- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபௌர்ணமி ஸ்வஸ்திக் வழிபாடு

பௌர்ணமி ஸ்வஸ்திக் வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்த கிழமையாகவும், ஒவ்வொரு கிரகத்திற்கு உகந்த கிழமையாகவும் திகழ்கிறது. அதேபோல் ஒரு மாதத்தில் வரக்கூடிய 15 திதிகளும் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த திதிகளாக கருதப்படுகின்றன. அந்த வகையில் பௌர்ணமி திதி என்பது பல தெய்வங்களுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. அதிலும் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய இந்த பௌர்ணமி என்பது இன்னும் அற்புத பலனை தரக்கூடியதாகவே திகழ்கிறது.

இதற்கு காரணம் என்னவென்றால் வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்குரிய தினமாக கருதப்படுவதும், சந்திர பகவான் என்பவர் மகாலட்சுமி உடன் பிறந்தவராக கருதப்படுவதால் அன்றைய தினம் மிகவும் அற்புதமான தினமாக கருதப்படுகிறது. அதனால்தான் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பௌர்ணமிக்கு அதீத சக்தி இருக்கிறது என்று கூறப்படுகிறது. அப்படி அதிக சக்தி மிகுந்த பௌர்ணமி தினத்தன்று ஸ்வஸ்திக் சின்னத்தை வைத்து எப்படி வழிபாடு செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பௌர்ணமி ஸ்வஸ்திக் வழிபாடு

வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நல்ல முன்னேற்றமான நிலையை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பான முறையில் இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை பௌர்ணமியோடு சேர்ந்து வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தன்று தொடங்குவது என்பது மிகவும் சிறப்பு. இப்படி தொடங்கிய பிறகு ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இந்த பரிகாரத்தை நாம் செய்து கொண்டே வரவேண்டும். இந்த பரிகாரத்தை மாலை 6:00 மணிக்கு மேல் முழு நிலவு வானத்தில் தோன்றிய பிறகுதான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு ஒரு நல்ல கிழியாத வெற்றிலையாக ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு குங்குமம், சிறிதளவு குங்குமப்பூ, சிறிதளவு பச்சை கற்பூரம், சிறிதளவு காய்ச்சாத பசும்பால் இதை ஊற்றி ஒரு கலவையாக தயார் செய்து கொள்ளுங்கள். இந்த கலவையை உங்களுடைய மோதிர விரலில் தொட்டு வெற்றிலையின் மீது ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும். குங்குமப்பூ இல்லை என்பவர்கள் அதை தவிர்த்து விடலாம். ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்த இந்த வெற்றிலையை ஒரு தாம்பாள தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஸ்வஸ்திக் சின்னத்திற்கு நடுவே வெள்ளி நாணயத்தை வைக்க வேண்டும். இந்த வெள்ளி நாணயம் சந்திர பகவானுக்கும், சுக்கிர பகவானுக்கும் உரியதாக கருதப்படுகிறது. ஒரு வேளை வெள்ளி நாணயம் இல்லை என்பவர்கள் ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயத்தை வைக்கலாம். முடிந்த அளவிற்கு முழு பலனையும் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் வெள்ளி நாணயத்தை பயன்படுத்துங்கள்.

பிறகு இந்த வெற்றிலையை சுற்றி மலர்களை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இதை முதலில் மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து விட்டு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து கற்பூர தூப தீப ஆராதனை காட்ட வேண்டும். பிறகு இந்த தாம்பாளத்தை அப்படியே எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்று சந்திர பகவானை பார்த்து சந்திர பகவானுக்கு முன்பாக இந்த தாம்பாளத்தை வைத்து விட்டு கற்பூர ஆரத்தி காட்டி சந்திர பகவானை முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும். இந்த தாம்பாள தட்டு இரவு முழுவதும் வெளியிலேயே இருக்கட்டும்.

- Advertisement -

மறுநாள் காலை குளித்து முடித்துவிட்டு இந்த தாம்பாள தட்டில் இருக்கக்கூடிய வெற்றிலையும் அந்த நாணயத்தையும் அப்படியே சுருட்டி பண வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி ஒவ்வொரு பௌர்ணமியும் நாம் செய்யும்பொழுது நமக்கு பணவரவு என்பது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கோடீஸ்வர யோகம் தரும் சுக்கிர பௌர்ணமி

இந்தப் பௌர்ணமி வழிபாட்டை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பௌர்ணமி நாளில் தொடங்குவது என்பது அதீத பலனை தரும் என்பதால் முடிந்த அளவிற்கு இந்த ஐப்பசி பௌர்ணமியை தவறவிடாமல் இந்த வழிபாட்டை மேற்கொண்டு செல்வ செழிப்புடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்