இன்று பதினோராம் தேதி, 11 வது மாதம். 1111 சேர்ந்து வந்திருக்கக்கூடிய அதிசயத்தக்க நாள். பெரும்பாலும் இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இன்றைய அதிசயம் வாய்ந்த நாளில் நம்முடைய பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள், நமக்கு பல மடங்கு பலன் தரும். ஏனென்றால் 1 என்பது ஏஞ்சல் நம்பர், 1111 மொத்தமாக நான்கு ஒன்று, சேர்ந்து வந்திருக்கக்கூடிய இந்த நாளை நாம் தவறவிடவே கூடாது.
உங்கள் கடன் சுமையிலிருந்து விடுபட இன்று காலை 11 மணி, 11 நிமிடத்திற்கு, இந்த பரிகாரத்தை செய்யலாம். காலை நேரத்தை தவறவிட்டவர்கள் இரவு 11 மணி, 11 நிமிடத்திற்கு இந்த பரிகாரத்தை செய்ய தவற விடாதீங்க. இது ஒரு அரிய வாய்ப்பு. இன்றைய நாளை தவிர விட்டால், இந்த நாளை நாம் மீண்டும் சந்திக்க இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டி இருக்கும்.
11-11 கடன் அடைய பரிகாரம்
இன்று மனிதர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்த கடன் பிரச்சனை. கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கு மிக மிக எளிய பரிகாரம் என்றால், அது இந்த பிரியாணி இலையை நெருப்பில் எரித்து செய்யக்கூடிய பரிகாரம். தாந்திரீக பரிகாரங்களில் இது ஒரு சக்தி வாய்ந்த பரிகாரம். கிழிசல் இல்லாத சுத்தமான ஒரு பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் ஒரு பச்சை நிற பேனாவில் உங்களுடைய கடன் பிரச்சனையை எழுதுங்கள். உதாரணத்திற்கு இப்படி எழுதலாம். ‘1,00,000 ரூபாய் கடன் சீக்கிரம் அடைய வேண்டும்’. என்று எழுதலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட நபரிடம் நீங்கள் பணம் வாங்கி ரொம்பவும் கஷ்டப்படுவீர்கள், அந்த நபரின் பெயரை எழுதி அந்த நபரிடம் வாங்கிய கடன் சீக்கிரம் அடைய வேண்டும் என்று கூட எழுதிக் கொள்ளலாம்.
அது உங்கள் விருப்பம். ஒரு மெழுகுவத்தையோ அல்லது மண் அகல் விளக்கோ ஏற்றி உங்கள் முன்பு வைத்துக் கொள்ளுங்கள். (பதினோரு மணி இருக்கும் போதே இந்த பிரியாணி இலையில் எழுத வேண்டிய விஷயங்களை, தயாராக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்).
சரியாக மணி 11:11 அடிக்கும் போது, இந்த பிரியாணி இலையை உங்கள் தலையை 11 முறை சுற்றி அந்த நெருப்பில் பொசிக்கி விட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யும் போது கடன் சுமையிலிருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டும் என்ற நம்பிக்கை உங்கள் ஆழ் மனதில் இருக்க வேண்டும். எரித்த சாம்பலை தண்ணீரில் கரைத்து சிங்கில் கொட்டி விடுங்கள்.
இந்த பிரபஞ்சத்திடம் அந்த கடன் பிரச்சனை தீர வேண்டும் என்ற பிரார்த்தனையை ஆழமாக வைத்தால், உங்களுக்கான அதிர்ஷ்ட நேரம் துவங்கிவிட்டது என்று அர்த்தம். நிச்சயமாக நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் பண பிரச்சனையிலிருந்து, கடன் சுமையிலிருந்து அடுத்த 11 நாட்களில் வெளிவரக்கூடிய காலமும் நேரமும் கைகோடி வரும். பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு அப்படியே விடக்கூடாது.
இதையும் படிக்கலாமே: அஷ்ட ஐஸ்வர்யம் பெருக அஷ்டலட்சுமி வழிபாடு
கடனை அடைப்பதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பரிகாரம் 100% பலனை தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.