திருமணம் என்னும் பந்தத்தில் இணைவதற்கு அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. வேறு எந்த விஷயத்திலும் நாம் அவசரப்படலாம், ஆனால் ஆயிரம் காலத்துப் பயிர் என்னும் இந்த திருமண பந்தத்தில் இணைவதற்கு மட்டும் அவசரப்படாமல் இருப்பது நல்லது என்று காலத்தை தாழ்த்திக் கொண்டே இருப்போம். திருமணத்தில் தடைகளும், நல்ல வரன் அமைவதில் தடைகளும் இருந்து கொண்டே இருக்கும். இதற்கு ஆண், பெண் யாராக இருந்தாலும், அவர்கள் ஏற்ற வேண்டிய பரிகார தீபம் என்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.
ஒருவருடைய ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால் திருமண தடைகள் ஏற்படும். அப்படியே திருமணம் ஆனாலும் அவர்களுக்குள் ஒற்றுமை இருப்பதில்லை. இது போன்ற தோஷங்கள் பலவற்றால் அவதிப்படுபவர்கள் இனி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த ஒரு இலை இருந்தால் போதும், கை மட்டும் இல்லை, உங்களுடைய வாழ்க்கையும் நன்கு சிவக்கும்.
திருமண தோஷங்களால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அதிலிருந்து விடுபட்டு நல்ல வரன் கிடைக்க, அம்பாளை பரிபூரணமாக மனதில் நினைத்து ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று இரண்டு அகல் விளக்கு தீபங்களை, 6 வெள்ளிக்கிழமைகளில் போட வேண்டும். மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரியிட்டு, அதில் இரண்டு மருதாணி இலைகளை போட்டு தீபம் ஏற்றி அம்பாளை நல்ல வரன் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகளில் இது போல தீபம் ஏற்றி வந்தால், திருமண தடைகள் நீங்கும். மனதிற்கு ஏற்ற நல்ல வரன் அமையும் என்பது ஐதீகம்.
தனக்கு மட்டுமல்லாமல் தன் குடும்பத்தையும் ஏற்று வழி நடத்தக் கூடிய நல்ல பெண் அமைவதற்கு ஆண்கள் பெரும்பாலும் திருமணத்தை காலதாமதம் செய்கிறார்கள். தனக்கு வரப் போகிற மனைவி ஆனவள் சிரமப்படாமல் இருப்பதற்கு தேவையான எல்லா வசதிகளையும் ஈட்டிய பின்பு தான் திருமணத்திற்கு ஆண் தயாராகிறான். காலத்தே செய்யாத பயிர் வீண் தான் என்பது போல காலத்தில் நடக்காத திருமணமும், அதிகமான பிரச்சனைகளை காணும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதில்லை.
காலாகாலத்தில் திருமணம் செய்தால் தான் அடுத்து வரும் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை. திருமண தடை ஏற்பட்டால் ஆண்கள் திங்கட்கிழமை தோறும் கணபதி கோவிலுக்கு செல்லுங்கள். விநாயகருக்கு இரண்டு அகல் தீபங்களில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சு திரியிட்டு அதில் 2 மருதாணி இலைகளை போட்டு மனதார தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். மருதாணி இலைகள் அம்பாளுக்கு உரியதாகும். மருதாணி இலைகள் திருமண தோஷத்தை போக்கும் அற்புத மூலிகை ஆகும்.
இதையும் படிக்கலாமே:
கார்த்திகை மாதம் 2வது வெள்ளிக்கிழமை வழிபாடு
மருதாணி இலைகளை போட்டு இப்படி ஆண் அல்லது பெண் நீங்கள் உங்களுக்கு உரிய தெய்வங்களை வேண்டி பிரார்த்தித்துக் கொள்ளும் போது, எப்பேர்ப்பட்ட திருமண தடைகளும் நீங்கும் என்பது நியதி. நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை ஆறு வாரங்களுக்கு தொடர்ந்து செய்து வாருங்கள். யாருக்கு திருமண தடை இருக்கிறதோ, யாருக்கு நல்ல வரன் அமைய வேண்டுமோ அவர்கள் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அவர்களுக்காக மற்றவர்களோ அல்லது பெற்றோர்களும் செய்தால் பலன் இல்லை என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள மறக்காதீர்கள்.