- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ தடை நீக்கும் விஷ்ணுபதி புண்ணிய காலம்.

செல்வ தடை நீக்கும் விஷ்ணுபதி புண்ணிய காலம்.

- Advertisement -

கார்த்திகை மாதம் என்பது ஐயப்பனுக்கு உகந்த நாளாக திகழ்கிறது. அதேபோல்தான் முருகப்பெருமானுக்கும், சிவபெருமானுக்கும் உகந்த மாதமாக திகழ்கிறது. இந்த மாதத்தின் தொடக்க நாளான கார்த்திகை ஒன்று என்பது பெருமாளுக்கு உகந்த காலமாக திகழ்கிறது. அதாவது கார்த்திகை ஒன்றாம் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலமாக கருதப்படுகிறது. இது நள்ளிரவு 1:30 மணியிலிருந்து காலை 11:00 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் தவறாமல் பெருமாளை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு செல்வ நிலையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும் என்றும் அவர்களுடைய கஷ்டங்கள் எல்லாம் சந்தோஷங்களாக மாறும் என்றும் கூறப்படுகிறது. அந்த வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வ தடை நீக்க

கார்த்திகை ஒன்றாம் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது பலரும் அறிந்ததே. இந்த காலத்தில் நாம் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பலவிதமான கஷ்டங்களும், தடைகளும் நீங்கும், செல்வ செழிப்பு உண்டாகும், காரிய வெற்றி உண்டாகும் என்று கூறிக் கொண்டே செல்லலாம். அப்படிப்பட்ட புண்ணிய காலத்தில் பெருமாள் கோவிலுக்கு செல்லும் பொழுது நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

காலை 11 மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதற்கு முன்பாக வலம்புரி சங்கில் 27 என்ற எண்ணிக்கையில் வெள்ளை நிற மலர்களை வைத்து எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். வலம்புரி சங்கு இல்லாத பட்சத்தில் சாதாரணமாக கூட நாம் எடுத்துக் கொண்டு செல்லலாம். வீட்டில் வலம்புரி சங்கு இருக்கிறது என்னும் பட்சத்தில் அதில் வைத்து அந்த சங்குடன் எடுத்துக்கொண்டு பெருமாள் ஆலயத்திற்கு செல்லுங்கள். பிறகு ஒரு மண்டைவெல்லத்தை வாங்கிக்கொண்டு அதையும் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

நேராக பெருமாள் ஆலயத்தில் இருக்கக்கூடிய கொடி மரத்திற்கு சென்று அந்த கொடிமரத்தை மட்டும் 27 முறை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும் சங்கில் இருக்கக்கூடிய வெள்ளை மலரை கொடி மரத்தின் அடியில் வைக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு முறையும் கொடி மரத்தை வலம் வரும் பொழுது “ஓம் நமோ நாராயணா, ஓம் ஸ்ரீம் லலிதம் லம்போதரம்” என்னும் மந்திரத்தை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு கருடாழ்வார் சன்னதிக்கு வந்து நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்க வேண்டும், செல்வ செழிப்பு உயர வேண்டும், முயற்சிக்கு உரிய பலன்கள் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஆலயத்தை முழுவதுமாக ஒருமுறை வலம் வந்து மறுபடியும் கருடாழ்வாரை தரிசனம் செய்து விட்டு பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். அவ்வாறு பெருமாளை தரிசிக்க செல்லும் பொழுது கையில் நாம் எடுத்து வந்த அந்த மண்டை வெள்ளத்தை வைத்துக்கொண்டு முதலில் பெருமாளின் பாதத்தை தரிசனம் செய்ய வேண்டும், பிறகு பெருமாளின் மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமி தாயாரை தரிசனம் செய்ய வேண்டும், பிறகுதான் பெருமாளின் முகத்தை பார்க்க வேண்டும்.

இவ்வாறு தரிசனம் செய்து முடித்த பிறகு அந்த மண்டை வெல்லத்தை பெருமாளின் பாதத்தில் வைத்து தரும்படி கேட்டு வாங்கிக் கொண்டு மறுபடியும் ஆலயத்தை வலம் வந்து கொடிமரத்திற்கு அருகில் இந்த மண்டை வெல்லத்தை இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு நாம் மேல் சொன்ன அந்த இரண்டு மந்திரத்தையும் 108 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரித்து வழிபாட்டை நிறைவு செய்த பிறகு இந்த மண்டை வெல்லத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும். மறுநாள் காலை இந்த மண்டை வெல்லத்தை பயன்படுத்தி சர்க்கரை பொங்கல் செய்து வீட்டில் இருக்கும் அனைவரும் உண்ண வேண்டும்.

இதையும் படிக்கலாமே:கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை வழிபாடு

இந்த முறையில் பெருமாளை விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் அவர்களைத் தேடி வரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்