நம்முடைய வாழ்வில் நாம் பட்டு கொண்டிருக்க கூடிய கஷ்டங்களும், துன்பங்களும் தீர வேண்டும் என்று நினைத்து பலரும் பலவிதமான தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவார்கள். அப்படி இன்றைய காலத்தில் அதிக அளவில் ஈடுபடக்கூடிய ஒரு தெய்வ வழிபாடு என்பது வாராகி அம்மனின் வழிபாடு. அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்குரிய திதியாக கருதப்படுவது பஞ்சமி திதி. அதுவும் குறிப்பாக தேய்பிறை பஞ்சமி அன்று நாம் வாராஹி அம்மனை வழிபட்டு நம்முடைய பிரச்சனைகள் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டோம் என்றால் அந்த பிரச்சினைகள் தீரும் என்று கூறப்படுகிறது. அதோடு சேர்த்து இந்த எளிமையான பரிகாரத்தையும் செய்யும் பொழுது விரைவிலேயே நம் பிரச்சனைகள் தீர்வதற்குரிய வழி உண்டாகும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.4
பிரச்சனை தீர பஞ்சமி பரிகாரம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை என்பது அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கும். பிரச்சனையே வாழ்க்கையாக சந்தித்துக் கொண்டிருப்பவர்களும் பலர் இருக்கிறார்கள். எப்பேர்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினைகள் தீர்வதற்கு என்ற ஒரு வழி என்பது கண்டிப்பாக இருக்கும். அந்த வழி தெரியாமல் தான் பலரும் அந்த பிரச்சினையில் மாட்டிக் கொண்டு கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றோம். பஞ்சமி திதி அன்று வாராஹி அம்மனுக்கு இந்த முறையில் பரிகாரம் செய்யும் பொழுது அந்த பிரச்சனை தீர்வதற்குரிய வழி நமக்கு கிடைக்கும்.
இந்த பரிகாரத்தை பஞ்சமி திதி அன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன் செய்ய வேண்டும். இன்று பஞ்சமி திதி 9:51 நிறைவடைகிறது என்றாலும் இன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன் நாம் இந்த பரிகாரத்தை தாராளமாக செய்யலாம். இந்த பரிகாரத்தை அசைவம் சாப்பிட்டவர்கள் செய்யக்கூடாது, சுத்தமாக இருப்பவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். இரவு படுக்கச் செல்வதற்கு முன் ஒரு காய்ந்த கொட்டாங்குச்சி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சமையலுக்கு உபயோகப்படுத்தாத புதிதாக வாங்கிய கல் உப்பு ஒரு ஸ்பூன் அளவிற்கு போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அதில் ஐந்து மிளகை போட்டுக் கொள்ளுங்கள். ஒரு பிரியாணி இலையை எடுத்து அதில் உங்களுடைய எந்த பிரச்சினை தீர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த பிரச்சினையை எழுதிக் கொள்ளுங்கள். இதையும் கொட்டாங்குச்சியில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதை உங்கள் கையில் வைத்துக்கொண்டு கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் “ஓம் அஷ்வா ரூடாய நமஹ” என்னும் மந்திரத்தை கூற வேண்டும். மற்ற பிரச்சனைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் “ஓம் வாராகி தாயே போற்றி” என்னும் மந்திரத்தை கூறி வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் இதை எடுத்துச் செல்ல வேண்டும். பிறகு வீட்டிற்கு வெளியே வந்து அதில் நான்கைந்து கற்பூரத்தை சேர்த்து எரித்து விட வேண்டும். இதை மறுநாள் காலையில் சுத்தம் செய்து கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இந்த முறையில் நாம் செய்வதன் மூலம் நம்முடைய பிரச்சனைகளும் எரிந்து ஒன்றும் இல்லாமல் போய்விடும்.
இதையும் படிக்கலாமே:அதிர்ஷ்டம் தரும் குபேர மூலை
வாராகி அம்மனுக்குரிய பஞ்சமி திதி அன்று நம்முடைய பிரச்சனைகள் தீர வேண்டும் என்பதற்காக இந்த பரிகாரத்தை முழுமனதுடன் செய்து பிரச்சினையை தீர்த்து மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.