- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகார்த்திகை மாதம் சிவன் கோவில் தானம்

கார்த்திகை மாதம் சிவன் கோவில் தானம்

- Advertisement -

இது கார்த்திகை மாதம். சிவபெருமானுக்கே சொந்தமான மாதம் என்று சொல்லலாம். இந்த கார்த்திகை மாதம் முடிவதற்குள் ஒரு நாளாவது வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று, அந்த எம்பெருமானை தரிசனம் செய்யுங்கள். அது உங்களுக்கு கோடான கோடி புண்ணியத்தை கொடுக்கும். இந்த கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கு, இந்த பொருட்களை மட்டும் உங்கள் கையால் வாங்கி கொடுத்து விட்டால் போதும்.

உங்களுடைய கஷ்டங்கள், கர்ம வினைகள், கடன் சுமைகள் எல்லாம் அன்றோடு தீரும். பண பிரச்சனையில் இருந்து வெளிவரக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் மனிதன், தீரா சிக்கலில் சிக்கிருப்பது பண பிரச்சனையில் தான். அந்த சிக்கலை அவிழ்க்க சிவபெருமானுக்கு, கார்த்திகை மாதம் எந்த பொருளை வாங்கி கொடுத்து வழிபட வேண்டும் என்பதை பற்றிய ஆன்மிகம் சார்ந்த  தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

கார்த்திகை மாதத்தில் சிவபெருமானுக்கு வாங்கி கொடுக்க வேண்டிய பொருட்கள்

கார்த்திகை மாதம் என்றாலே சிவனுக்கு சங்கு அபிஷேகம் செய்வது மிக மிக முக்கியமான வழிபாடாக சொல்லப்பட்டுள்ளது. கார்த்திகை மாதத்தில் வந்திருக்கும் சோமவார தினத்தில், அதாவது கார்த்திகை மாத திங்கட்கிழமையில், சிவன் கோவில்களில் இந்த சங்கு அபிஷேகம் நடக்கும். அப்படி அபிஷேகம் செய்வதற்கு சில கோவில்களில் நம் கையால் சங்கு வாங்கி தரலாம். வலம்புரி சங்கு, இடம்புரி சங்கு, 2 சங்கையும் வாங்கி அந்த சிவன் கோவிலுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலில் போய் குருக்களிடம் கேளுங்கள். சிவனுக்கு அபிஷேகம் செய்ய எந்த மாதிரி சங்கு வாங்கி கோவிலுக்கு தானம் செய்யலாம் என்று. அந்த சிவபெருமானுக்கு ஏற்ற சங்கை அவர்கள் சொன்னால், அந்த சங்கை வாங்கிக் கொண்டு போய் கோவிலுக்கு தானமாக கொடுத்தீர்கள் என்றால், ரொம்ப ரொம்ப நல்லது.

- Advertisement -

சில கோவில்களில் சங்கு அபிஷேகம் செய்துமுடித்து விட்டு அந்த சங்கை பக்தர்களுக்கு கொடுப்பார்கள். அதுபோல உங்களுக்கு ஒரு சங்கு கிடைத்தால், மிக மிக நல்லது. அதை கொண்டு வந்து பூஜையறையில் வைத்து வழிபாடு செய்ய முடியும் என்றால், அதை நீங்கள் வாங்கி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பராமரித்து வரலாம். குடும்பத்திற்கு நல்லது.

இதெல்லாம் எங்களால் முடியாது ஒரு நாள் அந்த ஈசனை தரிசனம் செய்வதற்கே நேரம் எங்களுக்கு கிடைக்கவில்லை என்பவர்கள், ஏதாவது ஒரு கார்த்திகை மாத திங்கட்கிழமையிலோ அல்லது மற்ற கிழடமைகயிலோ இந்த கார்த்திகை மாதம் முடிவதற்குள் ஈசனுக்கு வில்வ இலைகளை வாங்கி கொடுத்து, வாசம் நிறைந்த மரிக்கொழுந்து வாங்கி கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். சிவன் மேல் விழுந்த வில்வ இலைகளையும், கொஞ்சம் மரிக்கொழுந்தையும் மீண்டும் நீங்கள் கேட்டு வீட்டிற்கு வாங்கி வரவும்.

- Advertisement -

அந்த இலைகளை பூஜை அறையில் வையுங்கள். அது மூன்று அல்லது நான்கு நாட்கள் பூஜை அறையிலேயே இருக்கட்டும். அந்த பொருட்கள் காய்ந்த பிறகு, அதை அப்படியே தூள் செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். வாரத்தில் ஒரு நாள் குளிக்கும்போது, இந்த பொடியை எடுத்து குளிக்கின்ற தண்ணீரில் போட்டு குளிக்க வேண்டும். அந்த தண்ணீரில் குளிக்கும் பட்சத்தில் உங்கள் உடம்பிலிருந்து எதிர்மறை ஆற்றலானது விளக்கும்.

எதிர்மறை ஆற்றல் நம்முடைய உடம்புக்குள் எப்போது வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. நாம் சில எதிர்மறை விஷயங்களை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை, அடுத்தவர்கள் நம்மை பார்க்கும் போது கண் திருஷ்டி என்ற எதிர்மறை ஆற்றல் நம் மேல் விழுகிறது. அடுத்தவர்கள் நம்மை ஏளனமாக பேசும்போது, நம்மேல் எதிர்மறை ஆற்றல் விழுகிறது. நம்மை அறியாமல் அடுத்தவர்களுக்கு தவறு இழைத்து விட்டால், அவர்களுடைய சாபமும் நமக்கு கிடைக்கிறது.

நான் ஜெயிக்கும் போது அடுத்தவர்களுடைய கண் திருஷ்டி நம்மேல் விழுகிறது. இப்படி ஏதாவது ஒரு எதிர்மறை தாக்கம் நம் உடம்புக்குள் ஊடுருவிக் கொண்டே தான் இருக்கிறது. அதிலிருந்து தப்பித்து வாழ்க்கையை நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், நாம் வீட்டில் தயார் செய்து வைத்திருக்கும் இந்த வில்வ இலை பொடியும், மரிக்கொழுந்து பொடியும் நம்மை காப்பாற்றும். இரண்டு பொடியையும் ஒன்றாக சேர்த்து கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: தெய்வ சக்தி வீட்டில் அதிகரிக்க

மேலே சொன்ன இந்த எளிய பரிகாரத்தை கார்த்திகை மாதம் முடிவதற்குள் செய்து பாருங்கள். நிச்சயம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் வரும் உங்களுக்கு இருக்கும் அத்தனை கஷ்டங்களும் படிப்படியாக குறைய தொடங்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்