- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதெய்வ சக்தி வீட்டில் அதிகரிக்க

தெய்வ சக்தி வீட்டில் அதிகரிக்க

- Advertisement -

ஒருவருக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் அவரை சுற்றியும் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்க வேண்டும். அப்பொழுதுதான் நேர்மறை ஆற்றல்கள் என்பது அவருக்குள் வந்து அவர் செய்யும் செயல்களில் வெற்றிகள் கிடைக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அந்த வகையில் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகவும் தெய்வ சக்தி அதிகரிக்கவும் செய்ய வேண்டிய சில வழிமுறைகளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒரு வீட்டில் தெய்வசக்தி நிறைந்திருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் எந்த வித பிரச்சனைகளும் ஏற்படாது. எதிர்மறை ஆற்றல்கள் வருவதற்குரிய வழி இருக்காது என்று கூறப்படுகிறது. அதனால் தான் பலரும் ஆன்மீக ரீதியாக பல வழிமுறைகளை பின்பற்றி வருகிறார்கள். அதோடு சேர்த்து தினமும் இந்த வழிமுறைகளை பின்பற்றும்போது தெய்வ சக்தி வீட்டில் அதிகரிப்பதை நம்மால் உணர முடியும். அந்த செயல்களை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

எந்த ஒரு வீட்டில் தினமும் காலையில் புதிதாக சமைத்த உணவை காகத்திற்கு வைக்கிறார்களோ? அந்த வீட்டில் தெய்வ சக்தி என்பது அதிகரிக்கும், முன்னோர்களின் சாபம் முற்றிலும் நீங்கும், தேவர்கள் தேவதைகளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அதே போல் எந்த ஒரு வீட்டில் நறுமணம் கமலுகிறதோ அந்த வீட்டில் தெய்வங்களின் சக்தி என்பது அதிகரிக்கும் அதனால்தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் ஊதுபத்தி, சாம்பிராணி தூபம் இவை அனைத்தும் போட்டார்கள்.

பூஜை அறையில் எவ்வளவு சுவாமி படங்களை வைத்திருந்தாலும் ஒரே ஒரு சிறிய அளவில் கண்ணாடியை வைத்து வழிபாடு செய்வதன் மூலமும் அந்த வீட்டில் தெய்வ சக்தி என்பது அதிகரிக்கும். கண்ணாடிக்கு அந்த அளவிற்கு நல்ல சக்திகளை ஈர்க்கும் தன்மை உள்ளது. அதை போல் எந்த ஒரு நல்ல நாளாக இருந்தாலும் சிறப்பு மிகுந்த நாளாக இருந்தாலும் அந்த நாளில் குடும்பத்துடன் அமர்ந்து பூஜை செய்வது வழிபாடு மேற்கொண்டால் அந்த குடும்பத்தில் தெய்வ சக்தி என்பது அதிகரிக்கும்.

- Advertisement -

தினமும் காலையிலும் மாலையிலும் சூரிய உதயத்தின் பொழுதும் சூரிய அஸ்தமனத்தின் பொழுதும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வீட்டில் அனைத்து விதமான தெய்வங்களும் குடியேறுவார்கள். அதே போல் வீட்டில் எப்பொழுதும் மந்திர ஒலி என்பது ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் நாம் பூஜை செய்யும் பொழுதும் நமக்கு தெரிந்த ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அந்த மந்திர ஒலியால் தெய்வ சக்தி என்பது வீட்டில் அதிகரிக்கும்.

இதோடு நம்முடைய கர்மவினை தீர்ந்தால் தான் தெய்வ சக்தி என்பது நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த கர்ம வினை தீர்ப்பதற்கு நம்மால் இயன்ற அளவு முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு மாதத்தில் ஒரு முறையோ இரண்டு முறையோ அன்னதானம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தோஷ நிவர்த்தியும் உண்டாகும், கர்மவினையும் குறையும், தெய்வ சக்தியின் அருளும் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: தலைவிதியை மாற்றும் சோம வார வழிபாடு

அன்றாடம் நாம் இந்த முறையில் செய்து வந்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும் தெய்வ சக்தி அதிகரிக்கும். அதன் மூலம் வாழ்க்கையில் வெற்றிகளை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்