கார்த்திகை மாதம் என்பது மிகவும் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். பலரும் தங்களுடைய நிலைவாசலில் கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் வைத்திருப்பார்கள். அப்படி சிறப்பு மிகுந்த இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபெருமானை நினைத்து எந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால் நம்முடைய மனமும் உடலும் தெளிவு பெறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மன தெளிவு பெற தீபம்
ஒருவருக்கு மனம் தெளிவாக இருந்தால்தான் அவர் எடுக்கக்கூடிய முடிவுகள் சிறப்பாக இருக்க முடியும். அதே சமயம் அவருக்கு உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் அந்த முடிவை சிறப்பாக செயல்படுத்த முடியும். அதனால் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவருடைய மனம் தெளிவாக இருக்க வேண்டும், அவருடைய உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இவை இரண்டையும் ஒரு சேர தருவதற்கு சிவபெருமானை நினைத்து நாம் செய்யக்கூடிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
சூரிய பகவானின் ஆதிக்கம் குறையக்கூடிய நேரமாக கருதப்படுவது தான் மாலை 6:00 மணி. அதனால்தான் மாலை 6:00 மணிக்கு வீட்டில் தீபம் ஏற்று வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. சூரிய பகவானின் அருள் கிடைக்கப்பெற்றவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபெருமானை நினைத்து இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் வழிப்பட்டோம் என்றால் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும் என்றும் மனதில் இருக்கக்கூடிய சஞ்சலங்கள் அகலும் என்றும் மனம் தெளிவு பெறும் என்றும் உடல ஆரோக்கியத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தீப வழிபாட்டை கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வீட்டு பூஜை அறையில் ஏற்ற வேண்டும். ஒரு தாம்பாள தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாள தட்டு நிறைய பச்சரிசி அல்லது நெல்லை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் குத்து விளக்கை வைக்க வேண்டும். குத்துவிளக்கில் நெய் ஊற்றி பஞ்சுத் திரி போட வேண்டும். பஞ்சுத் திரியை மட்டும் தான் இதற்கு பயன்படுத்த வேண்டும். வேறு எந்த திரியையும் பயன்படுத்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு ஒவ்வொரு தீபத்தையும் ஏற்றும்பொழுது ஓம் நமசிவாய அல்லது சிவாய நம என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை கூறிக்கொண்டு ஐந்து தீபங்களையும் ஏற்ற வேண்டும். இப்படி ஏற்றி முடித்த பிறகு அந்த தீபத்திற்கு முன்பாக வெண்பொங்கலை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இந்த வெண்பொங்கலில் முழு முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சேர்த்திருக்க வேண்டும். பிறகு சிவபெருமானை முழுமனதோடு நினைத்து நம்முடைய மனம் தெளிவு பெற வேண்டும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
கடைசியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி இந்த வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். நெய்வேத்தியமாக வைத்த வெண்பொங்கலை வெறும் வெண் பொங்கலாகவே வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சட்னி, சாம்பார் என்று எதையும் ஊற்றி சாப்பிடக்கூடாது என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:பண வரவு ஏற்பட 3 விளக்கு பரிகாரம்
இந்த முறையில் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பஞ்ச தீபங்களை ஏற்றி வைத்து கார்த்திகை மாதத்தில் சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய மனமும் உடலும் தெளிவு பெறும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.