- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுபேர கிரிவலம் செல்லும் முறை

குபேர கிரிவலம் செல்லும் முறை

- Advertisement -

தீவிர சிவபக்தனாக திகழக்கூடியவர் குபேர பகவான். குபேர பகவான் சிவபெருமானை நினைத்து தவமிருந்ததால் தான் அவருக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைத்தது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குபேர பகவான் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது. அந்த நாள்தான் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பிரதோஷ நாள். தேய்பிறை பிரதோஷ நாளன்று குபேர பகவான் திருவண்ணாமலை வந்து சிவபெருமானை வழிபட்டதாகவும் அதற்கு மறுநாள் திருவண்ணாமலை கிரிவலம் வந்ததாகவும் கூறப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலம் வந்த பிறகுதான் திருப்பதிக்கு சென்று பெருமாளிடம் இருந்து அசலையும் வட்டியையும் வாங்கினார் என்றும் கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளாக திகழக் கூடியது தான் நவம்பர் மாதம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை. அன்று இரவு சூட்சுமமான ரூபத்தில் குபேரர் திருவண்ணாமலை கிரிவலம் வருவார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் நாமும் திருவண்ணாமலை கிரிவலம் வந்தோம் என்றால் குபேர பகவானின் அருளால் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்று கூறப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் குபேர பகவானின் அருளை பெறுவதற்கு குபேர கிரிவலம் எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

குபேர கிரிவலம் செல்லும் முறை

வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து 11 ரூபாய் காணிக்கையாக எடுத்து வைக்க வேண்டும். மூன்று 11 ரூபாயை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று சிவபெருமானுக்கும், மற்றொன்று திருப்பதி ஏழுமலையானுக்கும், மூன்றாவது குலதெய்வத்திற்கு. இதில் சிவபெருமானுக்காக எடுத்து வைத்திருந்த 11 ரூபாயை எடுத்துக் கொண்டுதான் திருவண்ணாமலைக்கு கிரிவலம் மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் குபேரருக்கு உகந்த பச்சை நிற ஆடையை அணிந்து கொண்டு கிரிவலம் மேற்கொள்ள வேண்டும்.

அன்றைய நாளில் நாம் கிரிவலம் மேற்கொள்ளும் பொழுது குபேர லிங்கம் இருக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்து வலம் வந்து மறுபடியும் குபேரலிங்கத்தில் நிறைவு செய்யும் பொழுது அந்த 11 ரூபாய் காணிக்கையை குபேர லிங்க உண்டியலில் சேர்த்து விட வேண்டும். அன்றைய தினத்தில் சூட்சுமமான ரூபத்தில் குபேர பகவான் கிரிவலம் வருவார் என்று கூறப்படுவதால் நாம் கிரிவலம் செல்லும் பொழுது மிகவும் நிதானத்துடன் செல்ல வேண்டும். யாரையும் திட்டக்கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும். யாரையும் எந்தவித கஷ்டமும் படுத்தாமல் செல்ல வேண்டும்.

- Advertisement -

இந்த கிரிவலத்தை மேற்கொள்ளும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை நினைத்துக் கொண்டு நாம் கிரிவலம் மேற்கொள்ளக்கூடாது. அப்படி நம்முடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று நினைத்து கிரிவலம் வந்தோம் என்றால் அந்த கஷ்டங்கள் இன்னும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. எந்தவித வேண்டுதலும் இல்லாமல் சிவபெருமானை மட்டுமே தியானம் செய்து கொண்டு கிரிவலம் வர வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

இவ்வாறு கிரிவலம் வந்த பிறகு மூன்று மாதத்திற்குள் திருப்பதிக்கு சென்று நாம் பெருமாளை நினைத்து எடுத்து வைத்திருந்த 11 ரூபாய் காணிக்கையை அவருடைய உண்டியலில் சேர்க்க வேண்டும். அதேபோல் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுதும் அந்த குலதெய்வத்திற்காக எடுத்து வைத்த காணிக்கையை உண்டியலில் சேர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:ராகு காலத்தில் சாம்பிராணி புகை

அதி அற்புதமான நாளான நவம்பர் மாதம் 29ஆம் தேதியை தவறவிடாமல் அருகில் இருப்பவர்கள் திருவண்ணாமலை சென்று கிரிவலம் மேற்கொண்டு குபேர பகவானின் அருளை பரிபூரணமாக பெற்று நிறைவான செல்வத்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்