- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசொல்வாக்கு செல்வாக்கு உயர சுக்கிரன் திலகம்

சொல்வாக்கு செல்வாக்கு உயர சுக்கிரன் திலகம்

- Advertisement -

ஒரு மனிதனின் சொல்வாக்கும் செல்வாக்கும் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால், சுக்கிர பகவானின் அனுகிரகம் தேவைப்படுகிறது. நாம் பேசக்கூடிய வார்த்தைகளுக்கு ஒரு சக்தி வேண்டும், நாம் அடுத்தவர்களுக்கு ஒரு வாக்கு கொடுத்தால், அது நிறைவேற வேண்டும், உயர் அதிகாரிகளாக வேலை செய்தால், நாம் சொல்வதை நமக்கு கீழ் பணிபுரிபவர்கள் கேட்க வேண்டும்.

தொழில் விஷயமாக ஒரு இடத்திற்கு செல்கின்றோம். நம்முடைய தரப்பு வாதத்தை வைக்கும் போது அந்த வார்த்தைகளுக்கு உயிர் கிடைக்க வேண்டும். நீங்கள் பேச்சாளர்களாகவோ, வாத்தியாராகவோ அல்லது வக்கீலாகவோ இருக்கிறீர்கள். உங்களுக்கு உங்களுடைய தொண்டைக் குழியில் இருந்து வரக்கூடிய வார்த்தையும், பேச்சும் தான் உயிர் நாடி.

- Advertisement -

இப்படி நீங்கள் சொல்லக்கூடிய வார்த்தைகள் எல்லாம் அடுத்தவர்கள் செவிகளில் ஆழ பதிய வேண்டும் உங்களுடைய சொல்வாக்கு செல்வாக்கு நாலு பேர் மத்தியில் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்றால், சுக்கிர பகவானை நினைத்து என்ன பரிகாரம் செய்வது ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா. ஆனால் இதுபோல பரிகாரத்தை செய்துவிட்டு அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்கக் கூடாது கெட்ட வார்த்தைகள் எல்லாம் பேசக்கூடாது.

செல்வாக்கு செல்வாக்கு உயர

இந்த பரிகாரத்திற்கு நமக்கு கொஞ்சம் குங்கும பூவும், கொஞ்சம் தேனும் தேவை. உள்ளங்கைகளில் ஒரே ஒரு குங்குமப்பூ, ஒரு சொட்டு தேன் போட்டு குழைத்தால், லேசான சிவப்பு நிறத்தில் ஒரு திலகம் கிடைக்கும். அதை உங்கள் கையில் எடுத்து தொண்டை குழியில் வைத்துக் கொள்ளவும். வலது கை ஆள்காட்டி விரலால் எடுத்து தொண்டைக் குழியில் வைத்து ‘ஓம் சுக்ராய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி விடுங்கள். (தொண்டைக் குழி இருக்கிறது அல்லவா.

- Advertisement -

விபூதி நெற்றியில் இட்டுக்கொண்டு கழுத்தில் கொஞ்சம் பூசி கொள்வோம். அந்த தொண்டை குழி). பிறகு உங்களுடைய வேலையை துவங்கலாம். உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளலாம், கழுத்தில் இருக்கும் அந்த தேன் வெளியில் தெரியாது. அதை மீண்டும் துடைக்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. அதை அப்படியே விட்டு விடுங்கள். ஒரு சொட்டை விட குறைவான அளவுதான் வைக்கப் போகின்றோம். அதன் மூலம் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. பிசுபிசுப்பு தன்மையும் அவ்வளவாக தெரியாது.

முக்கியமான மீட்டிங் செல்ல வேண்டும், அல்லது தொழில் ரீதியாக முக்கியமாக யாரையாவது சந்திக்க வேண்டும், உங்களுடைய பேச்சை கேட்டே உங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும், என்ற சூழ்நிலைகள் வரும்போது இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏதாவது சுப நிகழ்ச்சிகளுக்காக செல்கிறீர்கள் அல்லது சண்டை போட்ட உறவு ஒன்று சேர செல்கிறீர்கள் எனும் போதும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

நிச்சயமாக உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும். பலமுறை சென்று ஒரு விஷயத்தில் நீங்கள் தோற்றுவிப்பீர்கள். அந்த விஷயத்தை, இந்த பரிகாரத்தை செய்த பின் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கான வெற்றி உங்களை வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர செய்யக்கூடாத தவறு

எந்த பரிகாரத்தை துவங்குவதற்கு முன்பும் குலதெய்வத்தின் ஆசியை பெற்றுக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்திற்கும் அப்படித்தான். இத்தனை நாள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் கிடையாது. தேவைப்படும் போது இந்த எளிமையான பரிகாரத்தை பயன்படுத்தி பலன் பெறுங்கள். நீங்கள் பரிகாரத்துக்கு பயன்படுத்தும் தேனும் குங்குமப்பூவும் சுத்தமானதாகவும், கலப்படம் இல்லாததாகவும் இருந்தால் பலன் உடனடியாக இரட்டிப்பாக கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்