இன்று கந்த சஷ்டி விரதத்தின் ஐந்தாவது நாள். நாளைய தினம் சூரசம்காரம் நடக்கும், கந்த சஷ்டி விரதத்தின் ஆறாவது நாள். அசுரனை அழிப்பதற்கு முருகப்பெருமான், சஷ்டி விரதத்தின் ஐந்தாவது நாளான இன்று, தாய் சக்தி தேவியிடம் இருந்து வேல் வாங்கிய வைபவத்தை தான், இன்று விமர்சியாக கொண்டாடுவார்கள். சிக்கலில் சிங்காரவேலன் திருத்தளத்தில் இந்த வைபவம் மிக மிக சிறப்பாக நடைபெறும்.
முருகப்பெருமான் தாயிடம் இருந்து வேலை தன் கையில் வாங்கிய பிறகு, சிக்கலில் இருக்கும் முருகப்பெருமானின் சிலை வியக்கக்கூடிய அதிசயத்தக்க காட்சி இன்று நடைபெறும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் நாமும் முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேல் வழிபாட்டை தவற விடலாமா. நிச்சயம் தவறவிடக்கூடாது. இன்று முருகப்பெருமான் முன்பு வேல் முன்பு சொல்ல வேண்டிய மந்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
இன்று உங்களுடைய வீட்டில் வேல் இருந்தால் அந்த வேலுக்கு கட்டாயம் சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்து சந்தன குங்கும பொட்டு வைத்து ஏதாவது ஒரு பழ வகை நெய்வேதியமாக வைத்து வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வீட்டில் வேல் இல்லை என்றாலும் பரவாயில்லை. முருகப்பெருமானின் திருவுருவப்படத்தில் இருக்கும் வேலுக்கு சந்தன குங்குமம் பொட்டு வைத்து அந்த திருவுருவப்படத்திற்கு, பொட்டு வைத்து பழ வகைகள் நெய்வேத்தியம் செய்து வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
உங்களால் பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்ல முடியும் என்றால் அந்த கோவிலுக்கு செல்லுங்கள். முருகன் கோவிலில் கட்டாயம் சஷ்டி விரத நாட்களில் காலை மாலை இருவேளை அபிஷேகம் நடக்கும். அந்த வேலுக்கு அபிஷேகம் செய்த உங்களால் முடிந்த பசும்பால் வாங்கி தானம் கொடுப்பது சிறப்பு.
நம்முடைய வாழ்க்கையில் நாம் முன்னேறி விட்டால் அதை பார்த்து கண் திருஷ்டி வைப்பதற்கும் ஏளனமாக பேசுவதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் நம்முடைய எதிரிகள் பட்டியலில் வருவார்கள். நாம் முன்னேறுவதை கண்டாலே இவர்களுக்கு பிடிக்காது. இப்படிப்பட்டவர்களை எல்லாம் சரி செய்ய இன்று நாம் முருகர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். முருகர் நம்முடைய எதிரிகளை அழித்துவிடுவாரா. நிச்சயம் கிடையாது முருகன் அழைப்பவன் அல்ல.
எதிரிகளைத் திருத்தக் கூடியவன். சூரகசம்காரம் செய்த பிறகு அரக்கர்களை மயிலாகவும் சேவலாகவும் மாற்றி தன்னுடனே வைத்துக் கொண்ட கருணை உள்ளம் படைத்தவன் முருகன். அவனுக்கு அழிக்க தெரியாது. ஆக்க மட்டும்தான் தெரியும். ஆகவே, எதிரியின் கெட்ட எண்ணங்களை, நல்ல எண்ணங்களாக மாற்றக்கூடிய சக்தி இன்றைய வழிபாட்டிற்கு உண்டு.
தொழிலில் எதிரி, சொந்த பந்தத்தில் எதிரி, படிக்கக்கூடிய இடத்தில் எதிரி, வேலைக்கு செல்லக்கூடிய இடத்தில் இருக்கும் எதிரி, இப்படி எல்லா எதிரிகளும் நண்பர்களாக மாறிவிடுவார்கள் கவலைப்படாதீங்க. இன்றைய நாள் முருகர் வழிபாட்டை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எதிரியால் பிரச்சனைகள் என்பது வராது இதுதான் இன்றைய வழிபாட்டின் பலன். சரி வேல் முன்பு படிக்க வேண்டிய மந்திரம் தான் என்ன.
சத்ரு சம்ஹார வேல் பதிகம்
சண்முகக் கடவுள் போற்றி !
சரவணத் துதித்தாய் போற்றி
கண்மணி முருகா போற்றி !
கார்த்திகை பாலா போற்றி !
தண் மலர் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி !
விண்மதி வதன-வள்ளி வேலவா போற்றி ! போற்றி !
மேலும் மயிலும் துணை.
இதையும் படிக்கலாமே: பல பிரச்சினைகளை தீர்க்கும் பச்சையம்மன் வழிபாடு
இந்த எளிமையான போற்றி மந்திரத்தை சொல்லி முருகனை வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்