- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசஷ்டி விரதம் முடிந்த பின் கடைபிடிக்க வேண்டியவை

சஷ்டி விரதம் முடிந்த பின் கடைபிடிக்க வேண்டியவை

- Advertisement -

இன்றைய தினம் ஏழாவது நாள். சஷ்டி விரதத்தை நிறைவு செய்த பிறகு, விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் ஒரு சில தவறுகளை தெரியாமல் செய்து விடுவார்கள். அப்படி சஷ்டி விரதம் முடிந்த பின்பு நாம் செய்யக்கூடிய தவறுகள், நாம் இருந்த இந்த ஏழு நாள் விரதத்திற்கான முழு பலனை நிச்சயம் கொடுக்காது. சஷ்டி விரதம் முடிந்த பின்பும் நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன சஷ்டி விரதம் முடிந்து கட்டாயம் நாம் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

சஷ்டி விரதம் நிறைவு செய்த பின்பு பின்பற்ற வேண்டியவை.

முருகப்பெருமான் நேற்றைய தினம் சூரபத்மனை வதம் செய்தார். அந்த காலத்தில் சூரபத்மன் அசுரன் ஆக வளம் வந்தான். கலியுகத்தில் சூரபத்மன் நம்முடைய மனதிலும் நம்முடைய கெட்ட எண்ணத்திலும் தான் குடி கொண்டுள்ளான். நம்முள் இருக்கும் சூர பக்தனை அழிப்பதற்காக, நாம் மேற்கொள்ள கூடிய விரதம் இந்த கந்த சஷ்டி விரதம்.

- Advertisement -

6 நாட்களும் நம்முடைய மனதில் கோபம், பொறாமை, எரிச்சல், பழிவாங்கும் குணம், கெட்ட எண்ணம், எதுவுமே இருந்திருக்காது. நம்முடைய மனது முழுவதும் முருகப்பெருமான் நினைவு மட்டும் தான் நிறைவாக இருந்திருக்கும் அல்லவா. முருகப்பெருமான் நம் மனதிற்குள் குடி வந்தவுடன், நம் மனதில் சூரபத்மனாக தங்கி இருந்த அத்தனை கெட்ட விஷயங்களும், நம் உடம்பை விட்டும் நம் மனதை விட்டும் வெளியேறி இருக்கும்.

ஆக இந்த சஷ்டி விரதத்தை நீங்கள் எப்படி கடைப்பிடித்தீர்களோ, சஷ்டி விரதத்தின் போது எப்படியெல்லாம் இருந்தீர்களோ, அதே போல தான் இனிவரக்கூடிய நாட்களிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் நிரந்தரமாக உங்கள் உடம்பில் சூரபத்மன் என்னும் கொடிய அரக்கன் வந்து குடியேறாமல் இருப்பான். இது முதல் விஷயம். சஷ்டி விரதத்தில் இருந்தது போல சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுடைய உள் உணர்வு, மனது செயல்பாடுகள், எல்லாம் எப்படி நேர்த்தியாக இருந்தது. அதேபோல இனி வரும் நாட்களிலும் வாழ்க்கையை நடத்த வேண்டும்.

- Advertisement -

சில பேர் எல்லாம் சஷ்டி விரதம் முடிந்த உடனே அசைவம் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தில் வீட்டில் தடபுடலாக அசைவ சாப்பாடு சமைப்பார்கள். அவ்வளவுதான் எந்த வேகத்தில் அசைவம் சாப்பிட்டு அடாவடித்தனமாக உணவு பழக்க வழக்கத்தை மாற்றுகின்றீர்களோ, அவ்வளவு சீக்கிரத்தில் உங்களுக்குள் இருக்கும் சூரபத்மன் மீண்டும் எழப் பார்க்க தொடங்கி விடுவான். ஆகவே உடனடியாக நாளைய தினமே அசைவம் சாப்பிட வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

ஒரு சில நாட்கள் கழியட்டும். பொறுமையாக இருங்கள். வீட்டில் குடியிருக்கும் முருகனை உடனடியாக வெளியே அனுப்பாதீர்கள். உங்களை நிரந்தரமாக அசைவம் சாப்பிட வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஒரு இரண்டு, மூன்று நாட்கள் போகட்டும். விரதம் இருந்து உங்களுடைய வயிறு சுத்தமாக இருக்கிறது. உணவுகள் எதுவும் சரிவர வயிற்றுக்குள் செல்லாமல் வயிறு இப்போது வெறுமையான நிலையில் இருக்கிறது. ஆகவே உடனடியாக காரமும், சீக்கிரம் ஜீரணம் ஆகாத உணவுகளையும் உட்கொள்ளும் போது நிச்சயம் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே அசைவம் உடனடியாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.

- Advertisement -

கட்டாயம் இன்றைய நாள் எல்லோரும் முருகன் திருக்கல்யாணத்தை பார்ப்பதற்காக அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்வோம்? முருகனை தரிசனம் செய்வோம். முருகன் இப்போது புது மாப்பிள்ளை ஆக இருக்கிறார். முருகன் திருக்கல்யாணம் முடிந்து வீடு திரும்பும் போது, அந்த முருகப்பெருமானை பார்த்து இரண்டு மூன்று வினாடிகள் முருகா நீ என்னுடைய வீட்டிற்கு விருத்திருக்கு கட்டாயம் வர வேண்டும் என்று அவரை அழைத்து வாருங்கள்.

நாளை தினம் சனிக்கிழமை காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு, முருகப்பெருமானுக்கு உங்களுடைய விருந்து சமையல் சமைக்கலாம். சாதம் சாம்பார் பருப்பு வடை பாயசம் ஒரு கூட்டு பொரியல் செய்து வாழை இலையில் அதை பரிமாறி, பூஜை அறையில் முருகனுக்கு படையல் போடலாம். நாளை மதியம் 12 மணிக்கு இந்த வழிபாட்டை மேற்கொண்டால், புது மாப்பிள்ளை ஆக இருக்கும் முருகப்பெருமான் தம்பதியோடு உங்கள் வீட்டுக்கு வருகை தந்து உங்கள் குடும்பத்தை ஆசீர்வாதம் செய்வார் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: சஷ்டி விரதம் முடித்தவுடன் சாப்பிட வேண்டிய உணவு

அது மட்டுமல்லாமல் படையில் போட்ட அந்த சாப்பாட்டை எடுத்து கணவன் மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும். மேல் செல்ல வழிபாட்டை மேற்கொள்பவர்கள் இல்லற வாழ்க்கையில் பிரிவினை வராது. சந்தோஷம் குடும்பத்தில் நிலைவாக நிறைந்திருக்கும் நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்