- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்தது நடக்க பூரம் நட்சத்திர வழிபாடு

நினைத்தது நடக்க பூரம் நட்சத்திர வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருக்கிறது. அந்த நட்சத்திரத்திற்குரிய தெய்வத்தை நாம் வழிபாடு செய்யும்பொழுது அந்த நட்சத்திரத்திற்குரிய பலனும் அந்த தெய்வத்தின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இவை கார்த்திகை மாதத்தில் வரும் பொழுது அதற்கு பலன் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. அந்த வகையில் அம்பாளுக்குரிய நட்சத்திரமாக திகழக்கூடிய பூரம் நட்சத்திரம் வரக்கூடிய இன்றைய நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பூரம் நட்சத்திர வழிபாடு

பூரம் நட்சத்திரத்தில் தான் ஆண்டாள் அவதரித்தாள் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நட்சத்திரத்தில் நாம் எந்த அம்மனை வேண்டுமானாலும் வழிபாடு செய்யலாம். அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நட்சத்திரமாக இந்த நட்சத்திரம் திகழ்கிறது. இந்த நட்சத்திரம் கார்த்திகை மாதத்தின் ஒன்பதாவது நாளான இன்றைய தினத்தில் வருகிறது. மேலும் இன்று நவமி திதியும் சேர்ந்து வருகிறது. இவை அனைத்தும் சேர்ந்து வரக்கூடிய இந்த அற்புதமான நாளில் நாம் இந்த ஒரு எளிமையான வழிபாட்டை செய்தோம் என்றால் அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நினைத்தது அனைத்தும் நடக்கும் கேட்டது அனைத்தும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த வழிபாட்டை இன்று இரவுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். ராகு காலத்தையும், எமகண்டத்தையும் தவிர்த்துக் கொள்வது நல்லது. இதற்கு நம் வீட்டில் இருக்கக்கூடிய எந்த அம்மனின் படம் சிலை இருந்தாலும் பரவாயில்லை. அந்த அம்மனுக்கு 11 என்ற எண்ணிக்கையில் பச்சை கண்ணாடி வளையலை வாங்கி மாலையாக கட்டி அணிவிக்க வேண்டும். ஒரு வேளை சிலையில்லை என்பவர்கள் ஒரு தாம்பாள தட்டில் இந்த வளையலை பரப்பியும் வைத்துக் கொள்ளலாம். பிறகு தீபம் ஏற்றி வைத்து உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை மனதார கூற வேண்டும். தங்களால் இயன்ற ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிப்பாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.

வழிபாட்டை நிறைவு செய்த பிறகு இந்த வளையலை எடுத்து அருகில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்களுக்கு தானமாக தர வேண்டும். அவ்வாறு தரும் பொழுது வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், பூ போன்றவற்றையும் சேர்த்து வைத்து தர வேண்டும். இப்படி தந்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும். இப்படி இந்த முறையில் சுமங்கலி பெண்களுக்கு நாம் தருவதன் மூலம் அதை அம்பாளுக்கு தந்ததற்குரிய பலன் கிடைக்கும். மேலும் நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதற்குரிய வரத்தையும் அந்த அம்மன் தருவாள் என்று கூறப்படுகிறது. குறைந்தபட்சம் 11 என்ற எண்ணிக்கையில் வளையலை போட வேண்டும். அதிகபட்சம் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அனைத்தையும் பிறருக்கு தானம் தர வேண்டும் என்று எந்த நிபந்தனையும் கிடையாது. நாமும் அதை கையில் அணிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:மன தெளிவு பெற ஞாயிற்றுக்கிழமை ஏற்ற வேண்டிய தீபம்
ஆடி மாதத்தில் வரக்கூடிய பூரம் நட்சத்திரம் மட்டுமே விசேஷமானது அல்ல. கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பூர நட்சத்திரமும் மிகவும் விசேஷமானது தான். இந்த நாளை தவிர விடாமல் அம்மனுக்கு வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்