- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நவமி வழிபாடு

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நவமி வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு வித சிறப்பு இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். அந்த திதிக்குரிய தெய்வங்களை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு அதிக பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் தான் சஷ்டி திதி அன்று முருகப்பெருமானையும், பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனையும், அஷ்டமி திதி அன்று காலபைரவரையும், சதுர்த்தி திதி அன்று விநாயகப் பெருமானையும் இப்படி ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு தெய்வத்தையும் நாம் வழிபாடு செய்கிறோம். அந்த வகையில் நவமி திதி என்பது பெருமாளுக்குரிய திதியாக கருதப்படுகிறது. அந்த திதியில் பெருமாளை எந்த முறையில் வழிபட்டால் செல்வ செழிப்புடன் பேரும் புகழுடன் வாழ முடியும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த படியில் நாம் பார்க்க போகிறோம்.

நவமி வழிபாடு

நவமி திதி என்பது பெருமாளுக்கு உரிய திதியாக கருதப்படுகிறது. ராமர் அவதரித்த திதியாக தான் இந்த நவமி திதி திகழ்கிறது. அதனால் தான் ராமநவமி என்று கொண்டாடப்படுகிறது அப்படிப்பட்ட நவமி திதி அன்று வீட்டிலேயே பெருமாளை வழிபாடு செய்வதற்குரிய எளிமையான வழிமுறையை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய நவமி திதி என்பது நவம்பர் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது, அன்றைய தினம் முழுவதுமே நவமி திதி இருக்கிறது என்பதால் இந்த வழிபாட்டை காலை 10:45 இல் இருந்து 11 45 வரை, மதியம் 1:30 மணியிலிருந்து 2:30 மணி வரை, மாலை 5:30 மணியிலிருந்து 9:30 மணி வரை தங்களுடைய வசதிக்கேற்ப எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.

வீட்டு பூஜை அறையில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அதை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு பச்சரிசி மாவினால் “ஓம் ஸ்ரீ ஹரி ஓம்” என்று எழுத வேண்டும். பிறகு வாசனை நிறைந்த மலர்களை இந்த மந்திரத்திற்கு வைக்க வேண்டும். அடுத்ததாக ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி அந்த தீபமானது வடக்கு பார்த்தவாறு எரியும்படி வைக்க வேண்டும். பிறகு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைக்க வேண்டும் அடுத்ததாக நாம் மேற் சொன்ன அந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து மலர்களால் அந்த மந்திரத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். பச்சரிசி மாவினால் எழுதிய இந்த மந்திரத்தை மறுநாள் தான் சுத்தம் செய்ய வேண்டும். அன்றைய தினம் சுத்தம் செய்யக்கூடாது. மேலும் நெய்வேத்தியமாக வைத்த இனிப்பு பொருட்களை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிரசாதமாக தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் ஏற்றி வைத்திருக்கக்கூடிய தீபமானது குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:செய்வினை ஏவல் கண்டறிய
திதிக்குரிய வழிபாட்டை மேற்கொள்பவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் நவமி திதி அன்று பெருமாளை இந்த முறையில் வழிபாடு செய்து பேரும் புகழுடனும் செல்வ செழிப்புடனும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்