ஞாயிற்றுக்கிழமை என்றாலே அது சூரிய பகவானுக்குரிய கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். கார்த்திகை மாதம் என்பது தீபத்திற்கு பெயர் போன மாதம் என்பதால் இயற்கையிலேயே வெளிச்சத்தை தரக்கூடிய தீபமாக திகழக்கூடிய சூரிய பகவானையும், சந்திர பகவானையும் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியது. அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானை எந்த மந்திரத்தை கூறி எப்படி வழிபட்டால் நம் வாழ்வில் செல்வமும் செல்வாக்கும் புகழும் உயரும் என்றும் தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஞாயிற்றுக்கிழமை வழிபாடு
பொதுவாக தினமும் சூரிய உதயசமயத்தில் சூரிய பகவானை பார்த்து சூரிய நமஸ்காரம் செய்வது என்பது நம் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. பலரும் இன்றளவும் அதை பின்பற்றி தான் வருகிறார்கள். நல்ல வேலை கிடைக்கவும், நோய்கள் நீங்கவும் சூரிய பகவான் வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியது அப்படிப்பட்ட சூரிய பகவானுக்குரிய எளிமையான ஒரு மந்திரத்தை பற்றியும் எளிமையான வழிபாட்டு முறையைப் பற்றியும் தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
இந்த வழிபாட்டை நவம்பர் மாதம் 24 ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். சூரிய உதயம் ஆகும் நேரத்தில் இந்த சூரிய பகவான் வழிபாட்டை செய்ய வேண்டும். ஒரு வேளை மேகமூட்டத்துடன் இருக்கிறது சூரிய உதயத்தை காண முடியவில்லை என்று நினைப்பவர்கள் காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் சூரிய கோரை என்பது வரும் அந்த நேரத்திலும் இந்த வழிபாட்டை செய்யலாம்.
வீட்டு பூஜை அறையில் ஒரு சொம்பு நிறைய தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு கோதுமையை முழு கோதுமையாகவும் வைக்கலாம் அல்லது கோதுமையால் செய்யப்பட்ட உணவு பொருளை ஏதாவது ஒன்றை நிறைவேத்தியமாக வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு சூரிய பகவானுக்குரிய இந்த மந்திரத்தை 9 முறை கூற வேண்டும்.
மந்திரம்
ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி இந்த வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு கோதுமையால் செய்யப்பட்ட உணவுப் பொருளாக இருக்கும் பட்சத்தில் அதை நம் வீட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் பிரசாதமாக தர வேண்டும். ஒரு வேளை முழு கோதுமையை வைத்து வழிபாடு செய்திருக்கும் பட்சத்தில் அதை பசு மாட்டிற்கோ, பறவைகளுக்கோ தானமாக தந்துவிட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நவமி வழிபாடு
இந்த முறையில் நெய்வேத்தியம் வைத்து மந்திரத்தை கூறி சூரிய பகவானை வழிபாடு செய்பவர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும், செல்வாக்கு உயரும். மேலும் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.