நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு விதமான தீர்வுகள் என்பது இருக்கும். அந்த தீர்வுகளை கண்டறிந்து முயற்சி செய்தால் தான் அந்த பிரச்சினையில் இருந்து நம்மால் வெளியில் வர முடியும். அந்த வகையில் பிறரிடம் இருந்து வாங்கிய கடன் தொகையை திருப்பித் தருவதற்குரிய முயற்சிகளை செய்தும் அந்த முயற்சிகள் வெற்றியடையவில்லை என்று வருத்தப்படுபவர்கள் மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். டிசம்பர் மாதத்தில் வரக்கூடிய மைத்ரேய முகூர்த்தத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
டிசம்பர் மாத மைத்ரேய முகூர்த்தம்
ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மைத்ரேய முகூர்த்தம் என்பது வரும். ஒரு மாதத்தில் இரண்டு முறையோ, மூன்று முறையோ வரும். அந்த மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்தி நாம் தெய்வ வழிபாட்டுடன் கடன் பிரச்சினை தீர்ப்பதற்குரிய வழியையும் மேற்கொள்ளலாம். பொதுவாகவே ஒரு சில குறிப்பிட்ட நாட்களில், நட்சத்திரங்களில், நேரங்களில் நாம் வாங்கிய கடனை திருப்பித் தர முயற்சி செய்தோம் என்றால் அந்த கடன் விரைவிலேயே தீரும் என்று கூறப்படுகிறது. அப்படி கடன் தீருவதற்கு உகந்த முகூர்த்தமாக திகழ்வதுதான் மைத்ரேய முகூர்த்தம்.
இந்த மைத்ரேய முகூர்த்தம் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியே வருகிறது. காலையில் 5:49 மணியிலிருந்து 8:08 மணி வரை இந்த மைத்ரேய முகூர்த்தம் இருக்கிறது. இந்த மைத்ரேய முகூர்த்தத்தில் நாம் யாரிடம் இருந்து எவ்வளவு கடன் வாங்கினோம் என்பதை ஒரு வெள்ளை நிற கவரில் சிவப்பு நிற பேனாவை பயன்படுத்தி எழுத வேண்டும். பிறகு அதிலிருந்து அசல் தொகையாக தங்களால் இயன்ற தொகையை எடுத்து அந்த கவருக்குள் வைக்க வேண்டும். அதனுடன் சிறிது பச்சை கற்பூரத்தையும் சேர்த்து வைத்து மனதார விரைவிலேயே இந்த கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
இயன்றவர்கள் இந்த நேரத்தில் அசல் தொகையையோ அல்லது வட்டிக்குரிய பணத்தையோ திருப்பி செலுத்துவதன் மூலமும் விரைவிலேயே அவர்களுடைய கடன் பிரச்சனை தீரும் என்று கூறப்படுகிறது. நேரில் கொண்டு சென்று தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை. இன்றைய நவீன உலகத்தில் பல வழிகளில் பணத்தை செலுத்த முடியும் என்பதால் ஏதாவது ஒரு வழியில் அசல் தொகையை அல்லது வட்டியையோ செலுத்தலாம். அப்படி செலுத்த முடியாத பட்சத்தில் நாம் கவரில் இந்த முறையில் பணத்தை எடுத்து வைத்து எந்த நேரத்தில் கட்ட வேண்டுமோ அந்த நேரத்தில் கவரில் இருக்கும் பணத்தை சேர்த்து வைத்து கட்டுவதன் மூலமும் கடன் பிரச்சனை என்பது தீரும்.
பிரம்ம முகூர்த்தத்திலேயே இந்த மைத்ரேய முகூர்த்தமும் வருகிறது என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமையோடு வருவதால் சூரிய பகவானுக்குரிய சிறப்பான வழிபாடுகளை மேற்கொண்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்த பிறகு இந்தத் தொகையை எடுத்து வைப்பது இன்னும் அதீத பலனை தரும். இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்து விட்டு இந்த தொகையை எடுத்து வைக்கலாம்.
இதையும் படிக்கலாமே:மாங்கல்ய பலம் பெற குங்குமம்
டிசம்பர் மாதம் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய இந்த மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக் கொள்பவர்களுடைய வாழ்க்கையில் விரைவிலேயே கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.