பிரச்சனை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் வரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. பிரச்சனை இல்லாத வாழ்க்கை யாருக்கும் இருக்காது என்று தான் கூற வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். ஒரு சிலருக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை சந்தித்து அந்த பிரச்சினையில் இருந்து வெளியே வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். அப்படி முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது தெய்வ அருளும் நமக்கு பரிபூரணமாக இருக்கும் பட்சத்தில் அந்த முயற்சிகள் வெற்றியடைந்த அந்த பிரச்சினையிலிருந்து வெளியே வந்துவிடலாம். அந்த வகையில் நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பச்சையம்மனை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பச்சையம்மன் வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் பிறப்பதில் இருந்து இறப்பது வரை பலவிதமான பிரச்சனைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு விதமான தீர்வுகள் என்பது இருக்கும். பலருக்கும் அந்த பிரச்சினைக்குரிய தீர்வுகள் தெரிந்தும் அந்த பிரச்சினையில் இருந்து வெளிவர முடியாமல் கஷ்டப்படுவார்கள். அப்படி கஷ்டப்படக் கூடியவர்கள் செய்யக்கூடிய ஒரு அம்மன் வழிபாட்டை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான பெயரில் அம்மன் அழைக்கப்படுகிறாள், ஒவ்வொரு அம்மனுக்கும் ஒவ்வொரு விதமான சக்திகளும் இருக்கும். நமக்கு என்ன தேவையோ அந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எந்த அம்மனை வழிபட வேண்டும் என்று தெரிந்து கொண்டாலே அந்த பிரச்சனைகள் அனைத்தையும் நம்மால் எளிதில் தீர்த்து விட முடியும். அந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவக்கூடிய தெய்வமாக பச்சையம்மன் திகழ்கிறார்.
பச்சையம்மன் என்றாலே பசுமைக்கு ஆதாரமாக திகழக்கூடியவள் என்று பொருள்படும். மேலும் பச்சை நிறத்திலேயே இந்த அம்மன் இருக்கிறார் என்பதால்தான் இந்த அம்மனுக்கு பச்சையம்மன் என்ற பெயர் வந்தது. இந்த அம்மனை வழிபடும் பொழுது நம்முடைய வாழ்க்கையும் பசுமையாக மாறும் என்று கூறப்படுகிறது. எதிரிகள் தொல்லை நீங்கவும், பணவரவு அதிகரிக்கவும், கடன் பிரச்சினை தீரவும், திருமணம் நடைபெறவும் என்று நம் வாழ்க்கையில் எந்தெந்த பிரச்சனைகளுக்காக நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோமோ அந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு இந்த அம்மனின் வழிபாடு என்பது உகந்ததாகவே கருதப்படுகிறது.
தீராத கஷ்டத்தில் மாட்டிக்கொண்டு தவித்துக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் இந்த பச்சையம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்பது அதீத பலனை தரும். இயன்றவர்கள் ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமையில் பச்சையம்மன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. அவ்வாறு இந்த அம்மனின் ஆலயத்திற்கு நாம் செல்லும் பொழுது பச்சை குங்குமத்தை வாங்கிக்கொண்டு செல்லவேண்டும்.
அந்த குங்குமத்தை அம்மனின் திருப்பாதங்களில் வைக்க சொல்லிவிட்டு நம் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபர்களின் பெயரையும் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அந்த குங்குமத்தை திரும்ப வாங்கி வந்து நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் அந்த பச்சை குங்குமத்தை நெற்றியில் வைக்க வேண்டும். இந்த பச்சை குங்குமத்தை சிவப்பு குங்குமத்திற்கு கீழ் தான் பெண்கள் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களாக இருக்கும் பட்சத்தில் இரண்டு புருவங்களுக்கு நடுவிலும் இதை வைக்க வேண்டும். வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வந்தால் குங்குமம் தருவது பலரது வழக்கமாக இருக்கும். அவ்வாறு குங்குமம் தரும் பொழுது இந்த பச்சை குங்குமத்தை தரக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே தரித்திரம் நீக்கும் பஞ்சமி தீபம்
இந்த முறையில் பச்சையம்மனை பச்சை குங்குமத்தை வைத்து முழு மனதோடு வழிபடுபவர்களுடைய வாழ்க்கை என்றென்றைக்கும் பசுமையாக இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.