முழு நிலவு பிரகாசமாக திகழக்கூடிய நாளான பௌர்ணமி தினத்தன்று நாம் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் நம்முடைய வாழ்க்கையும் பிரகாசமாக அமையும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் பௌர்ணமி தினத்தன்று ஒவ்வொரு ஆலயத்திலும் சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். இது கூடுதல் சிறப்பை தரக்கூடிய ஒரு பௌர்ணமி ஆகவே திகழ்கிறது. இந்த பௌர்ணமியில் எந்த பொருட்களை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கோடீஸ்வர யோகம் தரும் சுக்கிர பௌர்ணமி
சிவபெருமானுக்கு உகந்த தினமாக கருதப்படக்கூடிய தினங்களில் ஒன்றுதான் பௌர்ணமி. இந்த பௌர்ணமி சிவபெருமானுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த தினமாகவே கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஐப்பசி பௌர்ணமி என்பது சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறக்கூடிய பௌர்ணமியாக திகழ்கிறது. இந்த வருடம் ஐப்பசி பௌர்ணமி என்பது வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வருவதால் சுக்கிர பகவானுக்குரிய நாளாகவும் அந்த நாள் திகழ்கிறது. அப்படிப்பட்ட நாளில் கோடீஸ்வர யோகம் பெற செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பார்ப்போம்.
இதற்கு நமக்கு இரண்டு பொருட்கள் வேண்டும். ஒன்று சந்திர பகவானுக்குரிய பச்சரிசியும், சுக்கிர பகவானுக்குரிய வெள்ளை மொச்சையும். இதை மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் முழு நிலவு வானத்தில் தோன்றிய பிறகு செய்வது என்பது சிறப்பு. அதிலும் சுக்கிர ஹோரை ஆன இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யும் பொழுது அதீத பலன் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இரண்டு சிறிய கிண்ணத்தில் தனித்தனியாக பச்சரிசியையும், வெள்ளை மொச்சையையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மாலை எப்பொழுதும் போல் வீட்டில் விளக்கேற்றி பூஜையை அனைத்தையும் நிறைவு செய்து கொள்ளுங்கள். முழு நிலவு தோன்றிய பிறகோ அல்லது இரவு 8 மணி அளவில் இந்த இரண்டு பொருட்களையும் கையில் எடுத்துக்கொண்டு முழு நிலவு எந்த இடத்தில் தெரிகிறதோ அந்த இடத்திற்குச் சென்று முழு நிலவை பார்த்தவாறு முதலில் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
பிறகு சந்திர பகவானை வழிபாடு செய்ய வேண்டும். பிறகு சுக்கிர பகவானை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி இவர்கள் மூவரையும் வழிபாடு செய்து விட்டு இந்த இரண்டு பொருட்களையும் அப்படியே வீட்டுக்கு எடுத்து வந்து பூஜையறையில் வைத்து விட வேண்டும். இந்த பொருள் இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். மறுநாள் சனிக்கிழமை இந்த இரண்டு பொருட்களையும் சமையலுக்கும் உபயோகப்படுத்தலாம், வாயில்லா ஜீவன்களுக்கும் தானமாக தரலாம். இப்படி செய்வதன் மூலம் சிவபெருமானின் அருளையும், சந்திர பகவானின் அருளையும், சுக்கிர பகவானின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும். இவர்களின் அருள் இருந்து விட்டாலே நமக்கு இருக்கக் கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் கோடீஸ்வர யோகத்தை நம்மால் பெற முடியும்.
இதையும் படிக்கலாமே:நிறைவேறாத வேண்டுதலை நிறைவேற்றும் பௌர்ணமி பரிகாரம்
வீட்டில் இருக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களை பயன்படுத்தி சிவபெருமானையும், சந்திர பகவானையும், சுக்கிர பகவானையும் வழிபாடு செய்பவர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.