ஒருவர் நம்மை புரிந்து கொள்ளாமல் எதிரியாக பாவித்து செயல்பட்டால் அவர்களை நாம் எப்படி பழிவாங்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சில மூர்க்க குணங்கள் இருக்கும். இந்த அடிப்படை குணங்கள் அவர்கள் மனம் வைத்தால் மட்டும் தான் அவர்களால் மாற்றிக் கொள்ள முடியும். மற்றவர்கள் என்னதான் முயற்சி செய்தாலும், அதை மாற்ற முடியாது. அப்படிப்பட்ட குணங்களில் ஒன்று தான் இந்த பிசாசு குணம். இப்படிப்பட்டவர்களை பழி வாங்குவது எப்படி? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.
நாம் அவர்களை எதிரியாக பார்க்க விட்டாலும், நம்மை அவர்கள் எதிரியாக பார்த்து தேவையில்லாத சில வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் சுய அறிவுடன் செயல்பட மாட்டார்கள். சுயமாக இவர்களுக்கு சிந்திக்கவே தெரியாது. எதையாவது நம்பிக் கொண்டு நம் உயிரை எடுத்துக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் மற்றவர்களுடைய தெய்வ சக்தியை அபகரித்து வாழக் கூடியவர்கள். நாம் செய்வது எல்லாம் திருப்பி இவர்களும் செய்வார்கள். பேராசை குணம் கொண்ட இவர்களை நம்மால் திருத்துவது என்பது முடியாத காரியம். பார்ப்பதற்கு மிகவும் அப்பாவிகள் போல் இருப்பார்கள், ஆனால் இவர்களுடைய குணம் பிசாசு குணம் ஆகும்.
இப்படிப்பட்ட எதிரிகளை பழி வாங்குவது என்னும் எண்ணத்தை முதலில் கைவிட்டு விடுங்கள். இவர்கள் கைகளால் தெரியாமலும் எந்த உணவையும் வாங்கி உண்ணாதீர்கள். இவர்களை புறக்கணியுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தண்ணி இருங்கள். அப்படி இருக்க முடியாத சூழ்நிலை இருந்தாலும், அவர்கள் உங்களுடைய குரலை கூட கேட்கக் கூடாது. உங்களுடைய பார்வையில் கூட அவர்கள் படாதவாறு இருந்து கொள்ளுங்கள். இப்படி எல்லாம் அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதால் என்ன நடக்கும்?
அவர்களுடைய இந்த பிசாசு குணமே அவர்களுக்கு தண்டனை கொடுத்து விடும். சுய அறிவு இல்லாமல் செயல்படும் இவர்களுக்கு, அதுவே மிகப் பெரிய தண்டனையாக இருக்கும். இத்தகைவர் நீண்ட காலமாக மகிழ்ச்சியாக இருந்து விட முடியாது. எதிலாவது மாட்டிக் கொண்டு முழிப்பார்கள். இப்படிப்பட்டவர்களை பழி வாங்க வேண்டும் என்று நம்மை நாம் தாழ்த்திக் கொள்வதை விட, இவர்களிடமிருந்து விட்டு விலகுவது தான் புத்திசாலித்தனம்.
நமக்கு ஒருவர் எதிரியாக இருப்பதற்கு கூட, அவர்களுக்கு தகுதி வேண்டும் என்று உங்களின் தகுதியை உயர்த்திக் கொள்ளுங்கள். சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்பவர்கள், மெச்சூரிட்டி இல்லாதவர்கள், பக்குவ படாதவர்கள் இவர்கள். இவர்களை பழி வாங்கி அவர்களைப் போலவே நீங்களும் மாறி விடாதீர்கள். உங்களுடைய பார்வை அவர்கள் மீது படும் வரை தான் அவர்கள் உங்களைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிக் கிடப்பார்கள். இல்லையென்றால் அப்படியே சிறிது காலத்தில் விட்டு விடுவார்கள்.
இதையும் படிக்கலாமே:
சஷ்டி விரதத்தின் 6வது நாள். சஷ்டி கவசம் படிக்கும் முறை
எதிரி என்பவர்கள் பலமானவர்களாக இருக்க வேண்டும். நம்மை காட்டிலும் நாம் உயர்வதற்கு உறுதுணையாக, போட்டியாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு தொழில், கல்வி, கலை, உத்தியோகம், வாழ்க்கை முறை என்று ஒவ்வொரு விஷயத்திலும் முன்னேற்றத்தை நோக்கி அவர்கள் நம்மை நடத்தினால் தான் அவர்கள் நமக்கான எதிரி என்பதை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். மற்றவர்களை உதறித் தள்ளுங்கள், பழி வாங்க வேண்டாம் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகிறது.