி போகக் கூடாது. அப்படி அழுக நேர்ந்தால் உங்களுக்கு கண் திருஷ்டி இருப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.
ஒரு வாரம் வரை அந்த எலுமிச்சை பழமும், வெட்டிவேரும் அழுகாமல் அப்படியே இருந்தால் உங்களுக்கு திருஷ்டிகள் எதுவும் இல்லை. நீங்கள் உங்களுடைய முயற்சிகளால் தொடர்ந்து முன்னேற போகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். வெட்டிவேரின் வாசம் பணத்தை ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டது. வெட்டிவேர் வாசம் மகாலட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில், தொழில் செய்யும் ஸ்தாபனத்தில் கண்ணாடி டம்ளரில் இது போல வெட்டிவேரை போட்டு வையுங்கள். மளமாள உங்களுடைய கல்லாப்பெட்டியில் பணம் நிறைய ஆரம்பிக்கும்.
வெள்ளிக்கிழமை தோறும் கண்ணாடி டம்ளரில் இருக்கும் தண்ணீரை கீழே கொட்டிவிட்டு, மீண்டும் புதியதாக தண்ணீரை ஊற்றி, கொஞ்சம் வெட்டிவேரை மாற்றி வைத்து, எலுமிச்சை பழத்தையும் புதிதாக போடுங்கள். ரொம்பவே சக்தி வாய்ந்த இந்த எளிய பரிகாரம் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மற்றவர்களால் ஏற்படக்கூடிய தோல்விகளிலிருந்து மீண்டு வெற்றிப்படியை நோக்கி முன்னேறுவீர்கள். யாருடைய பொறாமை பார்வைகளும் உங்களை பாதிக்காமல் திருஷ்டிகள் கழியும்.
இதையும் படிக்கலாமே:
6-11-2024 வளர்பிறை பஞ்சமி வாராகி மந்திரம்
இதை பூஜை அறையில் மட்டும் தான் வைக்க வேண்டும். தொழில் செய்யும் இடங்களில் சுவாமி படத்திற்கு முன்பாக வையுங்கள். பலரின் பார்வை படும்படி வையுங்கள். அவர்களுடைய மனதாலும், விழியாலும் வரக்கூடிய திருஷ்டிகள் அனைத்தும் அது ஈர்த்து வைத்துக் கொள்ளும். இதனால் உங்களுடைய தொழில் மேலும் மேலும் சிறந்து முன்னேற்றத்தை படிப்படியாக நீங்கள் காண்பீர்கள். வெட்டிவேரை கல்லாப்பெட்டியிலும் சிறிதளவு போட்டு வையுங்கள், பணம் அதிகரிக்கும்.