- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதங்கம் பெருக ஆன்மீக குறிப்பு

தங்கம் பெருக ஆன்மீக குறிப்பு

- Advertisement -

தங்க நகைகள் என்றாலே பெண்களுக்கு ஒரு அலாதியான பிரியம் தான். தங்கம் என்கிற இந்த உலோகம் விலைமதிப்பற்றது, அதனால் தான் தரம் மிக்கதாக பெண்களின் மனதில் தங்கம் இடம் பிடித்துள்ளது. இந்த ஆபரண தங்கம் அணிந்து அழகு பார்க்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பது கிடையாது. உங்கள் வீட்டிலும் பெண்கள் ஆபரண தங்கம் அணிந்து அழகு பார்க்க, மென்மேலும் வீட்டில் தங்கம் சேர என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ஆபரண தங்கம் வீட்டில் அதிகம் சேர்வதற்கு ஒரு சில சூட்சம வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தங்கம் உலோகம் என்பதால் அதற்கும் தோஷம் உண்டு. ஆபரண தங்கம் வீட்டில் குண்டுமணி அளவிலாவது இருந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி ஆதிக்கம் செலுத்துவார். வறுமையில் வாடுபவர்களும் தங்கத்தை சிறு அளவில் ஆவது வைத்திருப்பார்கள். தங்கம் அந்த அளவிற்கு எல்லோருடைய வீட்டிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

- Advertisement -

இந்த தங்கம் பொதுவாக எல்லோர் வீட்டிலும் சேராமல் போவதற்கு காரணம் அவர்கள் அதை பயன்படுத்தாமல் பூட்டி வைப்பது தான் என்கிறது சாஸ்திரங்கள். தங்கம் இறைவனின் ஸ்வரூபம் என்பதால் எப்பொழுதும் அதை நீண்ட நாட்களுக்கு ஒரே இடத்தில் பூட்டி வைக்கக் கூடாது. தங்க நகைகளை மரப்பெட்டியில் வைத்தால் அது அதிகம் சேரும் என்பது நம்பிக்கை. தங்கத்தை பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைக்காதீர்கள்.

மரப்பெட்டியின் மீது சிகப்பு பட்டு துணி விரித்து அதன் மீது தங்க நகைகளை வைத்து ஒன்றிரண்டு மல்லி பூக்களை சுக்கிர ஹோரையில் போட்டு கொஞ்சம் பச்சைக் கற்பூரத்தை நுணுக்கி சேர்த்து வாசம் மிகுந்ததாக வையுங்கள். வெள்ளிக்கிழமையின் பொழுது கற்பூர ஆரத்தி காண்பித்து பின்னர் எடுத்து பீரோவில் வையுங்கள். இது போல செய்து வரும் பொழுது தங்கத்தின் மீதான தோஷம் நீங்குகிறது, இதனால் தங்கம் சேர ஆரம்பிக்கும்.

- Advertisement -

அட்சய திருதியை நாள் மட்டும் அல்லாமல் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை அல்லது குளிகை நேரத்தில் தங்கம் வாங்குவதும், அதனை பெருக செய்யும். தங்கத்தை யாருக்கும் கடனாக கொடுக்க கூடாது. அப்படி கடனாக கொடுத்து வாங்கிய நகையை மீண்டும் அப்படியே பயன்படுத்தாமல் மஞ்சள் கலந்த தண்ணீரில் சிறிதளவு கல் உப்பை போட்டு நகைகளை அதனுள் வைத்து 5 நிமிடம் கழித்து துடைத்து உலர வைத்து பின் பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
வெற்றிலையின் காம்பை நீக்குவது ஏன்?

தங்க நகைகளை பரிசளிப்பவர்களுக்கு மேலும் மேலும் தங்கம் சேரும் என்பார்கள். உங்களுக்கு நெருக்கமானவர்கள், நெருங்கிய உறவினர்கள், அவர்களின் குழந்தைகள் என்று இருந்தால் தங்க நகைகளை பரிசளியுங்கள். இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு தங்கமானது மென்மேலும் சேர ஆரம்பிக்கும். தங்கத்தை ஒரே இடத்தில் எப்பொழுதும் வைக்காதீர்கள். பூஜைகளின் பொழுது பூஜையில் வைத்து பின்னர் எடுத்து சிறிது நேரம் அணிந்து கொண்டு, மீண்டும் பூட்டி வையுங்கள். தங்க நகைகளை ஒரே இடத்தில் குவித்து வைக்க கூடாது. வெவ்வேறு ஆபரண தங்க நகைகளை, வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இப்படி செய்வதாலும் தங்கமானது மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம்.

சற்று முன்