- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகார்த்திகை ஒன்றாம் தேதி ஏற்ற வேண்டிய தீபம்

கார்த்திகை ஒன்றாம் தேதி ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

கார்த்திகை மாதம் என்றதும் நம் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தீபம் தான். கார்த்திகை பௌர்ணமி தினத்தன்று வீடு முழுவதும் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வோம். திருவண்ணாமலை தீபத்திற்கு முதல் நாளும் அடுத்த நாளும் வீட்டில் தொடர்ச்சியாக தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் என்பது பலருக்கும் இருக்கும். வீட்டில் இருக்கக்கூடிய இருளை நீக்கும் தீபத்திற்கு நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களை நீக்கும் அளவிற்கு சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட தீபத்தை கார்த்திகை ஒன்றாம் தேதி எந்த முறையில் ஏற்றினால் நம்முடைய கஷ்டங்கள் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கார்த்திகை ஒன்றாம் தேதி ஏற்ற வேண்டிய தீபம்

கார்த்திகை மாதம் என்றதுமே பலரும் பலவிதமான வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருப்பது, தைப்பூசத்திற்காக மாலை அணிந்து முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பது, கார்த்திகை சோமவாரத்தில் சிவன் பார்வதி தேவிக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது, கார்த்திகை ஒன்றாம் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பதால் பெருமாளை வழிபாடு செய்வது என்று பல விதங்களில் பல வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அதே போல் கார்த்திகை மாதம் முழுவதும் காலையிலும் மாலையிலும் வீட்டின் நிலை வாசலில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யும் வழக்கமும் பலருக்கும் இருக்கும். கார்த்திகை ஒன்றாம் தேதி நாம் எந்த முறையில் தீபமேற்றி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு ஒரு குத்து விளக்கு புதிதாக வாங்கிய 11 அகல் விளக்கை தயார் செய்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். குத்து விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி ஐந்து முகங்களிலும் பஞ்சுத்திரி போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மாலை 6:00 மணிக்கு இந்த தீபங்கள் அனைத்தையும் ஏற்ற வேண்டும். ஏற்றிய பிறகு இந்த தீபத்திற்கு முன்பாக பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், அப்பம், எலுமிச்சை சாதம் என்று ஐந்து வகை பிரசாதங்களை வைத்து நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.

ஐந்தும் செய்ய இயலாதவர்கள் பால் பாயாசம், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் என்று மூன்று பிரசாதங்களையாவது செய்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தை ஏழு முறை உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து முடித்த பிறகு நாம் ஏற்றி வைத்திருக்கும் அந்த 11 அகல் விளக்கில் இரண்டு அகல் விளக்கை வீட்டு நிலை வாசலிலும் இரண்டு விளக்கை சமையலறையிலும் ஒரு அகல் விளக்கை வரவேற்பறையிலும் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

மீதம் இருக்கக்கூடிய ஆறு அகல் விளக்கை குத்து விளக்கை சுற்றி வைத்து விட வேண்டும். இந்த தீபமானது குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் கார்த்திகை ஒன்றாம் தேதி நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்களும், இருளும், சங்கடங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. எப்படி தீபம் பிரகாசமாக இருக்கிறதோ அதேபோல் நம்முடைய வாழ்க்கையும் பிரகாசமாகவும் சந்தோஷமாகவும் அமையும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:செல்வ தடை நீக்கும் விஷ்ணுபதி புண்ணிய காலம்.
இந்த முறையில் தீபமேற்றி நெய்வேத்தியம் வைத்து கார்த்திகை ஒன்றாம் தேதி வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான சங்கடங்களும் நீங்கும், செல்வ செழிப்புடன் சிறப்பான வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்